கனிமொழி கருணாநிதி விபச்சார அரசியல் தேர்தல் நாடகம்

அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !

கனிமொழி நடிக்கும் கருணாநிதியின் "இலங்கைத் தூதரகம்"படப்பிடிப்புகள் ஆரம்பம்!

இந்திய மீனவர்கள் கைதால் இலங்கை தூதரகம் முற்றுகை! கனிமொழி கைது! இந்தவருட சிறந்த நடிகைக்கான விருதை எதிர்பார்க்கிறாராம்

இந்தியா மீனவர்கள் கைது செய்யப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, காரைக்கால் மீனவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருவதுடன், இலங்கை தூதரகத்தின் முன் திராவிட முன்னேற்ற கழகத்தினர் இன்று போராட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

யாழ்.வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு 112 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் கரைக்கு அழைத்துவரப்பட்டதை அடுத்து பருத்தித்துறை பொலிஸார் அவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திமுக எம்பி கனிமொழி உள்ளி்ட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் ‌தொடர்கதையாகி வருவதை கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுகவினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர். இதன்காரணமாக, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவும் தேர்தல் திரைப்படத்துக்கான தி.மு.க. ஒத்திகையே

ஈழதேசம்

---------------------------------------------

நேற்றைய தினம் யாழ் கடற்பரப்பில் வைத்து சுமார் 108 இந்திய மீனவர்களைத் தாம் கைதுசெய்துள்ளதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு யாழ் மீனவர்களும் தமக்கு உதவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் மீனவர்களின் வலைகளை அறுப்பது, ரோலர்களில் மீன்பிடிப்பதில் ஈடுபடுவதால் மீன் வளங்கள் அறவே அற்றுப் போகும் நிலை காணப்படுவதாக யாழ் மீனவர்கள் இந்திய மீனவர்கள் மீது தொடர் குற்றங்களைச் சாட்டி வந்தனர். இருப்பினும் இலங்கை அரசானது டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களை இம் மீனவ சமூகத்திடையே ஊடுருவச் செய்து சில நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

தாய் தமிழகத்தில் இருக்கும் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மீனவர்களோடு யாழ் மீனவர்கள் பேசி இப் பிரச்சனையைத் தீர்த்திருக்கலாம். இல்லை தீர்க்க முற்பட்டிருக்கலாம். ஆனால் எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றி அதில் குளிர்காய நினைப்பது இலங்கை அரசின் நோக்கம் அல்லது. இது இந்திய அரசின் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சதிப் பின்னல். அதாவது தமிழ் நாட்டுத் தேர்தல் நெருங்கிவரும் வேளை அங்கே தி.மு.க மற்றும் காங்கிரஸின் செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ளது. அத்தோடு என்றுமில்லாதவாறு மீனவர்களின் பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. இதனால் தமிழ்நாடு கரையோர மாவட்டங்கள் அனைத்திலும் தி.மு.க தனது ஆசனங்களை இழக்க நேரிடும் நிலை ஏற்கனவே தோன்றிவிட்டது.

இதனைச் சரிசெய்து, மீனவர்களிடம் தன்னை ஒரு நண்பன் எனக் காட்ட கருணாநிதி காங்கிரஸ் கூட்டுச் சதியே இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததாகும். ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை டக்ளஸ் கோஷ்டி ஊதிப் பெரிசாக்க, யாழ் மீனவர்களை உசுப்பிவிட்டு, தற்போது அவர்கள் இலங்கை கடற்படையினரின் உதவிகளை நாடவைத்தும் உள்ளனர். அவர்களும் ஏதோ காவல் தெய்வங்கள் போல உடனே புறப்பட்டுச் சென்று மீனவர்களை கைதுசெய்தும் உள்ளனர். சமீபத்தில் யாழில் பல பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. அதாவது என்ன பிரச்சனை என்றாலும் படையினரை அணுகவும் என்றும் அவர்களே உங்களுக்கு எல்லாவற்றையும் செய்வார்கள் என்பதும் ஆகும்.

தற்போது சொல்லிவைத்தது போல இன்று கருணாநிதியின் மகள் கனிமொழி போராட்டங்களில் இறங்கியுள்ளார். மீனவர்களை விடுவிக்கவேண்டுமாம். இனி இதனை வைத்து கருணாநிதியின் கட்சி காலத்தை ஓட்டும். தமிழ் நாடு தேர்தல் நடக்கவிருக்கும் ஓர் இரு தினங்களுக்கு முன்பாக அந்த 108 மீனவர்களையும் சொல்லிவைத்தது போல இலங்கை விடுவிக்கும். அப்போது மீனவ சமூகத்திற்கு விடிவுதேடித்தந்த ஜயா கலைஞர் வாழ்க! என கோஷமிடுவார்கள். மீனவரின் விடுதலைக்கு வித்திட்ட செம்மல் ஜயா கலைஞர் என்பார்கள். அத்தோடு கரை ஓரக் கிராமங்களின் வோட்டுகளைக் குவிக்கமுடியும். ஜயா கலைஞரே நீங்கள் நரி என்றால் நாங்கள் பனம் காட்டு நரி, உங்கள் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்.

இத்தனை வருடங்களாக யாழ் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என கட்டளை இட்டது இலங்கைக் கடற்படை, பல ஈழ மீனவர்களைச் சுட்டதும் இலங்கைக் கடற்படை, மீனவர்கள் கடலுக்குச் சென்றது அவர்கள் வீடு புகுந்து பெண்களைக் கெடுக்க நினைத்ததும் இந்த இலங்கைக் கடற்படைதான், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்கள் அகதிகளாகச் செல்லும்போது, குழந்தை குட்டிகள் படகில் இருக்கிறார்கள் என்றுகூடப் பாராமல் 50 கலிபர் துப்பாக்கியால் சுட்டு உடல்களை சின்னாபின்னமாக்கியதும் இந்த இலங்கைக் கடற்படைதான். இவர்களோடு கூட்டுச் சேருவதா? இதனைவிட நாண்டு கெட்டுச் சாகலாம். எனவே இந்த மாய வலைக்குள் இருந்து முதலில் யாழ் மீனவர்கள் வெளியே வரவேண்டும். கடலில் மீன் பிடிப்பது ஒன்றும் ஹிந்திக்காரன் அல்லவே. தமிழன் தானே. எனவே தமிழில் பேசலாம்.

முதலில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதே எமக்கு பலம்சேர்க்கும். இப் பிரச்சனையை அரசியல் நோக்கோடு பலர் அணுகுவதால் யாழ் மீனவர்கள் ஆனாலும் சரி இந்திய மீனவர்களானாலும் சரி பேசி முடிவு எடுப்பதே நல்லது.

அதிர்வின் ஆசிரியபீடம்.




15.02.2011 news

கடந்த சில மாதங்களாக இந்திய மீனவர்கள் யாழ் கடற்பகுதிகளில் அத்துமீறி நுளைந்து இயந்திர இழு படகுகள்(ரோலர்) மூலம் மீன் பிடித்துவருவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இழு வலைகளை உபயோகித்து மீன் பிடிப்பதன் மூலம் அப்பகுதிகளில் மீன் வளம் அறவே அற்றுப்போகும் நிலை தோன்றும் அபாயம் உள்ளதாகவும், இந்திய மீன்பிடி படகுகள் யாழ் மீனவர்களின் வலைகளை அறுத்துச் செல்வதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இச் சம்பவங்களைப் பயன்படுத்தி, தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் யாழ் மீனவர்களுக்கும் இடையே ஒரு கலகத்தை உண்டுபண்ண இலங்கை சதிசெய்து வருகிறதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற இலங்கை அரசுக்குச் சொல்லிக்கொடுக்கவா வேண்டும் ?

யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் பிரதேச மீனவர்களின் வலைகள் உட்பட கடற்றொழில் உபகரணங்களை சேதப்படுத்திய இந்திய தமிழக மீனவர்கள் 108 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்திகளும் அங்கிருந்து கிடைக்கப்பெறுகின்றன். குறித்த மீனவர்கள் இன்று மதியம் பருத்தித்துறைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் என்றும். இது தொடர்பாக பிரதேச மீனவர்கள் பொலிஸ் மற்றும் கடற்படைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து கடற்படை, பொலிஸ் மற்றும் பிரதேச மீனவர்கள் இணைந்து பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மாலை7.00 மணி வரைக்கும் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் தொண்டைமானாறு தொடக்கம் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் வைத்து 108 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய 18 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தில் நாகப்பட்டினம், காரைக்கால் பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதாவது தமிழக தொப்புழ்கொடி உறவுகளான தமிழ் மீனவர்களோடு பேசித் தீர்க்கவேண்டிய இப் பிரச்சனையை, இலங்கை கடற்படையினரின் உதவியோடு கைதுசெய்வது ஒரு பொருத்தமில்லாத செயலாக உள்ளதோடு, இலங்கை அரசு யாழ் மீனவர்களிடையே ஊடுருவி இவ்வாறானதொரு ஒற்றுமைச் சீர் குலைவை ஏற்படுத்தி பிராந்தியத்தில் பதற்றத்தைத் தோற்றுவிக்க முனைவது தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. பல தடவைகள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று இலங்கை இராணுவம் தமிழ் நாட்டு மீனவர்களைக் கொலைசெய்துள்ளது. அப்படி இருக்கும்போது தற்போது நூற்றுக்கணக்கில் அவர்களைக் கைதுசெய்துள்ளது, தமது செயல்களை ஞாயப்படுத்தவே இவ்வாறு செய்கிறது என்ற ஒரு தோற்றம் பெற்றுள்ளது.

தமிழ் நாட்டு மீனவச் சங்கங்களும், யாழ் மீனவச் சங்கங்களும் உடனடியாக பேசி இதற்கு ஒரு தீர்வைப்பெற முயற்ச்சிக்கவேண்டுமே தவிர எந்த ஒரு பகுதியும் சிங்கள கடற்படையினரின் உதவிகளைப் பெறக்கூடாது. வீடு ரெண்டுபட்டால் பகையாளிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதைப்போல இந்த நிலையும் ஆகிவிடக்கூடாது.

Comments