காமாரஜர் வாழ்க்கையைப் படமாக்கி, பெரும் பாரட்டுப்பெற்ற இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் அவர்கள் தற்போது "முதல்வர் மகாத்மா" என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்றைய சூழலில் காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை கருவாக வைத்து முதல்வர் மகாத்மா படம் உருவாகியுள்ளது. இன்றைய இளையோர்களோடு காந்தி எவ்வாறு பேசுவார், அவர்களை எவ்வாறு வழி நடத்துவார் என்பதும், மற்றும் இன்றைய அரசியல்வாதிகளோடு அவர் எவ்வாறு காய்நகர்த்துவார் என்பதும் படமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அவரைச் சந்தித்த தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை காந்தியடிகள் எவ்வாறு கையாள்வார். மற்றும் தமிழீழப் போராட்டம் குறித்து காந்தி என்ன நினைத்திருப்பார் என்பது போன்ற காட்சிகளும் இப்படத்தில் பதிவாகியுள்ளது. கடற்கரை ஒன்றில் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மெய்ப்பாதுகாப்பாளர்களோடு நிற்பதுபோலவும், அவரை காந்தியடிகள் வந்து சந்தித்து பேசுவதுபோலம், ஒரு கட்டத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கையில் இருக்கும் துப்பாக்கியை அவர் வாங்கிப் பார்வையிடுவதுபோலவும் காட்சிகள் தத்துரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படம் வெளிவர இருக்கும் நிலையில் தணிக்கைக்குழு, இக் காட்சிகளைத் தணிக்கைசெய்வதற்குப் பதிலாக முழுப்படத்தையும் தடைசெய்துள்ளது. இதனை அடுத்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேர்கொண்ட குழு ஒன்று இப் படத்தைப் பார்த்து, தடையை நீக்கியுள்ளதோடு, தேசிய தலைவர் பிரபாகரன் வரும் காட்சிகளையும் அனுமதித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. எனவே இப் படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
![](http://athirvu.com/phpnews/images/thalivargandi1.jpg)
![](http://athirvu.com/phpnews/images/thalivargandi2.jpg)

![](http://athirvu.com/phpnews/images/thalivargandi3.jpg)
Comments