சுஜித்ஜீ, சந்தோஸ் மற்றும் திசாந்தன் ஆகியோரின் கூட்டு முயற்சியால் , நேர்த்தியானவகையில் உருவாக்கப்பட்ட இந்த இசைத்தட்டின் வெளியீட்டு நிகழ்வில், பல சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் , மக்கள் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
உலகத் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட, இசைபோராளி சுஜித்ஜீயின், மூன்றாவது இறுவட்டு இதுவாகும்.
‘வாழ்வும் வரும்..சாவும் வரும்..’,
‘பொறுத்ததுபோதும் பொங்க வேணும்..’ போன்ற பாடல்கள்,
இறுதிப்போர் காலத்தில்,அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் மீது, பெரும் தாக்கத்தையும், போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எந்தக் கலைவடிவமும் மக்களுக்கானதாய் அமையும் போதே ,அப்படைப்பு வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதற்கு, சுஜித்ஜீயின் இசைப்பாடல்கள் எடுத்துக்காட்டாக அமைவதாக , இந்நிகழ்வில் உரையாற்றிய பலர் எடுத்துக் கூறினார்.
15 பாடல்கள் அடங்கிய இவ் ஒலிப் பேழையிலிருந்து, ‘கோழை’ என்கிற அற்புதமான பாடல் காணொளி ,முழுமையாக ஒளிபரப்பப்பட்டது.
இறுதியாக , இசைப்பேழையினை உருவாக்கிய படைப்பாளிகள் , நிகழ்விற்கு வருகை தந்திருந்த மக்களோடு , தமது அனுபவங்களையும், உணர்வுகளையும் பகிந்து கொண்டனர்.
Comments