தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை....! பிரச்சனைக்கு தி.மு.க.வே காரணம்...

தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அரசியல் நோக்கம் கொண்டவை என்று மிகச் சரியாக சொல்கிறார் இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன. அத்துமீறிய செயற்பாட்டினால் எமது மீனவர்கள் பொறுமை இழந்துள்ளனர் என்கிறது அரசாங்கம் என்று கோபமாக தெரிவித்தார். இந்த அமைச்சர் கோபப்படுவதில் விசனப்படுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. பிறகென்ன மகிந்தாவுடன் ரகசியமாக நட்பு வைத்துக் கொள்வது.வெளியில் மகிந்தா ராஜபக்சே அவர்களை எதிர்ப்பதைப் போல் பாவலா காட்டினால் கோபம் வராதா என்ன..?
http://www.vinavu.com/wp-content/uploads/2009/05/karunanithi.jpg
இலங்கை யுத்தத்தில் இருந்து என்னென்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் தமிழக அரசியல் கட்சிகள் என்று அவருக்கு தெரியாதா..? இப்பொழுது சொல்கிறார் அத்துமீறிய செயற்பாட்டினால் எமது மீனவர்கள் பொறுமை இழந்துள்ளனர் என்று.பின் என்ன இந்திய பாராளுமன்றக் குழு அதாவது தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்று வந்தனரே பல டீ எஸ்டேட்கள் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக இருக்கலாம் என்று தெரிந்ததினால் இவ்வாறு கோபம் கொள்கிறாரோ இந்த மீன்வள அமைச்சர் என்று கருத வேண்டி உள்ளது.அதாவது எமது நாட்டு மீனவர்கள் பொறுமை இழந்த நிலையிலேயே இவ்வாறு இந்திய மீனவர்களை சுற்றிவளைத்து போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது.இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்தால் கைது செய்யப்படுகின்றனர்.இது ஒரு வழமையான நடவடிக்கை என்கிறார்.

வடமராட்சி கடற்பரப்பில் அண்மையில் பிரவேசித்த இந்திய மீனவர்கள் 112 பேரை சுற்றிவளைத்து இலங்கை மீனவர்கள் உதவியுடன் கைது செய்யப்பட்டமை சட்டம் சம்மந்தப்பட்ட விசயம் என்று கூறுகிறார்.சட்டம் சம்மந்தப்பட்ட விசயமா...? அப்படி என்றால் ஏன் ஐயா சுட்டுக் கொல்கிறீர்கள்...? இதேவேளை கடந்த காலங்களில் இந்திய மீனவர்கள் அத்துமீறிய நிலையில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றமை தொடர்பான செய்மதி புகைப்படங்கள் மற்றும் ஏனைய ஆதாரங்களை நாங்கள் இந்திய வெளியுறவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம்.

இவற்றை இந்திய உள்துறை/வெளித்துறை உயர் அதிகாரிகளிடம் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவுக்கு வழங்கிய நிலையில் அவர் அந்த ஆதாரங்களை இந்திய பிரதமருக்கும் காட்டியிருந்தார்.இறுதியில் அவை தமிழக முதல்வரின் அவதானத்துக்கும் சென்றது.அப்படி ஒன்றும் இலங்கையில் பெறப்பட்டதாக மன்மோகன் சிங்-ம், கருணாநிதியும் ஒன்றும் சொல்லவே இல்லையே.கடப்பாறையை முழுங்கியவர்கள் போல அல்லவா இருக்கிறார்கள் இதுகாறும். மேலும் இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயத்தை முன்வைத்து தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை.. என்ன...அரசியல் நோக்கம் என்று சொல்கிறார்களே என்று பார்த்தால், இலங்கைக்குள் பிரவேசித்த அதிகளவிலான படகுகள் தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பெரும்பாலான அரசியல்வாதிகளுடைய படகுகள் என்று போட்டு உடைத்து விட்டார் உண்மையை.

அப்படியென்றால், டி.ஆர்.பாலு, கனிமொழி, திருமா போன்றவர்கள் காங்கிரஸ் பெருச்சாளிகள் ஹசன் அலி, ஜே.கே.ரித்திஸ் போன்ற இவர்களுக்கு எவ்வளவு இயந்திர படகுகள் வைத்திருக்கிறார்கள்..? சென்னையில் ஆட்டோ பினாமியாக இருக்கிறார்களே முழு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்..அதுபோல மீன்பிடி படகுகளில் முதலீடு செய்து உள்ளார்கள் என்ற உண்மையை இந்த மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னே இப்பொழுது சொல்லி விட்டார். இவர் மட்டும் சொல்லவில்லை இந்த மீன்பிடி விசயங்களை. ஜே.வி.பி. பகிரங்கமாக குற்றம் சுமத்துகிறது தி.மு.க. வின் மேல்.

அப்பாவி மீனவர்களைப் பலி ஆடுகளாக்கி தமிழகத்தின் தி.மு.க. தேர்தல் லாபம் ஈட்டுவதற்கு முயற்சிக்கின்றது.தி.மு.க.வே தமிழக மீனவர்களை இலங்கை கடலுக்குள் அனுப்பி பிரச்சனைகளை உண்டு பண்ணியுள்ளது. இவ்வாறான கேவலமான கீழ்த்தரமான செயற்பாடுகளை கைவிடுமாறு தி.மு.க. தலைவர்களை எச்சரிப்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், இலங்கை அரசும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும் ஜே.வி.பி. கூறியுள்ளது. மேலும் கூறுகையில், தமிழகத்தில் தேர்தல்கள் நெருங்கியுள்ளமையால் அரசியல் லாபம் கருதி இவ்வாறு சூழ்ச்சிகரமான திட்டங்களை வகுத்து தி.மு.க. அரசியல்வாதிகள் செயற்பட்டுள்ளதுடன் அங்குள்ள மக்களை திசை திருப்புவதற்காக பாரிய ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். தி.மு.க. அரசாங்கம் அப்பாவி மீனவர்களைப் பயன்படுத்தி தேர்தல் லாபம் பெறுவதற்கு முயற்சிக்கின்றது.

மேலும் ஜே.வி.பி. கட்சியினர் இவ்வாறு வேறு கூறியுள்ளமை நம்மை எல்லாம் நிறைய சிந்திக்க வைத்துள்ளது.அதாவது இந்திய பிரதமர் மேற்படி மீனவர் விவகாரம் தொடர்பில் இவ்வாறு கடுமையானதும் எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுப்பதுமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ( நமக்கு தெரிந்து பல வருடங்களாக இல்லை. எப்பொழுதுமே இலங்கை அரசுக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதே கிடையாதே...பிறகு எப்படி இந்த ஜே.வி.பி. கட்சியினர் கூறுகிறார்கள். ஒருவேளை இதைதான் ஜே.வி.பி. அரசியல் என்று சொல்லுவதோ...? ) அது எமது நாட்டின் இறைமைக்குப் பாதகமானது. எமது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அதிகாரமோ அருகதையோ ...( நம்மையே மிரட்டி விட்டார்கள் மிரட்டி...அருகதை கிடையாது என்று எதை வைத்து சொல்கிறார்கள் இந்த ஜே.வி.பி.யினர்.. ஒருவேளை ஏதாவது பயங்கரமான உண்மை தெரியுமோ அவர்களுக்கு...? ) இது போன்ற கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மன்மோகன் சிங் அவர்களை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறி உள்ளனர் ஜே.வி.பி.யினர்.

இந்த ஜே.வி.பி.யினர், மீன்பிடி அமைச்சர் சொல்லுவதைப் பார்த்தால், தமிழக கடல் பகுதிகளில் நிற்கும் அணைத்து எந்திர படகுகளும் தி.மு.க. காங்கிரஸ், பா.ம.க. திருமா க்ரூப் போன்ற கட்சிகளில் உள்ள மாவட்டம், வட்டம், ஒன்றியம் அப்புறம் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் அமைச்சர் கூட்டங்களின் படகுகளா...? அப்போ கடலில் மீன்பிடி படகுகளில் செல்லுபவர்கள் வெறும் கூலிக்கு மாரடிக்கும் மீனவனா...? மறைந்த அல்ல கொல்லப்பட்ட 'நாம் தமிழர் முத்துக்குமார்' அவர்கள் ஒரு பத்து நாளைக்கு முன்னர் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களை சந்தித்து ஒரு பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக மூன்று நான்கு நாட்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் சொன்ன கருத்துக்கள் தான் நிறைய யோசிக்க வைத்துள்ளன.

படகு உரிமையாளர்கள் ஒருபோதும் கடலுக்கு செல்வதில்லை. படகுகளை குத்தகைக்கும், பிடிக்கும் மீன்களில் இவ்வளவு சதவீதம் கூலியாக உழைப்புக்கும், இன்னும் சிலர் சம்பளத்திற்கு மீனவர்களை அமர்த்தி மீன் பிடிக்க வைக்கிறார்கள், மேலும் தொடர்ச்சியாக கொல்லப்படும் மீனவர்கள் குறித்து கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை இந்த படகு உரிமையாளர்கள் கூட்டம் என்றார்.
கட்டுமர சங்கம், வலை இழுப்போர் சங்கம், எந்திர படகுகள் சங்கம், அந்த ஊர் மீனவ சங்கம், இந்த ஊர் மீனவ சங்கம், அந்த சாதி மீனவ சங்கம், இந்த சாதி மீனவ சங்கம் என்று சுமார் ஆயிரக்கணக்கான சங்கங்களை வைத்துக் கொண்டு, மீனவர்களை அம்போ என்று பலி ஆடுகளாக மாற்றி வைத்துள்ளனர் என்றார் நாம் தமிழர் முத்துக்குமார்.

இவை மட்டும் அல்லாமல், கிறித்துவ மிசினரிகளும் - ஏராளமான தன்னார்வக் குழுக்களும் இயங்கி வருகின்றன. இவர்கள் எல்லோரும் ஒன்றாக கூட்டு சேர்ந்து எதற்கு வேலை செய்கிறார்கள் என்றால், தமிழக மீனவனை தமிழக மக்களிடம் இருந்து கலக்காமல், அதாவது மீனவ இனங்களை மீனவ குடிகளை மற்ற சமூகங்களிடம் இருந்து பிரித்து வைக்கவே அயராது கண் துஞ்சாது அரும் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போதாது என்று சுய உதவிக் குழுக்கள் வேறு. இவை தாண்டி அரசியல் கட்சிகளின் சங்கங்கள். உண்மையிலேயே பாவப்பட்ட இனம். தமிழக மீனவ இனம். மீனவ மக்கள். பிறகு கொல்லப்படும் மீனவனுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லாத அவல நிலை. சீமான் குரல் கொடுக்கிறார்..அதனால் தான் முத்துக்குமாரை பலியிட்டு சீமானை மிரட்டி வைக்கிறது இந்த படகு உரிமையாளர்கள் சங்கம் அதாவது படகு பினாமிகள்.

பெயருக்கு கனிமொழி கைது செய்யப்படுகிறார். திருமா ராஜபக்சே கொடும்பாவி எரிக்கிறார். சீமான் மட்டும் உள்ளே போய் களி திங்க வேண்டும் மாதக்கணக்கில்...! என்ன நாடகம்..? கனிமொழி தாயார் தயாளு அம்மையார் அவர்களின் ஆஸ்தான ஜோதிடர் அவர்கள் ஒரு கணிப்பை சொல்லி இருந்தாராம். அதாவது இந்த லக்கினத்தில் உள்ள குருவும், பனிரண்டாம் கட்டத்தில் உள்ள கேதுவும் முறைத்துக் கொண்டதால் கனிமொழி அம்மையார் கைது செய்யப்படுவார் என்று அடித்துக் கூறி இருக்கிறார்.

தயாளு அம்மையார் உடனே பதறிப்போய் என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் இந்த 112 மீனவர்கள் யோசனை தோன்றியதாம். ஒரே கும்பலாக படகுகளை ஓட்டி நேராக இலங்கைக்கே சென்று விட்டார்களாம் இவர்களும். பிறகு நடந்தவை அனைவரும் அறிந்ததே..உடனே போராட, முறைப்படி கைது செய்யப்பட்டு அந்த ஜோதிட கணிப்பை தகர்த்து உள்ளனர். ஆனால் வசதியாக ஒன்றை மறந்து விட்டார்கள். இது ஜோதிட தகர்ப்பு இல்லை என்பதை. நீங்கள் ஏமாற்றியது ஜோதிட கணிப்புகளை. இதற்கும் சேர்த்து பெரிய விசயமாக தண்டனையாக ஏதுவும் நடந்து விடப்போகிறது...? என்ற ஐயம் தான் நமக்கு தோன்றுகிறது.

சங்கிலிக்கருப்பு
ஈழதேசம்

Comments