நேற்று முன்தினம் மாலை முதல் தீருவிலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த புகழுடலுக்கு மக்கள் நேரில் சென்று தமது அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாள் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அஞ்சலி நிகழ்வில் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், அரியநேத்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.
இந்தியாவில் இருந்து பழ. நெடுமாறன், வைகோ, சீமான் மற்றும் நோர்வேயில் இருந்து ஈழத்தமிழர் பேரவை உறுப்பினர் ஆகியோரின் அஞ்சலி உரைகள் நேரடியாக தொலைபேசி மூலம் நிகழ்த்தப்பட்டது.
பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் புகழுடல் அவரது மகளின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியது அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் அன்னாரின் புகழுடல் தீயுடன் சங்கமாகியது.
பலத்த இராணுவத்தினர் பிரசன்னமாகியிருக்கும் நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரான பார்வதியம்மாவின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் நடைபெற்றது. இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினர் பலரும் அங்கு பிரசன்னமாகியிருந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு தேசத்தின் அன்னைக்கு தமது இறுதி மரியாதைகளைச் செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வில் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், அரியநேத்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பலர் உரையாற்றினார்கள். இந்தியாவில் இருந்து பழ. நெடுமாறன், வை.கோபலாசாமி, சீமான் மற்றும் நோர்வேயில் இருந்து ஈழத் தமிழர் பேரவை ஆகியவர்களின் அஞ்சலி உரைகள் நேரடியாக தொலைபேசி மூலம் நிகழ்த்தப்பட்டது.
பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் அவரது மகளின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இறுதி ஊர்வலம் சுமார் 2.30 மணியளவில் வல்வெட்டித்துறை பருத்தித்துறை வீதியூடாக ஊறணி இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படு அக்கினியுடன் சங்கமமாகியது. வரலாற்றுத் தாயின் இறுதிக் கிரிகைகளில் கலந்துகொண்ட அனைத்து மக்களுக்கும் தேசிய தலைவரின் அண்ணா திரு மனோகரன் அவர்கள் தனது குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWxo0ejCRy1xcstr-qcVEiabwIpFZ1EPVsdUptez38GuCCp2wTr-VEKWh5gr2NfDHShbvf-Q8aTDwZjwxssRzADHEuQ9zM2XLsNzveQii0rjz4Mk-Loh7saCthsS_-vQFbR6hzf4AXm0hT/s1600/a1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHQ4PbFHycv1IHNaXWDujq5DhBdhNdQ2FtLUFWm0oARpDKb2v-s7FoixCaGz9am0eBHvMNxkB_aQxeAEGCTtJqNUJY2hIVICkf7v-jNrgKM7ueb6M5IvJhrYFqkOHUvy7Pmvc5B0-mmT37/s1600/a2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjezwHAw7jidorQs2nYGmnxv5-DLS9fM6_s1x7jB3Qr1qjyzIDV9cGhmrnkl23eP2DAlcxAlE0u0xkqAeiiyZQAk52_2cQsjRASvaOJgt2Kdaln31Ftdi2xOy6zVhLdC0Ed-TnZdr4QRT10/s1600/a8.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmVVt8UgsMruVtbv1tpAgjmNYdWzg10YLw69Djsn8nqvPf3LovEdxNUA7XogLfCZiQCCrHpcV54l88RZxTifcggvh8A4bdChPRq7-DvrPqJxhjxbntA3hyphenhyphen_kS54EjkmdAc3cC5S_5II_Xe/s1600/a17.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAIggQSKGxW2Kv02ya735Nr5juXUa9EWCbnerX7nU9Nky_3wlc5brCc2X0AvtgcNjc-RYNUd9v9RZRrAtD0b6DYdLi3-ES82pz5iJjf0-r5ToxRdn0p-7qKRLwjNEgt4GCHj1jiLfZ-kgc/s1600/a18.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNuWDjogr2-_setjb5_60pi-O37RDL20WpQWkoJ2W5QExoy0a4CI-TZYKcEbrwua2fjR5JxDRR9YSRJSivIqoEz9DF-HmK2y8GsxAyB_3bI4pTdvS1Ji1RBIuCkd3FaDKMpVLGxMOA-OoC/s1600/a20.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_KD1canAjcbt8Ntys9pm7Knd-VEsumWX0t8ku2azlMjv3tFkZ80mxiulLTwXWrzCvCkKrdl0CwuG979qA_9CxNCHntS2W7xgS-ELAGxlXY5vrR_759uUee6FrsI1IY3284xnkkfAPlnJ_/s1600/a21.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikB_lb53IXQw6fy2HibGpaixyDcsmHKGVSC3qnfQrxi-QWEhx2czrbLJUU_NhFnjNDypMdY7nh2GS8Aft51ZKxQZDJGbd3a__jxzoVf3GOMuqvM2_jiABXLdKLZ9D6kFIT3QVveSyB1Od-/s1600/a23.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghL7fTpx6yv69D6OJxhaITe_FAwOLYdhHLVeDGrIduWcXSQEKzoE0AqStIUEULQjlpA2R92BSsAF-39TpRHzKUpRrTnR1QpioFNPDVwj6WZJSBUbejKEplDbpGRqnRqmGMmW0xTSG4HZpW/s1600/a24.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjloi0F3gWnuWbZLf1fAcdqVYGu9PzjhZRazqkfU7pNCCoOa7NzXnmGZccnx8T68m8JyYqJ8dsDlL3FVsoBZVIqcYqKkrCU52dEW7Lepbgff1NadOS-vl4DoS7scCbK1_OV22HN05qABl0X/s1600/a25.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeTP119H9BofHVZeagGzp2hsGCCZVhyphenhyphen4GpQ6vGw2rImBQeYazDcfKcZ-SOl3hMa-saPni7bDxREmpIKUV22PDnCeK0dWOMLK1CNotq7QTlr6agBL7Zh2GYpP08_Wxf-vgetwI9m8W1qMLi/s1600/a26.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJpLo9IcpJM_9l7QnkmLTb3GsdI3BmrJZuJaV-l3am0lzE5y1KYcf58_zJfS0OeKiRJTC8H6ch2AxV5wEKvUPB_lOwTVmbr8jWaiW5i9dnRk0HwxcWl1aqLnjAl6OqCtvvEkiUjptq_TfT/s1600/a27.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnuHJhWRxuCjoow_L9pdrL6VtgHlUlTNxBVDGDJeeISzecvOW1wvvYVRx9Dd2BEZbR4UwJPzdIFHZSMKOwkYBwm2LHJ9UaANgiNfL7QePnr0Vh0K0mAIDz3io-Mie2VJHogNLCAgZbICge/s1600/a28.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZK4dneEUdZfN7c2VZqXpsA1EjjQvnk3zjLav97HiZcdWQwNwczE6Hb44BNgx5_qZlmwnjoiuiIB7Pfe6qaTDBFuZv61PNTR4ZPillCj0FQ3gYlZmOUG9Wpf8SXCFI4sNRsqOViKc3tVdI/s1600/a29.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGw_L1wBvgdIqGki4pT5rCVY16gYo5ff0QuYtq1f_KtIpDqqgsj7j87B_1Jzlsin4FmryKhR9Xf2CcbXYRvV3GdNCVHm8iv0k1aVYkvgoUD1vtW2-D9VUsCFIFgXvnyrKBRqdWyrRj8PEc/s1600/a30.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAgs8LTtOyO_uF6MoPuL9lyzjMIdap-oLFZR3RP-vUpl9EC9zpp4m25mgbvg6QD2gg9egO_CGN4sHh8oI_2Wg0Z5C-Y5R5H0yl-_4wT-FqvZ4xhT4aZJ-eXPNqIDiAttiWaFet5A6PELCr/s1600/a31.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp8REeLqm3x263Kjrc-zyhiZLn3dX6fq-IyBzybNym0e6IvxPf4pXDrHGpPKdiE3p7ABlY2ZUUKTjMwnYKfmvnGKT1d_AyDVyBCIvXAJY-SMIFpaUiy08MVYGAUG4wp9Pb7EH650Z0tLn0/s1600/a32.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDvvu_FcMPUxKgRiLueIBwCyF51idYgc6PxSt5_hIzO01YVRwHk-8fgJpuCbeJxf8xxH-jH3GIztVYAHHI72AEOr8y-XxEYQKqWHbvzg0wHxo0whoHfhX1jCFKVnNOnY86Ea0WXpt90yFr/s1600/a33.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCLk3SUyDZJIJSH7sYkSVZ4qiEAP0md5TlpvFqP_3v0-mtBNJ-CiQUhvHeyblzdv6TggJqURAh4e4_Hbo_C2gpDLMkhyphenhyphenJ323ytKCYeU2Tb-prUGxQEZwRLhZFkRtsn6Txwzyb6aw_nbIi3/s1600/a34.jpg)
Comments