தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திண்டுக்கல் ஐ.லியோனியின் பட்டிமன்ற நிகழ்வு எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோனியும் அவரது குழுவினரும் இணைந்து நடத்தும் நகைச்சுவைப் பட்டிமன்றம் 17ஆம் திகதி பிற்பகல் 03மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும், 18ஆம் திகதி மாலை 5மணிக்கு நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சமாதான காலப் பகுதியில் புலம்பெயர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக லியோனி அழைக்கப்பட்டிருந்தார். அதனை அவர் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் அவருக்கான பயணத்துக்கான நிதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.
பணத்தினைப் பெற்றுக்கொண்ட லியோனி புலம்பெயர் நாடுகளில் தான் பங்குகொள்ளவிருந்த நிகழ்வுகளில் சேகரிக்கப்படும் பணம் விடுதலைப்புலிகளைச் சென்று சேரும் என்பதால், அந்த நிகழ்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக பகிரங்க அறிவிப்பினை விடுத்திருந்தார் என்று தெரியவந்துள்ளது.
அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த பட்டிமன்றம் ஒன்றில் பங்கெடுக்கச் சென்றிருந்த திண்டுக்கல் ஐ.லியோனி யாழ்ப்பாணம் செல்லாமல் கொழும்புடனேயே திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments