நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கடந்த பிப். 15 ம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் மர்மமாக நின்ற ஒருகாரை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரில் ரத்தக்கரையுடன் அறிவாள்கள் இருந்துள்ளது. இது இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இறந்த முத்துக்குமாரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் திரண்டிருக்கும் பகுதியான புதுகை அண்ணா சிலை அருகே முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
முத்துக்குமார் தமிழ்தேசிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அர்பணித்துக்கொண்டவர். கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்புப் பணியினால் சிறை சென்றபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரை சந்தித்தேன்.
மக்களால் நன்று அறியப்பட்ட ஒரு தொண்டனுக்கு இத்தனை கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. காரணம் யார்?. கண்டுபிடிக்காமல் இருப்பது காவல் துறையின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு காவல் துறை முத்துக்குமாருக்கு பல்வேறு வழக்குகளை பதிந்தது. அவர்களின் மெத்தனப்போக்கினால் இந்த விபரீதமும் நடந்துவிட்டது. உடனே, இவ்வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

Comments