பார்வதியம்மாளின் தகன மேடை சிதைக்கப்பட்ட சம்பவத்துக்கு அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம்

http://eeladhesam.com/images/breaking/anaiththulaka-uudakam.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் வே.பார்வதியம்மாளின் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்த சாம்பலைக் கிளறி எறிந்து நாய்களைச் சுட்டுப் போட்ட அநாகரிகமான செயல் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் பார்வதியம்மாளின் உடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உடல் தகனம் முடிந்து உறவினர்கள் வீடு திரும்பிய பின்னர் நள்ளிரவில் இனந்தெரியாத நபர்கள் அந்த இடத்தை அநாகரீகமான முறையில் கேவலப்படுத்தியிருந்தனர்.

சாம்பல் மேடு கிளறி எறியப்பட்டிருந்ததுடன் அதன் மீது மூன்று நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வீசப்பட்டிருந்தன.

நேற்றுக்காலை தகனம் செய்யப்பட்ட இடத்தில் சமய ரீதியான சடங்குகளைச் செய்யச் சென்ற உறவினர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று அனைத்துலக ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றுள்ளது.

வொசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அனைத்துலக ஊடகங்கள் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன.

இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இதை யார் செய்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று சிவாஜிலிங்கம் கூறியதாக வொசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் அரசியலில் ஈடுபடாத போதும் போரின் முடிவில் அவர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தாகவும் வொசிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.

அனைத்துலக ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியாகியிருப்பது சிறிலங்கா அரசுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

Ashes of Sri Lanka rebel chief's mother desecrated


By KRISHAN FRANCIS
The Associated Press
Wednesday, February 23, 2011; 9:26 AM

COLOMBO, Sri Lanka -- The ashes of the mother of Sri Lanka's former rebel leader have been desecrated hours after her body was cremated, a relative said Wednesday.

Kanagalingam Sivajilingam said the incident took place Tuesday night, shortly after slain rebel leader Velupillai Prabhakaran's mother was cremated in his native village of Valvettithurai.

Sivajilingam said relatives who visited the cremation site Wednesday to collect the ashes found them scattered and three dead dogs with bullet wounds lying nearby.

"This a barbaric act. I won't say who did it, but everybody knows who they are," Sivajilingam said.

Killing and dumping dogs, which are considered lowly and unclean, is an expression of contempt for the dead person.

Prabhakaran led the Tamil Tiger rebels during a quarter-century civil war that ended with their defeat and his death in May 2009. The rebels were seeking a separate state for ethnic minority Tamils, claiming discrimination from majority Sinhalese.

Prabhakaran's parents were not involved in politics but were arrested by the military days after the war ended.

After the death of Prabhakaran's father in detention last year, his mother Parvathi was released and spent her last year in hospitals under Sivajilingam's care.

The military, which has a large presence in the Tamil-majority north, has been accused of destroying monuments and rebel graves in an attempt to eliminate every trace of the rebels.

http://www.washingtonpost.com

Comments