மெருகூட்டப்பட்ட சுப.தமிழ்ச்செல்வன் சிலை மீண்டும் அதே இடத்தில்

பிரான்சில் கடந்த நவம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்ட பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசின் புறநகரான லாகூர்நெவ் நகரசபைக்கு அருகில் தமிழ்ச்செல்வனின் 3வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்ட இச்சிலை, மெருகூட்டுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் சிலை கடந்த வாரம் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது தெரிந்ததே.




Comments