யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கும் மின்னல்குழுவினரை இனங்கட்டு செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கி மக்களிடம்பணப்பறிப்பு மற்றும் கொள்ளை கடத்தல் படுகொலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மின்னல்குறுப்பினரின் பெயர் விபரங்கள் சில வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் நெல்லியடியினை சேர்ந்த வரதன், கார்த்தி, சாருஜன், றஞ்சித், பிரகாஸ், கீதன் உள்ளிட்ட இருபது பேர் வரையிலானவர்களுக்கு சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்களிடம் இருந்து கபிலன் என்பவர் நிதியினை பெற்றுக்கொடுப்பதாகவும், இவர்கள் ஒரே மாதிரியான 18 கறுப்புநிற பல்சர் உந்துருளிகளில் நடமாடித்திருவதாகவும், நெல்லியடியில் உள்ள சிறீலங்காப்படையின் திருமகள்சோதி படைபுலனாய்வு முகாமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல கொலைகள் கொள்ளைகளுடன் இவர்கள் தொடர்பு பட்டுள்ளமை வெளிவந்துள்ளது இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்மக்கள் இவர்களை இனங்கட்டு செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments