எகிப்தில் நடைபெற்ற போராட்டத்தை மிகப்பெரியளவில் பார்த்திருக்க வேண்டியது தமிழினமே. இந்த விடயத்தில் வெறும் ஈழத் தமிழர் மட்டுமல்ல, கோடிக்கணக்கான தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டையும் சேர்த்தே நோக்க வேண்டும்.
உலகத்தில் மீது கோடான கோடியாக கொட்டிக் கிடந்தும் சுயநிர்ணய உரிமை இல்லாது வாழத் தலைப்பட்டுள்ள தமிழினத்திற்கு எகிப்தில் நடந்த நிகழ்வு ஒரு சவுக்கடி. தனது கால நாகரிகம் கொண்ட ஒரு நாட்டில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஒழுங்குபடப் பார்த்திருந்தால் அந்தச் சவுக்கடியின் ஆழம் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்திருக்கும்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் உலகில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் என்று அறிஞர்கள் வர்ணிக்கும் ஒரு போராட்டமாக எகிப்திய மக்கள் போராட்டம் அமைந்திருக்கிறது. புதுமாத்தளனில் சிக்குண்டு தமிழீழ மக்கள் 18 தினங்கள் முக்கிய அழிவுகளை சந்திக்க, இங்கோ மக்கள் 18 நாட்களில் ஒரு மாற்றத்தையே நிகழ்த்தியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் போராடியும் நடக்க முடியாதுபோன விடயம் இன்று எகிப்தில் நடந்துள்ளது.
இந்த மாற்றம் எப்படி நடந்தது, எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது என்பதை அறிய வேண்டிய கடமையும், பிரக்ஞையும் தமிழ் மக்களுக்கே அதிகம் இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கு இதன் மகத்துவத்தையும் வழிகளையும் எடுத்துரைத்திருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ் அரசியல் தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஊடகங்களுக்கும் இருந்தது, ஆனால் அவர்கள் அதை சரிவர செய்தார்களா?
கேள்வி நெஞ்சை ஊடுருவிப் பாய்கிறது.
ஈழத்தில் தேர்தல் பற்றி பேசும் தமிழ் அரசியல் தலைவர்களின் வாயிலிருந்து இதுபற்றி ஒரு குரல் வரும் என்று கடந்த 18 தினங்களாக காத்திருந்தோம். ஒரு தலைவர்கூட இந்தப் பாணியில் நாம் சிந்திக்க வேண்டுமென குரல் தராமல் போனது அதிர்ச்சி தந்தது. அதுபோல தமிழ் ஊடகங்களும், அறிவுசார் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் இந்த விடயத்தை தமிழ் மக்களுக்கு சரிவர உணர்த்தத் தவறியிருக்கிறார்கள். ஐ.தே.கவில் இருந்து மட்டும் சில குரல்கள் கேட்டன, அவர்களைப் பாராட்ட வேண்டும்.
தமிழகத்தில் ஸ்பெக்ரம் ஊழல், ஆட்சி மாற்றம் பற்றி கதைக்கும் ஜெயலலிதா, கேப்டன் பட்டம் சூட்டிக் கொண்ட விஜயகாந்த், டாக்டர் பட்டம் சூட்டிக் கொண்ட ராமதாஸ், தொல். திருமாவளவன், வை.கோ, மானத் தமிழன் சீமான் போன்றவர்கள் கூட இதுபற்றி யாதொரு குரலும் தந்ததாகத் தெரியவில்லை. வெறும் உள்ளுர் அரசியலும், உணர்ச்சிப் பேச்சுக்களுமாக குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுவதைத் தவிர நாம் மக்களை எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு எகிப்தை அடிப்படையாக வைத்து ஒரு பதிலை இதுவரை அவர்கள் தரவில்லை..
இந்தக் கட்டுரையை எழுதும் போது எகிப்து பற்றி மேலும் பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எகிப்தில் நடைபெற்ற 18 நாட்கள் மக்கள் போராட்டத்தில் அதிபர் முபாரக் பதவி விலக ஏன் தாமதம் செய்தார் என்ற கேள்விக்கான பதில் வெளியாகியுள்ளது. அவர் பதவி விலகத் தாமதித்த ஒவ்வொரு நாளும் தனது சொத்துக்களை நாட்டில் இருந்து இடம் மாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்.
சுவிஸ் வங்கியில் மட்டும் 220 மில்லியாட் டேனிஸ் குறோணர்கள் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் டென்மார்க் மீதம் பிடிக்கத் தெரியாது முக்குளிக்கும் தொகை வெறும் 24 மில்லியாட் குறோணர்களே. இதை நான்கு வருடத்தில் மீதம் பிடிக்க முயன்று, பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளார்கள். முழு ஸ்கன்டிநேவியன் நாடுகளையும், வங்குரேத்து அடைந்த கிரேக்கத்தையும் முபாரக்கின் சுவிஸ் பணத்தில் மட்டும் ஒரே நாளில் மீட்டெடுத்திருக்க முடியும். முப்பதாண்டுகளாக அங்கு அவர் நடாத்திய ஆட்சியின் இலட்சணம் இதுதான்.
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 83 வருடங்கள் குருட்டுத்தனமான இராணுவ சர்வாதிகார ஆட்சி, ஜனநாயகம் என்ற போலியான வாக்கெடுப்பின் அடிப்படையில் அங்கு நடாத்தப்பட்டுள்ளது. எகிப்தில் இப்போது கிடைத்துள்ள மக்கள் வெற்றி முழுமையானது அல்ல என்றாலும் மக்களை ஆட்சிக்கு விட்டு, அதற்கு அடுத்தபடியாக இராணுவம் இருக்கும் என்ற இடத்திற்கு வந்துள்ளமை மாபெரும் வெற்றியாகும்.
மக்களை காசு கொடுத்து லாரிகளில் மந்தைகள் போல ஏற்றுவதும், அரசில்வாதிகள் பைத்தியக்காரதனமாக உளறுவதாலும் தமிழகத் தமிழ் கண்ட மிச்சம் என்ன ?. தமிழகத் தலைவர்கள் கூட்டும் கூட்டங்கள் மலைப்பை தருகின்றன, இந்த மலைப்பு தலைவர்களின் திறமைக்காக அல்ல, மக்கள் சக்தி ( தமிழ்ச்சக்தி ) எப்படி நாசமாகிறது என்ற மலைப்பாகும்.
மக்கள் சக்தியை ஒன்று கூட்டுவது சாதனையே கிடையாது, அதை சரியான இலக்கை நோக்கி நகர்த்தி, அறுவடை செய்யத் தலைவர்கள் தெரிந்திருக்க வேண்டும். முன்னர் ஈழத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வால் இப்படியொரு செயலை செய்திருக்க முடியும். அதற்கு பொறுப்பாக இருந்த பேராசிரியரை டென்மார்க்கில் சந்தித்து, ரஸ்யாவில் பொறிஸ் ஜெல்ற்சின் நடாத்திய பொங்குதமிழ் போன்ற ஊர்வலத்தைக் குறிப்பிட்டு, எப்படி ஆட்சியை மாற்றினார் என்ற விடயத்தைப் பேசினோம். இதுபோல பொங்குதமிழை ஏன் இறுதி வெற்றிக்குள் நகர்த்தவில்லை என்றும் கேட்டோம். அதற்கு ரஸ்யாவில் நடைபெற்ற நிகழ்வை தாம் அறிந்திருக்கவில்லை என்ற பதிலை அவரிடமிருந்து பெற முடிந்தது. அதுமட்டுமல்ல மக்கள் போராட்டத்தின் மூலம் தீர்வை எட்டுவதையும் பலர் விரும்பாமல் இருந்ததையும் உணர முடிந்தது.
இத்தனைக்குப் பிறகும்..
நாளுக்கு நாள் சடலங்கள் கிணற்றில் கிடக்கின்றன, வெள்ளை வான் வருகிறது, சி.ஐ.ஏ உளவு விமானம் போல மக்களைப் பிடித்துப் போகிறது. போரில் ஓர் இனமே கூண்டோடு கைதாகியிருக்கிறது. அவர்களை விடுவியுங்கள் என்றாவது ஒரு மக்கள் போராட்டம் நடந்ததா ? இனத்திற்கு தலமை தாங்கப் போகிறோம் என்று, வந்துள்ள தலைவர்கள் அழைப்பு விடுத்தார்களா… ? தலைவர்கள் என்று கூறுவோர் மக்களை ஒன்றிணைத்து ஜனநாயக ரீதியில் தமது கருத்துக்களை பதிவு செய்ய முடியாமல் பிளவுபட்டுக் கிடப்பது ஏன்.. ? இதுதான் யதார்த்தமென்றால் ஏன் நீங்கள் அரசியல் களத்தில் இன்னமும் நிற்க வேண்டும்.. ? இப்படியான தொடர் கேள்விகள் நெஞ்சை எரித்து ஈட்டிபோல பாய்ந்து செல்கின்றன.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் தமது கடமையை செய்கிறதா என்றால் அதுவும் இல்லை என்றே கூறவேண்டும். ஈழத்தில் ஒரு மாற்றம், நியாயமான தீர்வு மக்கள் போராட்டத்தால் மட்டுமே மலரும். அங்கு வாழும் மக்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதை தமது ஒன்றிணைவால் உணர்த்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களுக்கு அது கிடைக்க உலக சமுதாயம் கணிசமாக உதவும். புலம் பெயர் நாடுகளில் அதை ஆதரித்து மட்டும் போராட்டங்களை நடாத்தலாம்.
சில வருடங்களுக்கு முன் வெளியான செய்தி..
எகிப்தில் கிடைத்த சில மண்பாண்டங்களில் தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன என்பதாகும். பிரமிட்டுக்களை அமைத்த பணியில் ஈடுபட்டிருந்த கணன், சாதன் என்ற இரு தமிழர்களின் பெயர்கள் கிடைத்துள்ளதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன. எகிப்தில் உருவான நாகரிகத்தில் தமிழனும் இணைந்தே இருந்தான் என்ற வரலாற்றுக்கு இது முக்கிய சான்றாகும்.
தமிழ் கடலில் அமிழ்ந்தபோது எகிப்தியர்கள் அங்கே நின்றுள்ளார்கள். அமிழ்ந்த இனம் பற்றிய செய்தி ஏடுகள் எகிப்திலேயே இருக்கின்றன. ஆதிகாலத்திலேயே எகிப்தோடு இணைந்தோடிய தமிழ் நாகரிகம் பகல் குருடாகிப் போனது எப்போது..? என்ற கேள்வியை எழுப்புகின்றன கணன், சாதன் என்ற இரு தமிழ்ப் பெயர்களும்.. தமிழ் செம்மொழி என்று கூறுவோர் ஒரு செம்மொழியால் மக்களை சரிவர செதுக்க முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும் ஒப்பு நோக்க எகிப்து நல்ல உதாரணமாகும்.
செம்மொழி கையில் இருந்தால் அதன் மூலம் மக்கள் அறிவு சரியாக உருவாக்கப்படுவது இலகு அதைச் செய்துள்ளோமா..? சிந்திக்க வேண்டிய கேள்வி.
இனியாவது எகிப்தில் நடைபெற்ற நிகழ்வு தமிழ் மக்கள் மத்தியில் கவனமெடுத்துப் பேசப்பட வேண்டும். மக்கள் போராட்டம் புலம் பெயர் நாடுகளில் அல்ல முதலில் தாயகத்தில் மலர வேண்டும்.
அன்று…
எகிப்தின் பிரமிட்டுக்கள் பிரமிக்க வைத்தன..
இன்று எகிப்தில் நடந்த போராட்டத்தால்.. எகிப்திய மக்களும் பிரமிக்க வைக்கிறார்கள்…
இதைவிட பெரியதோர் போராட்டத்தை நடாத்தி உலகை பிரமிக்க வைத்த ஈழத் தமிழன் எகிப்தைப் பார்த்து விழித்தெழ வேண்டும். இன்றைய தகுதி குறைந்த தலைவர்களையும் வழிகாட்டிகளையும் தூக்கிவீசிவிட்டு புதுமையாக சிந்திக்க வேண்டும்.
எகிப்தின் நைல்நதி ஒவ்வொரு தமிழன் மனதிலும் பெருக்கெடுக்க வேண்டும்..
அலைகள் 14.02.2011

Comments