புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து பல கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன, ஆனால் இதுபற்றி யாரும் வெளியில் சொல்லாததால் மக்கள் இன்னமும் விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர்.
தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் நபர்கள் உங்களுக்கு தாயகத்தில் இருந்து பொதிவந்துள்ளது, உங்களுடன் உங்கள் மகன் அல்லது மகளைப் பற்றி கதைக்க வேண்டும், உங்களுக்கு அதிஷ்ட இலாப சீட்டில் பணம் கிடைத்துள்ளது என்று கூறி கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். பகலில் வீட்டில் உள்ளோரை முடிந்தளவு வெளியேற்றிவிட்டு பின் தமது கைவரிசையை காட்டுகின்றனர்,சில சந்தர்ப்பங்களில் வீடுகளில் யாராவது இருந்தால் அவர்கள் கட்டி வைத்துவிட்டு வீடுகளில் கொள்ளையிடப்படுகிறது. யார் செய்கிறார்கள் எதற்காக செய்கிறார்கள் என்று காவல்த்துறையாலே கண்டுபிடிக்கமுடியவில்லை என காவல்த்துறையும் கைவிரித்துவிடுகிறது. மிகவும் இலாவகமாக கைரேகைகள் பதியாமல் சத்தமின்றி வீடுகளின் கதவுகள், அடுக்குப்பெட்டிகள்(locker) என்பன திறக்கப்படுகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா என தமிழர்கள் வாழும் நாடுகளில் இக்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. தமிழர்கள் தங்க ஆபரணங்கள் அதிகமாக அணிவதால் கொள்ளையர்கள் தமிழர்களின் வீடுகளில் தமது கைவரிசையை அதிகம் காட்டுகின்றனர் என்கின்றனர் காவல்த்துறையினர்.
இக்கொள்ளை சம்பவங்கள் குறித்து மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் உங்களுக்கு தெரியாத நபர்களின் தொலைபேசி அழைப்புக்கள், இணைய செயற்பாடுகள், அறியாத நபர்களுடனான உரையாடல் என்பவற்றின் போது மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும். முக்கியமாக உங்களுக்கு அறிமுகமில்லாத நபர்களுக்கு உங்களைப்பற்றிய எந்த விபரங்களையும் கொடுக்க வேண்டாம்.
வங்கித்தரவுகள், வீட்டு முகவரி ,கைத்தொலைபேசி இலக்கம் என முக்கிய விபரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களுக்கு தரப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை சிறந்த முறையில் உறுதிப்படுத்தியபின் அதைப்பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள், உங்கள் முக்கிய ஆவணங்கள், பொருட்களை பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி பாதுகாத்து கொள்ளவும் சாத்தியமான வழிகள் உண்டென்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம். இக்கட்டுரை உங்களை பயமுறுத்தவன்றி முன்னெச்சரிக்கையாக இருக்கவே எழுதப்படுகின்றது.
ராஜேஸ்
(விடுதலை பெற்ற தமிழ் ஈழத்தில் சந்திப்போம்.."தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்")

Comments