வெள்ளம் வருமுன் அணைகட்டுங்கள் (யேர்மனியில் நடந்த ஒரு சம்பவம்)
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து.(முட்கள் நிரம்பிய மரத்தை சிறு செடியாக இருக்கும் போதே வெட்டி எறிக,அவ்வாறன்றி அச்செடி முதிர்ந்து மரமான பின்பு அதைக் களைந்து வெட்ட விரும்புபவர்களை அதன் முட்கல் குத்தி வருத்தும்)
அந்தக் குரலின் உண்மைத் தன்மையை அறியத் தவறின் மீண்டும் நாம் ஒரு பேரவலத்தை சந்திக்க நேரும்.இன்று தாயகத்தில் எமது உறவுகள் படும் துயரங்களை புரிந்து புலத்தில் சிலர் தாமாகவே முன்வந்து அவர்களுக்கு நேரடியாக உதவுகின்ற நிலையைப் பார்க்கிறோம்.சிலர் ஒருசில அமைப்புக்கள் ஊடாக உதவி புரிந்தாலும் அந்த உதவி உரியவர்கள் இடம் சென்று அடைகிறதா என்று கவனமாக செயல்ப்படுகிறார்கள்.
தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் மனநிலை வளர்ந்து வரும் நிலையில் சிலர் சுயநலத்துடன் அதைச் செய்கின்றேன்,இதைச்செய்கின்றேன் என்று பணம் தன் வாழ்வையும் பலப்படுத்தி தன்னை ஒரு தமிழீழப் பற்றாளனாக காட்ட முற்படுவதையும் காண்கின்றோம்.
இனி நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை பார்ப்போம் யேர்மனியில் கைல்புறேன் நகரில் ஒரு கடவுளின் துனை என்றும் ஒரு ஊரின் பெயரையும் குறிப்பிட்டு உறவுகளுக்கு உதவத் துடிக்கும் நபர்களிடம் சென்று நான் தமிழீழம் செல்கிறேன் அங்கே மாவீரர்களின் குடும்பங்களுக்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவப் போகிறேன் என்று சொல்லி பணத்தைப் பெற்றுச்சென்று அங்கு சில உதவிகளை செய்து அதை படம் பிடித்து காட்டுவதில் ஈடுபட்டுள்ளார்.இன்னும் சில படங்களுடன் இங்கு வந்து பாரிய தொகையை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.
இவர் விதவைகளுக்கு புடவைகள் எடுத்து கொடுத்தாராம்,அவர் எடுத்துக்கொடுத்ததும் உண்மையே(பெற்ற பணத்தில் ஒரு தொகைக்கு)
ஆனால் யாரால் அவர்கள் விதவையாக்கப்பட்டார்களோ,ஊனமாக்கப்பட்டார்களோ யாரால் இன்று பாரிய தும்பங்களுக்கு ஆளாகினார்களோ அதற்கு காரணமான டக்ளஷ் தேவானந்தாவுடன் அவர் அனலைதீவு என்னும் கிராமத்தில் பாடசாலை ஒன்றில் கைகோர்த்து நிற்கின்றார்.அந்த ஊர் மக்களுக்கு இன்று இவரால் தான் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கின்றது என்றும் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்றும் பிரச்சாரம் செய்யவும் தவறவில்லை.இதை அறிந்த பணம் கொடுத்த மக்களின் மனம் புண்பட்டுள்ளது.
ஜயா சமூக சேவையாளரே விதவைகளுக்கு உதவியதாக கூறுகிறீர்களே அவர்களை விதவையாக்கிய துரோகியுடன் கை கோர்த்து நிற்பது என்ன நீதி?பாதிக்கப்பட்டவர் யாராக இருப்பினும் அவர்களுக்கு யார் உதவினும் சந்தோஷமே.நான் ஈழ விடுதலையைக் காட்டிக் கொடுத்தவருடன் சேர்ந்து செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செய்யுங்கள்,எதற்கு மாவீரர்களையும் ஈழ விடுதலையையும் துணைக்கு இழுக்கிறீர்கள் உங்களைப் போன்றவர்களின் உதவி இன்று உணவைக் கொடுத்துவிட்டு நாளை அவர்களை எதிரி ஊரோடு அழிக்கும்போது கைகட்டி நின்று அந்த ஈனச்செயலுக்கு துணை போவீர்கள் என்று எமக்கு தெரியும்.வேழ்விக்கு வளர்க்கும் ஆடுகளைப் போல் எமது மக்களை நடத்தாதீர்கள்.
இந்த பாடசாலை விழாவை ஒழுங்கு செய்த ஒருவர் பரிஷில் பிரபல்யமானவர்(கல்விக்கு பொறுப்பாக இருந்தவர்)அனலைதீவு பாடசாலை பழைய மாணவர்களிடம் இருந்து பணம் பெற்று இந்த விழாவை நடத்தியுள்ளார்.
ஒற்றைக்காலில் நின்று டக்ளஷ் தேவானந்தா தான் பிரதம விருந்தினராக வரவேண்டும் என்று பல மாதங்களாக காத்திருந்து அதை அரங்கேற்றியுள்ளார்.இதை அறிந்த பழைய மாணவர்கள் அவர் மீது கவலையும் கோபமும் கொண்டுள்ளனர்.இவர்களைப் போல் பலர் இருக்கலாம்,தயவு செய்து இனங்காணுங்கள்.செய்யும் உதவி சரியாக செல்கிறதா என்பதை பலதடவை ஆய்வு செய்யுங்கள்.
குற்றம் செய்தவரை விட குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்கள் தான் ஆபத்தானவர்கள்,ஆகவே இவர்களை குற்றம் செய்ய தூண்டிவிட்டு பின் புலம்புவதில் எந்தப் பயனும் இல்லை.வெள்ளம் வரும் முன் அணை கட்டுங்கள்.
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு (கத்திபோலத் தம்மைக் கொல்வதற்கு நேரிடையாகத் தோன்றும் பகைவர்களைக் கண்டு அஞ்ச வேண்டுவதில்லை.ஆனால் அன்பு கொண்டவர்கள் போல் நடித்து நமக்கு மறைவாகத் தீமை செய்யும் நண்பர்களிடம் அச்சம் கொள்க)
ஈழதேசத்தின் பின் குறிப்பு:
குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நிகழ்வில் பங்குகொண்ட நபரின் புகைப்படங்கள் எம்மிடம் உள்ளன.தேசியத்தின் பெயரைச் சொல்லி மீண்டும் இவர் இவ்வாறாக நிதி திரட்டி துரோகிகளுடன் உறவாடுவாரேயானால் இவர் தொடர்பான மேலதிக தகவல்களுடன் புகைப்படமும் பிரசுரிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
துரோகிகளை இனங்கண்டு ஒன்றாக இணையுங்கள்.
இப்படிக்கு ஈழப்பிரியன்

Comments