சென்னை சிறையில் இருக்கும் சிங்கள மீனவர்களின் கழிவறையை கூட தமிழர்கள் தான் சுத்தம் செய்கிறார்​கள்! (காணொளி, படங்கள்)

சென்னை சிறையில் இருக்கும் சிங்கள மீனவர்களின் கழிவறையை கூட சிறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் தான் சுத்தம் செய்கிறார்கள். சிங்கள மடம் தாக்கப்பட்டது என்பது வருத்ததிற்குரிய செய்தியல்ல, மகிழ்ச்சியான செய்தியே!.

காலம் காலமாக சிங்களவர்களால் கொல்லப்பட்டு வந்த தமிழக மீனவர்கள் 538 பேரை இழந்த பிறகு இப்பொழுதுதான் முதல் முறையாக திருப்பி அடித்திருக்கிறார்கள்.

சென்னை சிறையில் இருக்கும் சிங்கள மீனவர்களின் கழிவறையை கூட சிறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் தான் சுத்தம் செய்கிறார்கள்.

இந்திய தேசிய கொடியின் வண்ணத்தில் உருவாக்கப்பட்ட காலணிகளை சிங்கள மீனவர்கள் அணிந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் இலங்கை இந்தியாவிற்கு கொடுக்கும் மரியாதையா?

சிங்கள மீனவர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் தமிழக அரசாங்கம் செய்து கொடுக்கிறது. அவர்களது பாதுகாப்பிற்கு ஏதேனும் ஊறு ஏற்பட்டால் இந்திய அரசாங்கம் நேரடியாக தலையிடுகிறது.

சென்னை புழல் சிறையில் அரசரை போன்று அனைத்து வசதிகளோடு சிங்கள மீனவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பழங்கள் முதற்கொண்டு அனைத்து வகையான உணவு பொருட்களும் இலங்கை தூதரகத்திலிருந்து நாள்தோறும் வந்து கொண்டு இருக்கின்றன.

அதே சிறையில் சந்தேகத்தின் பேரிலும், சிறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருக்கும் இலங்கை குடியுரிமை பெற்ற தமிழர்களையும், மீனவர்களையும் இலங்கை தூதரகம் கண்டு கொள்வதில்லை.

தமிழக சிறப்பு ஏதிலிகள் முகாமில் இருக்கும் ஈழத் தமிழர்கள் ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டடிகளை விட கேவலமான இடத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

538 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது வராத இலங்கை தூதர், சிங்கள மடம் தாக்கப்பட்டவுடன் ஓடி வருகிறார்கள். எங்கள் நாட்டு எல்லைக்குள் தமிழக மீனவர்கள் வந்தாலும் தாக்க மாட்டோம் என உறுதி கூறுகிறார்கள். இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசூர்யா நிகழ்வை ரத்து செய்கிறார்.

இந்திய அரசாங்கம் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக நாடகமாடுகிறது. நாங்கள் சிங்களவனை கொல்லவில்லை. மடத்தை தாக்கியதற்கே சிங்களம் பதறுகிறது. லட்சக்கணக்கான எம் உறவுகளை கொன்று குவிக்கும் போது கூட இந்தியா பதறவில்லையே இலங்கை அஞ்சவில்லையே?

மடத்தில் இருந்த சிங்களவர்கள் மீது அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்துகிறார்கள் என்றவுடன், பொய் வழக்கில் எங்களை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைக்கின்றனர். சிங்களவனுக்கு ஆபத்து என்றவுடன் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசாங்கம், எம் மீனவன் கொல்லப்படும் போழ்து கடிதம் எழுதுவதோடு நின்று விடுகிறதே.

தேர்தல் வருகிறது என்றவுடன், சிங்களப் படையால் எம் மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டு வீட்டிற்கு பிணம் வருவதற்குள் தமிழக அரசின் பணம் போய் சேருகிறதே. ஐயா இந்த வேகத்தை எங்களை காப்பாற்றுவதில் காட்டக் கூடாதா? என்று பாண்டியன் தந்தை தமிழக அரசை பார்த்து கேட்டாரே இதற்கு விடை உண்டா?

இந்த தாக்குதலை நடத்த தூண்டியவர்கள் யார் என்று காவல்துறையினர் எங்களை பார்த்து கேட்டனர், அதற்கு சிங்களவனும், தமிழக அரசும், இந்திய அரசாங்கமும் எங்களை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்ததால் தான் என்று உறுதி படக் கூறினோம்.

தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (இணையதள செய்தியாளர்)



Comments