சுவிசில் முத்துக்குமார், முருகதாஸ் ஆகியோரின் நினைவாக முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன

சுவிற்சர்லாந்தின் சூரிச் மானிலத்தில் 26-02-2011 (ஞயிற்றுக்கிழமை) மாலை லெப். கேணல் கௌசல்யன், உட்பட அவருடன் வீரச்சாவடைந்த போராளிகள், ஈகைப்பேரெளிகளான முத்துக்குமார், முருகதாஸ், உட்பட தமிழினவிடுதலைக்காக தீயில் தங்களின் உயிர்களை உருக்கியூற.றிய பதினேழு தியாகிகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் வே. புpரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மாவையும் நினைவுகூர்ந்து வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிற்சர்லாந்துக் கிளையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடரேற்றி, தேசியக் கொடியேற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி, மேற்குறிப்பிட்டவர்களின் திருவுருவப்படங்களிற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞசலியும் செலுத்தப்பட்டது.

இந்தநிகழ்வின் சிறப்பம்சமாக ஈகைப்பேரெளிகளான முத்துக்குமார், முருகதாஸ் ஆகியோரின் நினைவாக முத்திரைகள் வெளியிடப்பட்டன.

இதனை சுவிற்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினர் வெளியிட்டு வைத்தனர். இந்த முத்திரைகளை சுவிற்சர்லாந்தின் அஞசல் அனுப்புவதற்காகப் பயன்படுத்த முடியும். இதன்மூலம் தமழிர் பற்றிய அரசியல் நிலைப்பாட்டையும், தமிழினத்தைக் காப்பதற்காக தியாகம் செய்த தியாகிகளையும் ஏனைய இனத்தவர் அறிந்து கொள்ள வாய்ப்பாகின்றது.

Comments