தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்.

எமது தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.

ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத் தேசத்தின் அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

கடும் நோயால் பாதிக்கப்படு இருந்த பார்வதி அம்மாளை, மலேசிய சென்று சிகிச்சை பெற இலங்கை அரசு அனுமதித்தது. இருப்பினும் அவர் இந்தியா சென்று சிகிச்சை பெற முயன்றவேளை கருணாநிதியின் அரசாங்கம் அவரை ஒரு நோயாளி என்று கூடப் பாராமல் திருப்பி அனுப்பியது எல்லோருக்கும் நினைவில் இருக்கும். என்னை ஏன் கருணாநிதி ஜயா திருப்பி அனுப்பினார் என்று எனக்குத் தெரியவில்லை என பார்வதி அம்மா தெரிவித்திருந்தார். அதுவே அவர் ஊடகங்களுக்கு கொடுத்த கடைசிப் பேட்டியாகவும் இருந்தது.

http://puliveeram.files.wordpress.com/2009/10/p3.jpg
எமது தேசிதலைவரைப் பெற்றெடுத்த அன்னை என்பதால் நாம் அவரை தேசத்தின் அன்னை என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் செவ்வாய்க் கிழமை அல்லது புதன் கிழமை நடைபெறலாம் என யாழில் இருந்து முந் நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் அவர்கள் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தேசத்தின் தாய்க்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தவேண்டும் என்பதனை நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.

Comments

எங்களின் அன்னைக்கு வீரவணக்கம் செலுத்தி, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிகொள்கிறேன்