புலிகள் கராஜில் வேலைசெய்தால் நான் புலிகள் ஆதரவாளரா: அகதி ஆதங்கம்.

சன் சீ என்னும் கப்பல் சுமார் 492 இலங்கையர்களை ஏற்றிக்கொண்டு கனடா சென்றடைந்து பல மாதங்கள் ஆகிறது. இருப்பினும் சுமார் 107 அகதிகளை கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகள் என இலங்கை அரசு அழுத்தம் கொடுத்து வருவதால் அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு அகதி சமீபத்தில் நீதிமன்றம் சென்ற வேளை தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். வன்னி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தவேளை அங்கே வாகனங்கள் திருத்தும் ஒரு கடையில் தான் வேலைசெய்ததாகவும், அக் கடை புலிகளின் ஆதரவாளரால் நடத்தப்பட்டதாகவும் அதில் தான் வேலை செய்த காரணத்தால் தானும் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் ஆக முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

புலிகளின் சில வாகனங்களை ஒரு பழுதுபாப்பவர் என்ற வகையில் காசுக்காக தான் திருத்திக் கொடுத்ததாகவும், அதனால் தன்னை விடுதலைப் புலிகள் எனக் கூறி பல மாதங்களாகத் தடுத்துவைத்திருப்பது நியாயமற்றது எனவும் அவர் சுட்டிக் காடியுள்ளார். சுமார் 3 லட்சம் தமிழர்கள் தற்போது கனடாவில் வாழ்ந்துவருவதாகக் கூறப்பட்டாலும், 2010 ஆண்டு இறுதியில் இத் தொகை 3லட்சத்து 50,000யிரமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்னும் 10 வருடங்களில் இத் தொகை ரெட்டிப்பு ஆகி, அங்குள்ள தமிழர்கள் 2வது தேசிய இனமாகும் நிலை தோன்றவுள்ளதோடும் அரசியல் பலத்தையும் பெற இருக்கிறது. இதனை எவராலும் தடுக்க முடியாத நிலை தோன்றியும் உள்ளது.

எனவே தொடர்ந்தும் கனடாவுக்கும் இலங்கை அகதிகளை உள்வாங்குவதை அந் நாட்டரசு விரும்பவில்லை. இதனை ஒரு காரணமாகக் காட்ட முடியாத கனேடிய அரசு, வரும் இலங்கை அகதிகளுக்கு புலிகள் முத்திரை குத்தப்பார்க்கிறது என்பதே உண்மையாகும்.

Comments