ஈழத்தமிழ் மக்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் ஒடுங்கிய நிலப்பரப்பான கொக்கிளாய் பகுதியில் கடந்த மூன்று வாரங்களில் 240 சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இரண்டு மாகாணங்களையும் பிரிக்கும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு இந்த குடியேற்றங்களை அவசரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகளை வடமாகாணத்தை தனது இராணுவ அழுத்தத்தின் கீழ் வைத்திருக்கும் வடமாகாண ஆளுணரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சந்திரசிறியும், சிறீலங்கா அரசின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் றிச்சார்ட் பத்தியூடீனும் மேற்கொண்டு வருகின்றனர்.
பெருமளவான சிங்களவர்களை குடியேற்றியுள்ள பகுதியில் சில தமிழ் மக்களையும் அவர்கள் குடியமர்த்தியுள்ளனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்ட 43 தமிழ் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். ஆனால் அது அவர்களின் சொந்த பிரதேசம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு இன்றியே இனப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழ் கட்சிகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் சிறீலங்கா அரச இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கொக்கிளாயில் குடியமர்த்தப்பட்ட சிங்களவர்களில் பெரும்பாலானோர் தென்னிலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட காடையர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை குடியமர்த்தியுள்ள சிறீலங்கா அரசு தற்போது கொக்கிளாய் பகுதியில் மீள்குடியேற்றம் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு என வெளிநாடுகள் வழங்கும் நிதிகளையும் தற்போது சிறீலங்கா அரசு சிங்கள மக்களின் குடியேற்றத்திற்கே பயன்படுத்தி வருகின்றது. வன்னிப்பகுதியில் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் வழங்கிய உழவு இயந்திரங்களும் கொக்கிளாய் பகுதியில் குடியமர்த்தப்பட்ட சிங்களவர்களுக்கே அரச அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் இந்த குடியேற்றங்கள் மணலாறு பகுதியலும் நடைபெறுகின்றது. இது வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் புள்ளியாகும். அதற்கான ஆதரவுகளை சிறீலங்காவின் அரச அதிபர்களும், வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரும் வழங்கிவருகின்றனர்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்காக சிறீலங்கா அரசு சிங்கள குடியேற்றங்களை கடந்த 60 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது. பதவியா பகுதியில் 1950 களில் அது மேற்கொள்ளப்பட்டிருந்தது.
1958 களில் அங்கிருந்த தமிழ் மக்கள் விரட்டப்பட்ட பின்னர் சிங்களவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகளையும், கரையோரப் பகுதிகளையும் குறிவைத்தே சிறீலங்கா அரசு இந்த குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.
வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பகுதிகளை இணைக்கும் பணியை இந்தியாவோ, சீனாவோ மேற்கொள்ள முன்வரவில்லை. கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அமெரிக்காவின் முயற்சிகளும் தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள பிரதேசங்களுடன் இணைக்கும் முயற்சியாகவே உள்ளது.
சிங்கள மயமாக்கல்களுக்கான ஆதாரங்கள் என்ன என நோர்வேயை சேர்ந்த முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு நடைபெறும் இனஅழிப்பு மற்றும் சிங்களமயமாக்கல்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
அதிகாரமுள்ள நாடுகள் இதனை நிறுத்த முன்வராதபோது யாரால் அதனை தடுக்க முடியும்?
பயங்கரவாதத்தை தோற்கடிப்பது எப்படி என சிறீலங்கா அரசு 50 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு பயிற்சி தரப்போகின்றதாம், இனஅழிப்பை மேற்கொள்வது எப்படி என்ற பயிற்சியையும் அவர்கள் மிக விரைவில் உலக நாடுகளுக்கு வழங்கலாம்.
தமிழாக்கம்: www.eelamenews.com
நன்றி: தமிழ்நெற்

Comments