விஜய் நம்பியாரை பர்மாவுக்கான தூதுவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பிரிட்டன் கோரியுள்ளது!

கடந்த வருடம் இலங்கை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைய வந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் விஜய் நம்பியாரை பர்மாவுக்கான தற்காலிக தூதுவர் பதவியிலிருந்து நீக்கி விட வேண்டும் என ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் பிரிட்டன் கோரியுள்ளது.

விஜய் நம்பியார் சிறுபான்மை இனங்களின் நலன்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படுகிறார் என்றும் அது குற்றஞ் சாட்டியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நைஜீரிய இராஜதந்திரி இப்ராகிம் கம்பாரி பர்மாவுக்கான ஐ.நா.தூதுவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக உள்ள விஜய் நம்பியார் பர்மாவுக்கான தூதுவர் பதவியையும் பகுதி நேரமாகக் கவனித்து வருகிறார்.

இவரை இந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு பர்மாவுக்கு நிரந்தர தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும் என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

இதே கருத்தையே ஐ.நா.வுக்கான மெக்ஸிக்கோவின் தூதுவரும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஐ.நா. வின் செயலாளர் நாயகம் ஆலோசித்து வருகிறார். அத்துடன் பர்மா விவகாரத்தில் ஐ.நா.வின் பங்கு முக்கியமானது என்று பிரிட்டன் கருதுகிறது

Comments