நாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் வெட்டிகொலை – நாம் தமிழர் கட்சி இரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_7emX4n9_xSjrHaqx_C-1qNCI_phPfLc04a6xOxjq8jTrwO_Wp2-E4mhDu1yNlsCNbzQ2MgsVQPvCka7fK0MFQhR7qzP8OJpOo4jsdKKk2WVb8AvgcCrUGnmnk9JcUgva87Lzhr8XzYg7/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588+%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg)
![](http://athirvu.com/phpnews/images/muth.jpg)
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் புது கோட்டையை சேர்ந்த முத்துகுமார் நேற்று இரவு 10மணி அளவில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளராக செயல்பட்டு வந்த முத்துகுமாருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. தமிழ் தேசியத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் வீரப்பனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் .ஈழத்தில் நடந்த கடைசி கட்ட போரில் படுகாயமடைந்த மக்களுக்கு உதவ, மருந்து பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
![](http://athirvu.com/phpnews/images/naam-thamilar.jpg)
Comments