தமிழக அரசியல் வாதிகளை கொல்ல புலிகள் திட்டம்-புலி பூச்சாண்டி காட்டும் கருணா(ய்)நிதி

தமிழக சட்டமன்றத்தேர்தல் வரவிருப்பதை தொடர்ந்து புலிகள் தமிழகத்தில் உள்ள சில அரசியல் வாதிகளை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையினர் தமிழக பொலீஷாருக்கு எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தை தற்போது ஆட்சி(அடிமை) செய்துகொண்டிருக்கும் கருணாநிதி அரசும் ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்து எக்காளமிட்ட காங்கிரஷ் கட்சியினரும் படு தோல்வியடைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் புலி பூச்சாண்டி காட்டி தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஈழ ஆதரவுள்ள சில அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைப்பதே இந்திய புலனாய்வுத்துறையினரின் நோக்கம் என்று அரசியல் அவதாணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தேர்தல் காலத்தில் தமிழ்நாட்டில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் – இந்திய புலனாய்வுப் பிரிவுகள் எச்சரிக்கை
தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலின்போது மிக முக்கிய பிரமுகர்களின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவுகள் தமிழ்நாடு காவல்துறையை எச்சரித்துள்ளதாக ‘ தி ஹிந்து‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகளை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அது தகவல் வெளியிட்டுள்ளது.

“விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாகவும், அவர்கள் அடையாளம் தெரியாத இடமொன்றில் பயிற்சி பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சு நேற்று எச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளது.

இவர்கள் தமது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த எச்சரிக்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகள், தமது குறிப்பிடத்தக்களவு சகாக்கள் சென்னை வளசரவாக்கத்தில் தங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் வான்படைப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தற்கொலைப் படைப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள், அகதிகள் என்ற போர்வையில் நாகர்கோவில் பகுதிக்கு வந்துள்ளனர்.

சட்டவிரோதமாகப் படகுகளை இயக்குபவர்களின் துணையுடன் விடுதலைப் புலிகள் இரகசியமாக இன்னமும் அகதிகள் என்ற போர்வையில் வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

அதேவேளை, இதுகுறித்துத் தகவல் வெளியிட்ட தமிழ்நாடு உயர் காவல்துறை அதிகாரி ஒருவர்.

“ கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போதும், அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்த போதும் மத்திய புலனாய்வுப் பிரிவுகளிடம் இருந்து நாம் சில எச்சரிக்கைத் தகவல் குறிப்புகளைப் பெற்றிருந்தோம்.

அதற்கேற்ற வகையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தோம். எந்தவிதமான சிக்கலும் இன்றி இந்தநிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ் அகதிகளை அவுஸ்ரேலியாவுக்கு கொண்டு செல்லும் இரண்டு சட்டவிரோத படகு உரிமையாளர்களை கைது செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அணிதிரள்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

முன்னாள் புலிகள் சிலர் அவுஸ்ரேலியாவுக்கும், கனடாவுக்கும் படகுகள் மூலம் சட்டவிரோதமாக ஆட்களை அனுப்ப முனைவது பற்றிய தகவல்கள் சிலவே கிடைத்துள்ளன“ என்று தெரிவித்தார்.

அதேவுளை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் லத்திகா சரணும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இல்லை என்று கூறியுள்ளார்.

“ நாங்கள் எச்சரிக்கை தகவல்களை தீவிரமாகவே எடுத்து கொள்கிறோம்.

காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். ஒவ்வொரு தகவல்கள் குறித்தும் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

கரையோரப் பகுதியில் சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டங்கள் குறித்து அறிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளதாக ‘தி ஹிந்து‘ மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Comments