நோர்வே திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படங்களுடன் எல்லாளன் திரையிடப்படவுள்ளது

நோர்வேயில் நடக்கவுள்ள சர்வதேசத் தமிழ் திரைப்படவிழாவில் விடுதலைப் புலிகளின் எல்லாளன் திரைப்படமும் சிறப்புக் காட்சியாக திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாளன் திரைப்படமானது விடுதலைப் புலிகளால் அனுராதபுர விமானப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாகும். அதில் நடித்துள்ள அனைவரும் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆவர்.

திரைப்படத்தில் அனுராதபுரம் விமானத் தளத்தின் மீதான தாக்குதல் தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட நிஜ ஆயுதங்களும் படத்தில் காண்பிக்கப்படுகின்றன.

அத்துடன் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன் அதில் பங்கேற்ற உறுப்பினர்கள் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகளும் படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

எதிர்வரும் ஏப்ரல் 20 முதல் 25ம் திகதி வரை நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள சர்வதேசத் தமிழ் திரைப்பட விழாவில் எல்லாளன் திரைப்படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்படவுள்ளது.

Comments