‘நாம் தமிழர்’ முத்துக்குமாரின் படுகொலையின் பின்னணியில் கருணாநிதி கூட்டணி

தமிழ் தேசிய சிந்தனையாளரும், தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமார் நேற்றிரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டமை தமிழ்நாடு அரசியலில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக விழங்கிய முத்துக்குமார், ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயமடைந்த மக்களுக்கு மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வந்த இவர் கடந்த ஆண்டே திருமணம் முடித்திருந்தார்.

சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்த இவர், சீமானுக்கு பலத்த பாதுகாப்பு பணியை முனைப்புடன் செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு 10:00 மணியவில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் உந்துருளியில் சென்றுகொண்டிருந்தபோது இனம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த பின்னணியில், சீமானை நெருங்க முடியாத நபர்களே இந்தப் படுகொலையைப் புரிந்துள்ளனர்.

இதன் மூலம் சீமானின் அரசியல் குரலை அடக்கவும், சீமானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கவும் தமிழ்நாட்டின் காங்கிரஸ் திமுக கருணாநிதி அரசியல் அணியொன்று முற்பட்டிருக்கின்றது.

ஈழ இன அழிப்பில் ஈடுபட்ட இந்திய காங்கிரஸ் கட்சிக்கும், அதனுடன் கூட்டிணையும் தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளுக்கும் எதிராக செந்தமிழன் சீமான் குரல் கொடுத்து வருவதுடன், இந்த அணியை எதிர்த்துப் போட்டியிடும் பலம் வாய்ந்த கட்சிக்கு ஆதரவளிக்க இருப்பதாகவும் கூறிவந்த நிலையில் இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய உறுப்பினரது இழப்ப புலம்பெயர்ந்த மக்களையும் கவலை கொள்ள வைத்திருக்கின்றது.

Comments

singam said…
நானும் காவல் துறையின் பல முகங்களை பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன், இந்த கொடூரம் காவல்துறையின் ஆலோசனையின் படி நடந்தது என்பது 100 % உண்மை. இதன் பின்னணியில் சம்பந்தப்பட்டவர ்கள் வேண்டுமானால் உள்ளூர் ஆட்களாக இருக்கலாம், ஆனால் பின்னணியில் பல சர்வதேச தொடர்புகள் இருப்பது தமிழகம் அறிந்த உண்மை. கொலையாளிகள் துப்பாக்கியை பயன்படுத்தினால் சர்வதேச தொடர்புகள் வெளிவந்துவிடும் என்பதினால் மிக கவனமாக தமிழக காவல்துறையினரின ் அறிவிரையின் பேரில் தவிர்த்துள்ளனர் . சகோதரர் முத்துகுமாருக்க ு வீர வணக்கங்கள். அண்ணன் சீமான் அதிக கவனமுடன் இருக்கவும். முன்புவரை நீங்கள் இலங்கை அரசுக்கு மட்டுமே எதிரி. இப்போது ஆளும் திமுகவிற்கும், அதன் எஜமான் காங்கிரசுக்கும் நீங்கள் எதிரி. ஆகையினால் மிக கவனமாக இருக்கவும்.