மன்னார் “குஞ்சுக்குளம்” கிராம மீனவர்களின் பரிதாப நிலை. அவர்கள் பிடிக்க இவர்கள் வேடிக்கை!!!

k-kulamமன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்தில் உள்ள ஆற்றில் சிங்களவர்கள் மட்டும் அதிகாரத்துடன் மீன் பிடிப்பதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடையம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கருத்துத்தெரிவிக்கையில்,

நாட்டில் இடம் பெற்ற போர் நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த குஞ்சுக்குளம் கிராம மக்கள் கட்டம் கட்டமாக குடியேற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால் அக்கிராமத்தினைச் சுற்றி பாதுகாப்பு வலையங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு ஆங்காங்கே சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள மக்களின் அன்றாட தொழிலாக ஆற்றில் மீன்பிடித்தல்,விவசாயம்,வீட்டுத்தோட்டம்.ஆனால் ஆற்றில் மீன்பிடிப்பதன் மூலமே தாம் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டம் கட்டமாக சிங்கள மீனவர்கள் அத்துமீறி மீன் பிடித்து வந்த நிலையில் தற்போது ஏற்பட் வெள்ள அனர்த்தத்தினைத் தொடர்ந்து அதிகலவான சிங்கள மீனவர்கள் வருகைதந்து ஆற்றினைச்சுற்றி மீன்பிடிக்கின்றனர்.

இவர்களுடன் படையினரும் இணைந்து மீன் பிடிக்கின்றனர்.

இதனால் இக்கிராமத்தினைச்சேர்ந்த மீனவர்கள் தமது தொழிலை செய்யமுடியாமல் உள்ளதுடன் வந்தவர்கள் மீனை பிடித்து ஆகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

தற்போது அதிகளவான சிங்களவர்கள் மடு பிரதேசத்திற்கு வருகைதந்துள்ள நிலையில் அவர்களும் இங்கு வந்து மீன் பிடிக்கின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினைத் தொடர்ந்து குஞ்சுக்குளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் பாதை முற்றாக உடைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆற்று நீர் மிக வேகமாக வீதிக்கக் குறுக்காக பாய்வதினால் அதிகளவான நன்னீர் மீன்களும் வருகின்றன.

இந்த நிலையில் குறித்த பகுதிகளில் குவியும் சிங்கள மீனவர்கள் படையினரின் பாதுகாப்புடன் மீன் பிடிக்கின்றனர்.

கரையில் நின்று வீச்சு வலையை வீசி மீன் பிடிக்கின்றனர். ஒரு மீனவர் ஒரு தடவை வலையினை வீசும் போது 1 கிலோ முதல் 3 கிலோ வரை மீன் பிடிபடுகின்றது.

ஆனால் அக்கிராம மீனவர்களே அதனை வேடிக்கை பார்த்து விட்டுச் செல்லுகின்றனர்.

மீனை பிடிப்பவர்கள் நாளை காணிகளைப்பிடித்து விவசாயமும்,தோட்டமும் செய்யக்கூடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களுக்கு தண்ணீரில் ஆரம்பித்த பிரச்சினை பல கோணங்களாக தண்ணீருடன் தொடர்ந்து கொண்டிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

kunchchu-kulam (1)

kunchchu-kulam (1)

kunchchu-kulam (1)

kunchchu-kulam (1)

kunchchu-kulam (1)

kunchchu-kulam (1)

kunchchu-kulam (1)

Comments