சிறீலங்கா அரசுடன் இணக்கமா?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ?

சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்வரும் காலங்களில் தூக்கிப் பிடிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையளவில் இணங்கியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் போதே சிறீலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

tna-sam-edited
சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் போலியானவை என்று வலியுறுத்தியுள்ள சிறீலங்காஅரச தரப்பானது, அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் முன் வைக்கப்படும் பட்சத்தில் வடக்கு மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களை அது தாமதப்படுத்தி விடும் என்றும் அரசாங்கத்தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இனி வரும் காலங்களில் அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன் வைக்காது தவிர்ந்து கொள்வதாக கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி இன்றைய திவயின பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

Comments