தழிழ்நாட்டில் ஜெகத் கஸ்பரும் காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரத்தின் மகனும் சேர்ந்து நடாத்தும் "நாம்" என்ற அமைப்பின் சார்பாக, நடத்தப்படும் விழா ஒன்றில் உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானியத் தலைவர் வணக்கத்துக்குரிய திரு. இமானுவேல் அடிகளார் கலந்துகொள்கிறார். இன்று மாலை 6.00 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில், "இன்றைய ஈழப் போராட்டமும், கள நிலவரமும்" என்னும் தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. வெள்ளைக்கொடியுடன் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடையச் சென்றவேளை, இந்தியாவின் சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, புலித்தேவனை சென்று சரணடையுமாறு அறிவுறுத்தியது தான் தான் என கஸ்பர் அடிகளார் ஒத்துக்கொண்டுள்ளார். இந் நிலையில் புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோருக்கு பின்னர் என்ன நடந்தது என்பதனை அனைவரும் அறிவர்.
கருணாநிதியோடு நெருங்கிய உறவுகளைப் பேணிவரும் கஸ்பர் அடிகளார், மத்திய அரசுடனும் தனது உறவுகளைப் பேணிவருகிறார். சமீபத்தில் ஸ்பெக்கரம் ஊழல் விவகாரத்திலும் அவர் வீடு சோதனையிடப்பட்டது யாவரும் அறிந்ததே. இந் நிலையில், உலகத் தமிழர் பேரவை(GTF) தலைவர் அவர் நிகழ்ச்சியில் உரையாற்றுவது, கஸ்பர் செய்த தவறுகளில் இருந்து அவர் வெளிவர ஒரு அங்கிகாரம் கொடுப்பதுபோல அமைந்துவிடும் என பல தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக GTF ஊடகப் பிரிவை அதிர்வு இணையம் தொடர்புகொண்டு கேட்ட போது, வணக்கத்துக்குரிய திரு. இமானுவேல் அடிகளார் நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், ஒரு அடிகளார் என்ற வகையில் அவர் பாஃதர் கஸ்பரைச் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் சில விழிப்புணர்வுகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளதை அதிர்வு இணையம் அறிகிறது. இக் கூட்டத்தை பலர் புறக்கணிக்கவிருப்பதாவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபோல தர்கத்துக்குரிய அல்லது முரணான நிகழ்வுகளில் சில அமைப்புகள் தவிர்த்துவரும் நிலையில், இந் நிகழ்வானது, பல தமிழ் உணர்வாளர்களை காயப்படுத்தியுள்ளது என்பதனை மறுக்கமுடியாது.
இதில் முக்கியமான விடையம் என்னவெண்றால், நாம் என்னும் அமைப்பு கஸ்பர் அடிகளாரால் நடத்தப்படும் அமைப்பு மட்டுமல்ல. அதில் காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும் இருக்கிறார். நாம் என்ற அமைப்பு ஒரு மதப் பேர்வைக்குள் இருந்தாலும் அதில் அரசியல் வாதிகளும் இருக்கின்றனர் என்பதே உண்மையாகும். நடக்கவிருக்கும் தமிழ் நாட்டுத் தேர்தலில் காங்கிரஸை ஒழித்து, ஈழ உணர்வாளர்கள் அடங்கிய கூட்டாட்சி ஒன்றை அமைக்க அங்கே உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் பெரும் முயற்சியில் ஈடு படும் நிலையில், இதுபோன்ற காரியங்கள் காங்கிரஸாரின் கைகளைப் பலப்படுத்தவே உதவும் என தமிழ் நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர்.

Comments