![](http://athirvu.com/phpnews/images/palitha.jpg)
எதிர்வரும் 24ஆம் நாள் (24-02-2011) காலை 9:30 மணிமுதல் 11:00 மணிவரை இந்த கருத்தரங்கம் இடம்பெறவுள்ளது.
சிறீலங்கா அரசாங்கத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலராக இருந்த பாலித, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இருந்து, இறுதிக்கட்டப் போரிலும், அதற்கு முன்னரும் தமது அரசாங்கம் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள், மற்றும் போர்க் குற்றங்களை நியாயப்படுத்தி வருகின்றார்.
இந்த நேரடிக் கருத்தரங்கிலும் அவர் இதனையே நிச்சயம் செய்வார் என்பதால், தமிழ் மக்கள் இதில் பங்கெடுத்து கேள்வி நேரத்திலாவது சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை, போர்க்குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொண்டுவரக் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு, மற்றும் சீடா என அழைக்கப்படும் இலங்கையிலும் இயங்கும் சுவீடனின் வெளிநாட்டு அபிவிருத்தி கூட்டமைப்பு முகவர் ஆகிய அமைப்புக்களின் அனுசரணையுடன் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பவர்கள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் யாரையும் பேசுவதற்கு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அண்மைக் காலமாகப் பலமாகக் குரல் கொடுத்துவரும் அனைத்துலக மன்னிப்புச் சபை (Amnesty International), அனைத்துலக சர்ச்சைகள் குழு (International Crisis Group) என்பவற்றின் பிரதிநிதிகளான சாம் சரிபி (Sam Zarifi), அலன் கீனன் (Alan Keenan) மற்றும் த நியூயோர்க்கர் சார்பாக ஜொன் லீ அன்டெர்சன் (Jon Lee Anderson - The New Yorker ) ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் உரையாற்றவுள்ளனர்.
இதில் கலந்துகொள்ள விரும்பும் தமிழ் உறவுகள் கீழுள்ள இணைப்பில் பதிவை மேற்கொள்ளலாம்.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாலித கொஹனவுக்கு எதிரான வழக்குத் தாக்கல்.
- TAG, SCET's legal brief asserts ICC obligated to probe Kohona on war-crimes
Date/Time:
February 24, 2011 - 9:30am - 11:00am
PLEASE CLCIK HERE
Comments