இறந்தும் வாழும் ஈழப் பேராதரவாளன் P.R.K (எ) பூ.அர.குப்புசாமி-கொளத்தூர் மணி

ஈழத் தமிழர்களின் பேராதரவாளன்,தமிழ் தேசிய செம்மல்,காவிரிக் காவலன் அய்யா பூ.அர.குப்புசாமி(P.R.K) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(14.2.2011) கரூர் தமிழர் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பெரியார் திராவிட கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பலர் விடுதலையாக காரணமாக இருந்த அய்யாவின் பங்களிப்பை நினைவுக்கூர்ந்தார்,காவிரிக்காக கடைசி வரை போராடிய அவரது விடா முயற்சியையும்,சாகும் கடைசி 10 நாள் முன்பு வரை கூட ஈழ தமிழர்களுக்காகவும்,காவேரிகாகவும் ஓயாது உழைத்த அய்யா அவர்களை வெகுவாக புகழ்ந்ததோடு, ஆரம்ப காலங்களில் தனக்கு பெரியாரியல் பற்றி அய்யா வகுபெடுத்ததையும் நினைவுக்கூர்ந்தார். தமிழ் நாட்டில் இன்று உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் குப்புசாமி அய்யா ஒரு "சார்ஜெரை" போன்றவர் பேட்டரி குறையும் பொழுதெல்லாம் சார்ஜ் ஏற்றி, அவர்களை இயங்கும் நிலையில் வைத்திருந்தவர். அவரை போன்ற ஒரு உன்னதமான சமூக போராளிகள் இன்று அரிதாகவே இருக்கின்றனர்.இன்று அவர் இல்லாதது தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும் என்றார்.

நிகழ்ச்சிக்கு தமிழர் முன்னணியின் செயலாளர் திரு.தமிழ்ச்சேரன் தலைமை தாங்கினார்.

திரு.அதியமான்,முருகேசன்,நல்லசிவம்,வா.நல்லசிவம்,சிவா,உள்ளிட்ட தமிழர் முன்னணியின் தோழர்கள் முன்னிலையில், தமிழ் உணர்வாளர்கள் திரளாக கலந்து கொண்டு அய்யா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.




Comments