யேர்மனி Ravensburg நகரில் எதிர்வரும் திங்கள்கிழமை 14 .02 .2011 அன்று கவனயீர்ப்பு நிகழ்வு

மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைமை அமைச்சர் Angela Merkel அவர்கள் எதிர்வரும் திங்கள்கிழமை 14 .02 .2011 அன்று Ravensburg நகருக்கு வருகை தர இருக்கின்றார் .

அவர்களின் வருகையை முன்னிட்டு Ravensburg நகர தமிழ்மக்கள் எம் இனத்தின் மேல் இடம்பெற்ற கண்மூடித்தனமான இன அழிப்பை மற்றும் ஆக்கிரமிப்பை மீள்நிறுத்தி எம் தாயக தொப்புள்கொடி உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு நிகழ்வு நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர் .

இவ் நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான எம் மக்களை தனது கட்டளையின் கீழ் கொல்வதுக்கு காரணமான போர் குற்றவாளி Major General Jagath Dias சிறிலங்காவின் துணைத்தூதுவராக யேர்மன் அரசாங்கம் ஏற்று கொண்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறித்தி மனு ஒன்றும் கொடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .

தயவுசெய்து Ravensburg நகரத்திலும் அத்தோடு அதன் அருகாமையிலும் அமைந்திருக்கும் நகரங்களிலும் வாழும் தமிழீழ மக்கள் இவ் கவனயீர்ப்பு நிகழ்வில் தவறாமல் கலந்து கொண்டு தம் பங்களிப்பையும் கொடுக்கும் வண்ணம் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள் -


நாள் : 14.02.2011
நேரம் : : 18 bis.ca,20 Uhr
கவனயீர்ப்பு நடைபெறும் இடம் :
Oberschwabenhalle Ravensburg GmbH
Bleicherstraße 20, 88212 Ravensburg Germany

மேலதிக தொடர்புகட்கு :0151 29 077 470

Comments