நீங்கள் தாட்டு வைத்திருக்கும் வெடிபொருட்களை ஒப்படையுங்கள். அப்படி ஒப்படைப்பவர்களுக்கு முன்னுரிமை வளங்கப்பட்டு மிக விரைவாக வீட்டை விடுவோம். அத்துடன் யாராவது தாட்டதை கண்டவர்கள் இருந்தால் அவர்கள் சொன்னாலும் உங்களுக்கும் சலுகைகள் உண்டு என ஒலிபெருக்கி அதிர்ந்த வண்ணம் இருந்தது. இதைக் கேட்ட அற்ப ஆசை படைத்த சிலர் அவன் விரித்த வலையில் விழ்ந்தனர்.
அவனது அறிவிப்பை நம்பி ஒரு சிலர் அவனிடம் சென்று தமக்குத் தெரியும் என பதிவைக் கொடுத்தார்கள். அவ்வாறு பதியப்பட்ட வர்கள் அடுத்தநாள் வாகனங்களில் ஏற்றப்பட்டு இரண்டு நாட்களாக வெடிபொருட்கள் எடுக்கவென கூட்டிச் செல்லப்பட்டு முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, விசுவமடுப் பிரதேசங்களில் சிலரால் எடுத்தும் கொடுக்கப்பட்டது. இது எதற்காக? எடுத்துக் கொடுத்துவிட்டு வீட்டை போவோம் என்ற நம்பிக்கையில் தானே! ஆனால் என்ன நடந்தது? அவர்களில் பெரும்பாலனவர்கள் தான் இன்றும் பூசாவில் இருக்கிறார்கள்.
தனது தேவைக்காக ஆசைவார்த்தை சொல்லிப் பயன்படுத்திவிட்டு இன்று எங்கே கொண்டு சென்று அடைத்துள்ளான் பார்த்தீர்களா? இதுதான் சிங்களவணுடைய ஏமாற்றுத் தந்திரம். அவனது நோக்கம் எல்லாம் தமிழன் என்ற இனம் இருந்தது என்ற அடையாளம் எதுவும் இல்லாது அழிப்பதுதான். நீங்கள் கேட்கலாம் ஏன் அவர்களுக்கு உதவி செய்தவர்களைக் கொண்டே பூசாவில் அடைத்துள்ளான் என்று?
வெடிபொருட்களைத் தாக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு அடுத்தகட்டத் தேவைக்குத்தானே. அதை அந்தஅமைப்பில் யாரைக் கொண்டு செய்வார்கள் நம்பிக்கைக் குரிய தேசப்பற்றுள்ளவாகளைக் கொண்டுதானே செய்வார்கள். ஆகவே இன்று எடுத்துக் கொடுப்பவர்கள் அவனது பார்வைக்கு யாராகத் தெரிவார்கள். எனவே இன்று அவனுக்கு பின்னால் நின்று செயற்படுபவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் அவனது தேவைகள் முடிய நீங்களும் ஒருநாள் அவனால் அழிவைச் சந்திப்பீர்கள் ஏனெனில் நீங்களும் தமிழர்கள்.
பொருள் எடுத்து கொடுத்தவர்கள் சிலரால் பலர் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள் அதனால் அவர்கள் தொடர்ந்து உடல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். கூட நின்றவனே இவர்தான் வேறு இடங்களில் தாட்டவர். இவர் அந்த வேலை செய்தார் என்றால் என்ன தான் செய்ய முடியும்? அப்படி எம்மிடம் எதுவும் இல்லை என மறுத்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை அங்கு நின்ற அனைத்து இராணுவ புலனாய்வாளர்களாலும் உணவின்றி இரண்டு மூன்று நாட்களாக அவர்கள் நினைக்கின்ற நேரத்தில் அவர்கள் கையில் அகப்படுகின்ற பொருட்களால் தாக்கப் பட்டார்கள். இதனால் சிலர் சுயநினைவைக் கூட இழந்தார்கள். அதுமட்டுமல்லாது அவன் எல்லோருக்கும் நான்“டம்” இருப்பதை மறைத்ததால்தான் அடித்தார்கள் என கூறும்படியும் சொன்னான். இதில் உண்மையில் “டம”தெரியாதவர்களும் உடல் துன்புறுத்தலின் வேதனையில் தெரியும் எனச் சொல்லி பின்னர் எடுக்கப் போய் “டம் இல்லாது அங்கும் அடிவாங்கினார்கள். இவ்வாறு மண்ணில் புதையுண்டு கிடக்கும் பொருட்களை எடுப்பதற்காக அவன் எதையும் செய்யத் துணிந்தான் அதன் தேடலும், துன்புறுத்தலும் இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அந்த நிற்பந்தத்திலும் வேறு வழியின்றி எடுத்துக் கொடுத்தவர்களும் உண்டு. இங்கும் பாருங்கள் எங்களை அவனுக்கு யார் என்று தெரியாது நாம் என்ன வேலை செய்தோம் என்று நாம் சொன்னால் தான் அவனுக்கு தெரியும். ஏனெனில் மூத்த உறுப்பினர்கள், முக்கிய உறுப்பினர்கள், வெளிப்படையாக வேலை செய்தவர்களைத் தவிர ஏனையவர்களின் வேலை தொடர்பாக அறிந்திருக்க முடியாது. ஆனால் இன்று அடிமட்ட போராளிகள் சிலரை நீ அது செய்த நீ இது செய்த நீ என்று கேட்கிறான் என்றால் யார் காரணம்? எம்மில் சிலர் அவன் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பியும், அற்ப சலுகைகளையும் நம்பியும்,அவனது துன்புறுத்தல்களுக்கு அஞ்சியும் அவனுக்காக செயற்படுகிறார்கள். அவர்கள்தான் காரணம்.
இவ்வாறு எடுக்கச் சென்றவர்களுக்கு இராணுவத்தினர் கோழிக் கறிச் சாப்பாடும் அங்கு இருந்த எமது மக்களின் பொருட்களையே எடுத்து அதாவது சீனீ, மா, உடைகள், பாத்திரங்கள் போன்றவை அவர்களுக்கு சலுகையாக கொடுக்கப்பட்டது. இந்த சலுகைகளுக்காகவும் சிலர் வெடி பொருட்கள் எடுக்க வென வெளியில் சென்றார்கள்.
தற்போது நீங்கள் எல்லோரும் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் ஏன் சாப்பாடு போதியளவு இன்றி சித்திரவதைகளாலும் வேலைகளாலும் துன்புறுத்தினான் என்று இந்த அவலத்துக்கு கூடாக தான் நினைத்ததைச் செய்ய தொடங்கினான் அது சிறிது நிறைவேற துன்புறுத்தல்கள் மேலும் அதிகரித்தது. இதனால் பலர் காட்டிக் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் எம்மவர்களுக்கும் சில மறைமுக அச்சுறத்தல்கள் வரத் தொடங்கியது.
தேவையில்லாமல் யாரும் யாரையும் காட்டிக் கொடுத்தால் இங்கேயே கொல்ல வேண்டி வரும் என்று ஒரு மறைமுக மிரட்டல் எம்மையும் வந்து சேர்ந்தது. அது இப்படிச் சொல்லி இருக்கிறார்களாம் யார் என்று தெரியவில்லையாம் என எல்லோர் காதுகளிற்கும் சென்றிருக்க வேண்டும்.
ஒலி பெருக்கியில் தொடர்ந்து “டம்”எடுத்துக் கொடுத்தவர்களை காரியாலயம் வரட்டாம் என அறிவித்த வண்ணம் இருந்தார்கள் ஏnனில் அவர்களில் பலர் இராணுவப் புலனாய்வாளர்களுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கினார்கள் இதனால் அவர்களுக்கு சலுகைகளும் அதிகாரங்களும் அழிக்கப்பட்டன.
ஆனால் எமக்கோ போதிய உணவில்லை றேடியோ கேட்க முடியாது, பத்திரிகை பார்க்க முடியாது. எந்த வித மனிதாபிமான சுதந்திரம் கூட இல்லை இவ்வாறு இருந்தும் துன்புறுத்தல்கள் பல வடிவங்களில் வந்தன. உணவு எடுக்க வரிசையில் வெயிலில்தான் நிற்க வேண்டும் அப்படி நிற்கும் போது யாராவது ஒரு அதிகாரி அல்லது இராணுவப் புலனாய்வாளர்கள் தாக்குவார்கள் அல்லது அவதூறான வார்த்தைகளால் வன்னி சம்பவங்களை ஒப்பிட்டு கதைப்பார்கள்.
சில இரானுவ அதிகாரிகளைக் கண்டால் நாம் ஓடி ஒழியவேண்டியது தான் அதில் ஒருசம்பவத்தை அறியத் தருகின்றேன். இராணுவப் பொலிஸ் மேஜர் தர அதிகாரி ஒருவர் இக்கால கட்டத்தில் அங்கு பணியாற்றினார் அவர் எமது அந்தரங்கப் பகுதியைப் பிடித்து இழுத்து முறுக்கி அடிவயிற்றில் குத்துவதும் நாம் குந்தி இருந்தால் பின் பக்கமாக வந்து “சூ” காலால் அந்தரங்கப் பகுதியில் தட்டுவதும் எந்தப் படையணி ? எவ்வளவு காலம்? என கேட்டு யாருக்காவது அடித்துக் கொண்டிருப்பது தான் அவர் வேலை ஒரு இராணுவப் பொலிசின் வேலையைப் பார்த்தீர்களா ? இராணுவத்தின் ஒழுக்கச் சீர் கேட்டைப் பார்க்க வந்த அதிகாரிக்கு எம்மிடம் என்ன வேலை என்று பார்த்தீர்களா? யாரும் எம்மை விட்டுவைக்கவில்லை இது தான் உண்மை.
இதே நேரம் இராணுவப் புலனாய்வாளர்களால் பதிவுகளும் எடுக்கப்பட்டது அது படையணி படையணியாகக் கூப்பிட்டு எவ்வளவு காலம் என்ன வேலை செய்தநீ ? எந்தெந்த மாவட்டத்தில் நின்றநீ ? என ஒரு அவசர விபரம் எடுக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கப் பட்டதால் தான் நாங்கள்…
தொடரும்…
சோபி, ஆசிரியர் குழு,

Comments