பாலியல் ரீதியாக கொடுமைகளுக்கு உள்ளான பல பெண்களை தாம் பார்த்ததாக இந்த மொழிபெயர்பாளர் கூறியுள்ளார். அவர்களில் சிலர் இரவில் தூக்கம் இன்றி இருப்பதாகவும், கனவுகள் கண்டு திடுக்கிட்டு எழுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இரவும், கனவுகளில் இலங்கை இராணுவம் துரத்துவது போல இவர்கள் காண்பதும், தமக்கு ஏதோ நடப்பது போலம் இவர்கள் உணர்ந்து தூக்கம் இன்றி பல மாதங்களாக துன்புறுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலும் சில தமிழ்ப் பெண்கள் ஆண்களைப் பர்த்தால் பயப்பிடுவதும், தமக்கு உதவி புரிய வந்த பெண் தாதிமார்களைக் கூட அனுமதிக்காத நிலை இருப்பதவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன நிலை மற்றும் உடல் ரீதியாக பாதிப்படைந்துள்ள இவர்கள், தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர்களை பராமரிக்கச் செல்லும் ஆண்களைக் கண்டு அவர்கள் பயந்து நடுங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில தமிழ்ப் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் சிகரட்டால் சுடப்பட்ட காயங்கள் இருப்பதாவும், இன்னும் சில தமிழ் பெண்களின் பிறப்பு உறுப்புகள் சிதைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பெண்களை சக்தியின் வடிவமாக, ஒரு கடவுளுக்கு ஒப்பாக கருதுவது தமிழர்களே. அம்மா என்றும் , தாய் என்றும், அன்னை என்றும், சிவனில் பாதி என்றும், அம்மன் என்றும் பெண்களை போற்றும் இனம் தமிழ் இனம் ! கடவுள் எத்தனை ஜீவராசிகளைப் படைத்தாலும் பெண்களுக்கே தாய்மை என்னும் சக்தியக் கொடுத்திருக்கிறான். அதனை மதிக்காது பெண்களை இவ்வாறு அவமானப்படுத்தும், தமிழ் பெண்களை இழிவு படுத்தும் இச் சிங்களவனோடு எப்படி ஒற்றுமையாக வாழ முடியும் ?
இப்படி எல்லாத் தமிழ் பெண்களளோடும் பாலுறவில் ஈடுபடத் துடிக்கும் சிங்களத்தோடு நாம் எவ்வாறு சமாதானம் பேச முடியும் ? இல்லை ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் ? தமிழ் பெண்கள் என்றாலே, அவர்களோடு சல்லாபிக்கத் துடிக்கும் இது போன்ற சிங்களத்தோடு நாம் இனியும் சமாதானம் பேசப்போகிறோம் ? தமிழ் மக்களே ! உணர்வாளர்களே ! பெரியோர்களே ! மற்றும் சான்றோர்களே சற்று யோசித்துப் பாருங்கள் ! காந்தி இன்னும் உயிரோடு இருந்திருந்தால் அவர் கூட நிச்சயம் ஈழம் சென்று துப்பாக்கி தான் ஏந்தியிருப்பார். ஏன் என்றால் இதற்கும் அகிம்சைக்கும் வெகுதூரம் அல்லாவா..
Comments