நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன !

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் குறைந்த பட்ச ஜனநாயகத்தையாவது பேணும்படி அறிவுறுத்துங்கள்!

குறைந்த பட்சம், மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் பேசுவதற்கான சந்தர்ப்பத்தையாவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் திரு. ருத்திரகுமாரன் அவர்களிடமிருந்து பெற்றுத் தாருங்கள் என நக்கீரன் அவர்களது கடித்தத்திற்கான பதில் கடித்த்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-----------------------------

யார் இந்த நக்கீரன் தங்கவேலு

பரதேசிக்கழகம் நக்கீரன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாட்டிக்கு கொண்டாட்டம் என்பது போல் தனக்கு எங்காவது மேடை கிடைத்தால் காணும் என்று பழைய சங்கதியில்வன்னி மக்களின் மறுவாழ்வுக்கு கை கொடுங்கள்!-கனடா ஈழமுரசிற்காக நக்கீரன் - மாரடிக்கத் தொடங்கிவிட்டார்.

ஆனால் முன்பு கனடாவில் மேல் மாகாணத்தில் நா.க.அ க்கு 5 உறுப்பினர்கள் பின்கதவால் உள் நுழைந்ததை கடுமையாக விமர்சித்து உருத்திரகுமாருக்கு கடிதம் எழுதியவர்
சுவிஸ் முரளி + கனடா நக்கீரன் கூட்டு ஆப்புக்கள்

From: athangav
To: vrudra

Subject: Re: Irregularities relating to the filing of nominations ( Canada )please join the campaign for protest of irregularities relating to the filing of nominations by sub- committee members(
Date: Sun, 18 Apr 2010 09:19:53 -0400

Dear Urudra

If this is true, what happened to the much touted democratic principles, transparency and fairness by the PTGTE? You allowed unprincipled and unscrupulous charlatans to conduct the elections. How can those who reside in Ontario Centre get elected to represent Western Canada? And that too unopposed? Shamefully, like inside trading, some elements who had confidential information manipulated the electoral process to their advantage! It spells bad omen to the future of TGTE! This is a mockery and travesty of rule of law.

Thangavelu

இம்முறை நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி மக்கள் பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்-வே.தங்கவேலு(தமிழ்படைப்பாளிகள் கழகம்-கனடா) புகழ் பாடியிருக்கின்றார். எந்த அசம்பாவிதங்களும் நடந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை

இது எட்டாப் பழம் புளிக்கும் என்பது போல் TamilNet நடந்து கொள்கிறது என நாம் நினைக்கிறோம்.

என்று ஒரு படி மேல் மாரடித்திருக்கின்றார் நக்கீரன் தங்கவேலு .

நெற்றிக்கண்ணைக் காட்னாலும் குற்றம் குற்றமே... அது திரு. ருத்திரகுமாரனுக்கும் பொருந்தும்!

இந்தப் பச்சோந்தி நக்கீரனுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கின்றார்கள் மக்கள் பிரதிநிதிகள்

இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகள் தமிழர்களை வழி நடாத்த முற்படுவது தான் அவர்களைச் சார்ந்த அமைப்புக்களை மேலும் சந்தேகிக்க வைக்கின்றது.

------------------------------------------------------------------


திரு. நக்கீரன் அவர்கட்கு,

அனடபுடையீர்!

தங்களது ‘குதிரையை ஆற்றுக்கு இட்டுச் செல்லலாம். ஆனால் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது.’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின் அஞ்சல் தொடர்பாக, சில விடயங்களைத் தங்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கின்றேன்.

முதலில், உங்களது வயதுக்குரிய நாகரிகத்துடன் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்களும், அதன் பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ இங்கிருந்து விடுதலை பெற்றுச் சென்றுவிடுவோம். ஆனால், இன்னும் பல நூற்றாண்டு காலங்கள் வாழ வேண்டிய எங்களது சந்ததியினரை, தவறான விளக்கங்களுடன் பிழையான திசையில் திருப்பிவிடும் பணியினைச் செய்வது மிகவும் கொடூரமான வரலாற்றுத் தவறாகிவிடும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தென்னையில் தேள் கொட்டினால், பனையில் நெறி கட்டுவது போன்ற காத்திரமற்ற கதைகளைப் பாமரத் தனமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஜனநாயக ரீதியான தேர்தல்களில் போட்டி போட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள், ஜனநாயக பாதையில் தொடர்ந்தும் பயணிக்க விரும்புவதை ஏதோ காரணங்களுக்கா நீங்கள் நிராகரிப்பது கடந்த கால அரசியல் தவறுகளினூடாக, உலகில் நாடற்ற இனமாக இன்று உலகம் முழுவதும் பரங்து வாழும் தமிழர்களை அதே நிலையில் கொண்டு செல்லும் அயொக்கியத் தனம் நிறைந்ததாகவே கருதுகின்றேன்.

அவையில், நிறைவேற்றாத யாப்புமீது உறுதி மொழி எடுப்பதை நிராகரிக்கும் உறுப்பினர்களின் ஜனநாயக போராட்டத்தை, தவறான திசையில் திருப்பிவிடும் உங்களது அறியாமைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் திரு. கே.பி. அவர்கள் எடுத்த நகர்வுகள் குறித்த சந்தேகங்கள், அவர் முன் மொழிந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்தும் தமிழ்த் தேசியத் தளத்தில் பலவிதமான கேள்விகளை எழுப்பியதும், வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்ததும் இயற்கையானதே. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற குழப்பம் கே.பி. அவர்களது நகர்வு குறித்த சந்தேகத்தினால் உருவானது. அதன் தொடர்ச்சியை இப்போது நேரடியாகத் தரிசித்து வருகின்றோம்.

ஆயுதப் போர் ஓய்வுக்கு வந்த பின்னர், தமிழீழ மக்களது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க உலகப் பரப்பில் ஒரு ஜனநாயக தளம் தேவை என்பதை உணர்ந்து கொண்டே, அந்தக் குழப்பமான நேரத்திலும் நாடு கடந்த தமிழீழ அரசு உருவாகுவதைத் தடுப்பதில்லை என்றும், அதில் தாமும் பங்குபற்றுவதன் மூலம் அதைத் தமிழீழ விடுதலைப் பாதையில் தடம் மாறாமல் பயணிக்க வைக்க முடியும் என்றும் தமிழ்த் தேசிய தளத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், இந்தக் குழப்பத்தில் காலங்கள் வேகமாகச் சென்ற நிலையில், கே.பி. குழுவினரின் பிடி அங்கு மேலோங்கிவிட்டது என்பதே உண்மை.

எந்தவொரு புதிய கருத்துருவும் விமர்சனத்திற்குள்ளாவது அறிவு சார் தளத்தில் ஆரோக்கியமானதே. எல்லாக் குதிரைகளும் கடிவாளம் போடுவது சாத்தியம் அல்ல. ஜனநாயக தளத்தில் எழுப்பப்படும் சர்ச்சைகளையும், வாதங்களையும் சதிகளாகக் கணக்கிடுவது அறியாமையின் உச்சக் கட்டம்.

கனடாவில் வாழும் நீங்கள், கனடாவின் பெண் பிரதிநிதியான திரு. கே.பி. அவர்களது மருமகள் எப்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குள் உள் நுழைந்தார் என்பது நீங்கள் அறியாத விடயமாக இருக்காது. ஒன்ராறியோ மாநிலத்தில் வாழும் ஒருவர், பல ஆயிரம் கிலோ மீற்றர் கடந்து சென்று, அறிமுகமே இல்லாத தென் மாநிலத்தில் போட்டிகளின்றி உள் நுழைக்கப்பட்ட ஜனநாயகத்தை என்னவென்று சொல்வது? அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தில் அறிவுசார் மக்களே இல்லை என்ற முடிவுக்கு எம்மால் வர முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

‘ஒரு புறம் ஆதரவு என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் முட்டுக்கட்டை போட்டார்கள். இவர்களை நோர்வேயில் இருந்து கொண்டு இரண்டொருவர் வழி நடத்திக் கொண்டிருந்தார்கள்.’ என்ற உங்களது வாதம், உங்களது தெளிவற்ற சிந்தனைகளையே காட்டுகின்றது. புலம்பெயர் தேசங்களில் யார், யாரை வழிநடத்த முடியும் என்று கூற முற்படுகின்றீர்கள்? நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை தமிழ்த் தேசிய தளத்தினரே பெரும் ஆதரவு வழங்கி நடாத்திக் கொடுத்தனர் என்பதை உங்களைப் போன்ற சிலரைத் தவிர, ஏனையோர் ஏற்றுக் கொள்வார்கள்.

‘யாப்புக் குழுவில் இருந்தவர்கள் உருத்திரகுமாரனது கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதத்தில் எந்த நாட்டிலும் இல்லாத மாதிரி 3 துணை தலைமை அமைச்சர் பதவிகளை உருவாக்கினார்கள். அதுவும் அவர்கள் அரசவையினால் தெரிவு செய்யப்படுவார்கள் என்ற விதிகளை திட்டமிட்டுப் புகுத்தினார்கள்.’ என்ற உங்களது வாதம் வேடிக்கையானது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது உலக நாடுகளில் நிலப்பரப்பைக் கொண்டிராத நிலையில் உருவான கருத்துருவாக்கம் மட்டுமே. அதனை, நாடுகளின் ஆட்சி முறையுடன் பொருத்திப் பார்ப்பது அறியாமை. எல்லைகளற்று, உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் இந்தப் பூமிப் பந்தின் அனைத்துத் திசைகளிலும் வாழ்கின்றார்கள். அவர்களை வழி நடாத்தி, தமிழீழம் நோக்கிய பாதையில் பயணிக்க வைப்பதற்கு ஒற்றை அதிகார மையம் சாத்தியமற்றது என்பதைத்தான் தமிழ்த் தேசிய தளத்தினரது நிலையாக இருந்தது.

அது மட்டுமல்லாமல், ஆட்சி உரிமையும், அதிகார வரைமுறையுடைய பாதுகாப்புப் பொறி முறையுமற்ற நிலையில் தனி மனிதர் ஒருவரிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவது அபாயம் மிக்கது என்ற வாதத்தை யாரும் நிராகரிக்க முடியாது. மக்கள் பலம் என்ற மாபெரும் சக்தியும், ஆட்சிக்குரிய நிலப்பரப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் இராணுவ பலமும் கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே, அயல்நாடான இந்தியாவால் உலங்கு வானூர்தியில் ஏற்றிச் செல்லப்பட்டு, அசோகா விடுதியில் தடுத்து வைக்கப்பட்டு, கையொப்பமிடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அவரது பலம் அவரை விடுவித்தது. அத்தகைய ஒரு நிலை திரு. ருத்திரகுமாரனுக்கு வந்தால், ஈழத் தமிழர்களது எதிர்காலம் அந்த ஒற்றை மனிதரால் குழிக்குள் புதைக்கப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்தே, புலம்பெயர் தமிழீழ அரசியல் மையத்தில் அதிகாரங்கள் பிராந்திய ரீதியில் பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக அமர முற்பட்ட திரு. ருத்திரகுமாரனை மட்டுமல்ல, அதன் பின்னர் அந்தப் பதவிக்கு வரக்கூடிய எந்தவொரு பிரதமரும் தடம் புரண்டுவிடக் கூடாது என்ற தேசிய சிந்தனையின் வெளிப்பாடே.

‘பதவி ஆசையும் (அது குற்றமன்று) அதிகாரமும் தங்கள் கையில் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே உறுதிமொழி எடுப்பது இல்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறார்கள்.’ என்ற உங்களது கருத்து எந்த ஆதாரமும் இல்லாதது. என்னைப் பொறுத்தவரை, எனக்குப் பதவி வேண்டும் என்று நினைத்திருந்தால், பதவி பெற்றவர்கள் போலவே, திரு. ருத்திரகுமாரனை ஜால்ரா போட்டே பெற்றிருக்க முடியும். அது, தமிழ்த் தேசிய தளத்தில் தளம்பாமல் நிற்கும் அனைவருக்கும் பொருந்தும். எனவே, எங்களது தமிழ்த் தேசியம் மீதான உறுதிப்பாட்டை மலினப்படுத்தும் முயற்சியில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்.

திரு. ருத்திரகுமாரன் அவர்கள் கே.பி. இன் கட்டுப்பாட்டில் இல்லை என்ற உங்களது வாதத்தை ஏற்றுக்கொள்கின்றோம். அவர், தேசியத் தலைவரது நம்பிக்கைக்கு ஆளான ஒருவர். படித்த கூட்டம் வி.புலிகள் என்றால் பதுங்கிய போது அவர் வி.புரிகளின் சட்ட மதியுரைஞராக திறம்படச் செயற்பட்டவர். இடைக்கால தன்னாட்சி அதிகார சபை திட்டத்தை (ஐளுபுயு) பல்துறை அறிஞர்களது பங்களிப்போடு உருவாக்கியவர் என்ற உங்களது வாதம் அனைத்தையும் ஒப்புக் கொள்கின்றோம். அத்தகைய கனவான், ஏதோ சில அதிருப்திகளாலும், சந்தேகங்களாலும் பாதிப்புக்குள்ளாகியுள்ள எங்களைத் தொடர்பு கொண்டு அதனைத் தீர்க்க எதற்காக முன்வரவில்லை. நாங்கள் எங்களது சந்தேகங்களை பத்துக் கேள்விகளாக அனுப்பிய கடிதத்திற்கு ஏன் அவர் நேர்மையாகப் பதிலளிக்கவில்லை. அந்தக் கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், அப்படி ஒரு கடிதம் கிடைத்தது என்ற ஒரு வார்த்தையைக் கூட, ஜனநாயக மரபாக எமக்கு அறியத் தரவில்லை?

ஏனென்றால், அதற்கான வெளிப்படுத்தக் கூடிய நேர்மை அவரிடம் இல்லை. இரண்டாவது அமர்வின் இறுதி நாளில் அதிருப்தியும், அச்சுறுத்தல்களும் நிறைந்த சூழ்நிலையில் 38 உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், யாப்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. அந்த நிறைவேற்றப்படாத யாப்பு மீது கையொப்பமிடுவது, எங்கோ சென்றுகொண்டிருக்கும் கடிவாளமிடப்படாத குதிரையில் ஏறி அமர்வது போன்றது.

சிங்கள தேசத்தால் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காக இத்தனை விலை கொடுத்துப் போராடிய நாங்கள், புலம்பெயர் தேசங்களிலும் எங்களது ஜனநாயக உரிமைகளையும், கடமைகளையும் மீட்பதற்காகப் போராட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம், மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் பேசுவதற்கான சந்தர்ப்பத்தையாவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் திரு. ருத்திரகுமாரன் அவர்களிடமிருந்து பெற்றுத் தாருங்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் குறைந்த பட்ச ஜனநாயகத்தையாவது பேணும்படி அறிவுறுத்த வேண்டிய நீங்கள், அந்தக் குதிரையில் பயணிப்பதே சுகம் என எங்களுக்கு அறிவுறுத்த எண்ணுவது, உங்கள் அறியாமையின் வெளிப்பாடா? அல்லது, அதற்கும் மீறிய ஏதாவது காரணமா? வெளிப்படுந்துங்கள் ஐயா, நக்கீரன் அவர்களே!

அன்புடன்,
திரு. சி. பாலச்சந்திரன்
மக்கள் பிரதிநிதி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – தமிழீழ மக்களவை
பிரான்ஸ்

Comments