புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை சட்டவிரோதமாக வெளியேற்ற போவதாக நாடு கடந்த தமிழீழ அரசின் அவைத்தலைவர் எனக்கூறப்படும் பொ. பால்ராஜன் காலக்கெடுவொன்றை வெளியிட்டிருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசின் கோட்பாட்டை ஏற்று தேர்தலில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அவையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசின் கோட்பாட்டிற்கான உறுதிமொழியை எடுத்திருந்தனர்.
ஆனால் அவையில் ஏற்றுக்கொள்ளப்படாத சட்டவிரோத யாப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் மீண்டும் உறுதிமொழி எடுக்கவேண்டும் அல்லது அவர்களை வெளியேற்றப்போவதாக மிரட்டல் விடப்பட்டிருந்தது. சனநாயக விழுமியங்களுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசின் யாப்பை ஏற்றுக்கொள்ளாத மக்கள் பிரதிநிதிகளே நாடு கடந்த தமிழீழ அரசவையின் சனநாயக அணியை இன்று உருவாக்கியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசவையின் சனநாயக அணியினரால் இன்று வெளியிப்பட்டுள்ள அறிக்கையில் சனநாயக அணியின் உருவாக்கத்தின் அவசியத்தையும் அணியின் கட்டமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
Comments