அன்பான தமிழின உணர்வாளர்களே! சிங்கள பேரினவாத இனவெறி அரசு கடந்த ஆண்டு மே மாதம் முள்ளி வாய்க்கால் பகுதியில் தமிழினத்தின் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி தமிழீழ விடுதலைப் போராளி களையும், அப்பாவிப் பொதுமக்களையும் கொன்று குவித்த கோர நிகழ்வு தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் நீங்காத இரணமாக வதைத்துக் கொண்டிருக்கிறது. இப்படுகொலை களுக்கு முக்கிய காரணமாக உள்ளது காங்கிரசு கட்சி.
இலங்கை மண்ணில் மூன்றில் ஒரு பகுதியாக விளங் கும் தமிழீழத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து அப்பகுதியில், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் வங்கிகள் என அனைத்துக் குடிமை நிர்வாகத்தையும் தாங்களே ஏற்று நடத்தி வந்தவர்கள் விடுதலைப் போராளிகள்.
சிங்கள அரசால்,இராணுவத்தால் இப்போராளி களை ஒரு போதும் தனித்து நின்று வெற்றி கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர் எவரும் தமிழீழ மண்ணில் போராளிகளின் அனுமதியின்றி கால்வைக்கக் கூட முடியாது என்கிற அளவுக்கு வலிமையோடு இருந்தவர்கள். இப்படிப்பட்ட வலிமை மிக்கப் போராளிகளை வீழ்த்தி தமி ழினத்தையே அழித்தொழிக்க சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது இந்தியாவை ஆளும் காங்கிரசு கட்சி.
ம
சிங்கள அரசுக்கு போர்க் கருவிகள், ராடார்கள், ரசாயன குண்டுகள் இலவசமாகத் தந்து அவற்றை இயக்கவும், பயிற்சியளிக்கவும் இந்திய இராணுவத்தையே நேரடியாக அனுப்பியது.இறுதி நாட்களில் போராளிகளுக்கு வெளியி லிருந்து உணவோ, மருந்துப்பொருள்களோ, ஆயுதங்களோ வரா மலும், போராளிகள் எவரும் தப்பித்து வெளியே சென்று விடாமலும், போராளிகளது முகாம்களை சுற்றிலும் தரை, கடல், வான் வழிகளை அடைத்து ஆயிரக்கணக்கில் தமிழர் களைக் கொன்று குவிக்க உதவியது.
இப்போதும் முள்வேலி முகாம்களில் அடைக்கப் பட்டுள்ள தமிழீழ மக்களது மீள் குடியேற்றத்துக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், சிங்கள கொடுங்கோல் அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழர் வாழி டங்களை, நிலங்களைப் பறித்தல், சிங்கள வன்பாலுறவின் மூலம் தமிழின அடையாளத்தை அழித்தல் ஆகியவற்றுக்குத் துணை போய்க் கொண்டிருக்கிறது.
அதோடு மட்டுமின்றி, தமிழீழத்தில் நடைபெற்று வரும் கொடுமைகள் பற்றி வாய்திறக்கவோ, கதறவோ, கண்ணீர் சிந்தவோ கூட தமிழக மக்களை உரிமையற்றவர் களாய் ஆக்கி, அவர்கள் மீது அடக்கு முறைச் சட்டங்களை ஏவியும், சிறையிலடைத்தும் அச்சுறுத்தி ஒடுக்கி வருகிறது.
ஏற்கனவே, காவிரி நதிநீர் உரிமையில், முல்லை பெரியாறு உரிமையில், பாலாற்று நதி நீர் சிக்கலில் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருவது இந்தியாவை ஆளும் காங்கிரசு ஆட்சி.
தமிழக மீனவர்கள் 500 மேற்பட்டவர்கள் சிங்களக் கடற்படையில் கொல்லப்பட்டப்போதும் அதைத் தடுத்து நிறுத்த துளியேனும் முயற்சி மேற்கொள்ளாமல், சிங்கள இன வெறி ஆட்சியாளர்களை அழைத்து அவர்களுக்கு சிவப் புக் கம்பள வரவேற்பு தந்தும்,‘சம்பந்திவிருந்து’கொடுத்தும் அவர் களோடு கூடிக்குலாவி வருகிறது இந்திய காங்கிரசு ஆட்சி.
எனவே தான். இப்படிப்பட்ட தமிழின விரோத காங்கிரசு கட்சியை தமிழகத்திலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
1967 ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு தமிழகத்தில் தனித்து நின்றால் எந்தத் தொகுதியிலும் ‘‘தேர்தல் வைப்புத் தொகையைக்’’ கூட திரும்பப் பெற முடியாது என்கிற அளவுக்கு கலகலத்து போயிருந்தது காங்கிரசு கட்சி.
ஆனால் கெடுவாய்ப்பாக தமிழகத்தில் உள்ள திரா விட இயக்கக் கட்சிகள் மாறி மாறி காங்கிரசு கட்சிக்கு ‘‘காவடி’’ தூக்குகிறது. இதைப் பயன்படுத்தி கழகக் கட்சி களின் தோளேறி அதிகாரத்தைத் தக்க வைத்து வருகிறது காங்கிரசு கட்சி.
இந்தத் தமிழன விரோதக் கூட்டை நாம் களைய இயலாவிட்டாலும் குறைந்தபட்சம் காங்கிரசு கட்சியை மட்டுமாவது தமிழகத்தில் வீழ்த்தி, தமிழகத்திலிருந்து அதை முற்றாகத் துடைத்தெறிய முயற்சிகள் மேற்கொள்ளுமாறு தமிழின உணர்வாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு காங்கிரசின் பல முக்கிய புள்ளி கள் வீழ்த்தப்பட்ட வரலாற்றை நீங்கள் அறிவீர்கள் அதே போல எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும்.
தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்தபட்சம் தொகுதிக்கு 100 தமிழின உணர்வாளார்கள் திரண்டு தெரு முனைக் கூட்டங்கள், மேடைப்பேச்சுகள், இசைப்பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், குறு நாடகங்கள் முதலானவற்றின் மூலம் தமிழக மக்களிடையே காங்கிரசு கட்சியின் தமிழின விரோதப் போக்கை அம்பலப்படுத்தி, விழிப்பூட்டி காங்கிரசு கட்சியை தமிழக மண்ணிலிருந்து முற்றாகத் துடைத்தெறிய தமிழகத்தில் ஒரு காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கூட வெற்றி பெறவில்லை என்கிற நிலையை ஏற்படுத்த, தமிழக சட்டமன்றத்தில் காங்கிரசு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ‘சுழியம்’ ஆக்கிட இப் போதிருந்தே அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறோம்.
அணியமாகுங்கள்! எவர் எவரோடு சேர்ந்தாலும் காங்கிரசுதான் பொது எதிரி! வீழ்த்துவோம் வாரீர்
வீர. சந்தனம்
Comments