வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து ஆராய நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல்அமீது, இயக்குனர் மணிவண்ணன்,
அறிவரசன், கீ.த.பச்சையப்பன், உட்பட ஆன்றோர் குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
இறுதியாக எடுத்த முடிவை செந்தமிழன் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தெரிவித்தார்.
Comments