எதிரி இணையத்தின் அதிகப்பிரசிங்கத்தனமா ? அறிவிலித்தனமா ?

http://2.bp.blogspot.com/-M1iF7piNqlk/TXqWCABNMRI/AAAAAAAAA38/FAQkEFvQrQs/s1600/Ethiri.bmp

அண்மையில் எதிரி இணையம் நா.க.அரசின் உறுப்பினர் வாசுகியை பேட்டி எடுத்த விதம்

மக்களால் தெரிவு செய்ய பட்ட ஒருவர் அதே மக்களிற்கு சீரிய முறையில் அவர்களின் கேள்விகளிற்கு பதில் சொல்ல வேண்டும் அதுதான் ஜனநாயகம் .

நாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து எமது கேள்விகளையும் எம்மிடம் இருக்கும் சந்தேகங்களையும் நேரில் சந்தித்தே கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .அவ்வாறே நாமும் செயல் பட்டோம் என்பது மரபு .

நான் உனக்கு ஓட்டுபோட்டேன் எனக்கு பதில் சொல்லித் தான் ஆகவேண்டும் என்று அருவருக்கத்தக்கதாகவும் ,அதட்டலாகவும்,அநாகரிகமாகவும் பேட்டி கண்டிருக்கின்றது அதை மேலுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.

அதற்கு விளக்கம் தரத்தேவையில்லை

இதையே உருத்திரகுமாரைத் தொடர்பு கொண்டு ஏன் பேட்டி எடுக்கவில்லை என்று கேட்டால் இவர்கள் தமது பருப்பு வேகும் இடத்தை தேடி பேட்டி எடுத்தது போல் இருக்கின்றது அதற்கு வாசுகி பலிக் கடாவாகியிருக்கின்றார்

சரி பேட்டியில் சத்தியப்பிரமாணம் செய்யாதவர்கள் எதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டப்பட்டிருக்கின்றார்கள் என்பதையே தெரியாது

தாயகம், தன்னாட்சி , தனிநாடு என்றுக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து தான் நா.க.அரசுக்கு போட்டியிட்டதாவும் அப்போதே யாப்பு இயற்றப்பட்டு விட்டதாகவும் பிதற்றியிருக்கின்றது எதிரி இணையம்

அதுமட்டுமல்லாமல் நாடு கடந்த அரசின் அறிக்கைப் புலி ஜெய்சங்கர் முருகையா வையே ஏன் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்று கேட்டதையும் அவர் நீங்கள் நான் அவன் இல்லை என்று பதில் சொல்வதையும் கீழுள்ள காணொளியில் காணலாம்

இது இவர்களின் அறிவிலித் தனமா அல்லது அதிகப்பிரசங்கித் தனமா ?

ஆனால் ஒரு விடயத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அல்லது யாருடையதோ அறிவுறுத்தலின் பெயரில் இது செய்யப்பட்டிருப்பதாகப் படுகின்றது

இந்தப் பேட்டி கேபியின் மருமகனும் தற்போதய கனடா நாசகாரியுமான ஜெயபாலனின் தமிழரசு , தாய்நிலம் இணையத்தில் இது முகப்பில் போடப்பட்டிருப்பது யாருடைய கைவரிசை இதன் பிண்ணனியில் இருக்கின்றது என்று சொல்லாமல் சொல்லுகின்றது

இப்போது இரண்டாவது பேட்டி என்று போட்டிருக்கின்றார்கள்

சத்திய பிரமாணம் செய்ய மறுக்கும் வாசுகி அவர்களின் பேட்டி 2

அது முதலாவது பேட்டியின் முதல் பகுதி போல் தெரிகின்றது ? இரண்டாவது பேட்டியா என்பதை வாசுகி தான் சொல்ல வேண்டும் ?

முதலாவதாக நா.க.அரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவரை அநாகரிகமாக பேட்டி எடுத்தது கண்டிக்க வேண்டியது

இதை நா.க.அரசு இது வரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அவர்கள் எதிர்க்கின்றார்கள், விமர்சிக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் நா.க.அரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்பதை நா.க.அரசு உதாசீனம் செய்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது

நாடு கடந்த அரசு தனியரசை வேண்டி நிற்கும் முழுத் தமிழ்மக்களுக்கும் உரியது என்பதை நா.க.அரசு மறுதலிப்பதாகவே தெரிகின்றது

நேற்று முன் தினம் நா.க.அரசின் அறிக்கை தமிழ் இணைய சைபர் தாக்குதல் நா.க.அரசின் கண்துடைப்பு கண்டன அறிக்கை நாடகம் ? வெளிக்காட்டுகின்றது

எதிரி எங்குமிருப்பான் என்று முகப்பில் போட்ட எதிரி இணையம்

அவன் எதிரி இணையத்திலும் இருப்பான் என்று சொல்லாமல் சொல்லுகின்றதா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

---------------------------------------------
தரவு வலைப்பூவிலிருந்து

எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் எதிரி இணையம் துரோகி என்பதை மறந்துவிடாதீர்கள்.

http://2.bp.blogspot.com/-M1iF7piNqlk/TXqWCABNMRI/AAAAAAAAA38/FAQkEFvQrQs/s1600/Ethiri.bmp
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் பிரதிநிதியான வாசுகி அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறையாளன் வன்னி மைந்தன் என்ற பெயரில் அவர்மீது பிரயோகித்த நாகரீகமற்ற சொற்பிரயோகங்களையும், அழுத்தங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான அச்சுறுத்தும் தொனியில் ஒரு பெண் செயற்பாட்டாளர் மீது, போதையுடன் உரையாடியது மட்டுமல்லாமல், திருமதி வாசுகி அவர்களது தேசியம் சார்ந்த சேவையையும் அசுத்தப்படுத்த முனைந்துள்ளார்.

பிரித்தானியாவில் குடும்ப வாழ்வுடன் பொதுச் சேவையிலும் முன்நின்று உழைக்கும் தமிழ் பெண் ஒருவர் மீதான இந்த அச்சுறுத்தலின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாகப் பேசுவதான பாணியில் அந்த வன்முறையாளன் செயற்பட்டது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஜனநாயக அமைப்பு மீது வேண்டுமென்றே சேறு பூச முயன்ற செயற்பாடாகவே கருதுகின்றோம்.

தொலைபேசி மூலமான தொடர்பாடலை சம்ம்மந்தப்பட்டவரது அனுமதி இல்லாமல், ஒரு தமிழீழப் பெண்ணை அவமானப் படுத்துகின்றோம் என்ற உணர்வேதும் இல்லாமல், ஒட்டுக்குழு பாணியில் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன், அதனை ஒரு ஊடகத்திலும் வெளியிட்டது குறித்து திருமதி வாசுகி அவர்கள் காவல்துறையிடம் முறையிட்டுள்ளார்.

எதிரி இணையத்தின் குறிப்பிட்ட காட்டுமிராண்டித்தனம் தொடர்பான உயர்வுக்கு நேற்று ஒருவரால் அனுப்பப்பட்டிருந்த செய்தி கீழே இணைப்பு

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்களை அவமதிக்கும் ஒரு தமிழ் ஊடகம்(இல்லை இல்லை மனநோய் ஊடகம்)அதுவே எதிரி

நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலில் போட்டியிட்டு தமிழீழ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீது சேறு பூசும் வேலையில் ஒரு தமிழ் இணையம்(மன நோய் இணையம் எதிரி)ஈடுபட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் என்ன?இது ஏன் ஏற்பட்டது?இது யாருடைய தவறு?என்பதை அறியாமல் தமிழ் தேசிய வாதிகளையும் பல பத்து ஆண்டுகளாக பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் புலம்பெயர் தேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களில் பணியாற்றியவர்கள் மீதும் சேறுபூசி அடிப்பதை எதிரி இணையம் சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

குறிப்பிட்ட இணையம் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களிலேயே பல குழப்பங்களை உண்டுபண்ணி இலங்கை அரசின் மீது தாம் வைத்துள்ள பாசத்தையும் நன்றியையும் காட்டிவரும் இந்த இணையம் தற்போது புலம்பெயர் கட்டமைப்பின் மீதும் நாடு கடந்த அரசாங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலமையால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட பல முடிவுகள்,அடிப்படையற்ற யாப்பு,ஜனநாயகம் இல்லாத பாராளுமன்ற விதிமுறைகள் பொன்றவற்றை ஏற்றுக்கொள்ளாமல் குறிப்பிட்ட யாப்பில் கையொப்பமிடாமல் இருக்கும் பலர் மீது எதிரி இணையம் சேற்றை அள்ளி வீசுகிறது.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் நின்று வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதியான வாசுகியுடன் தொடர்புகொண்ட எதிரி இணையம்(துரோகி) பைத்தியம் பிடித்தவன் போன்று தானே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லி வாசுகி மற்றும் வாசுகி போன்ற தமிழ்த் தேசியவாதிகள் அனைவருமே துறோகிகள் போன்றும் கே.பியின் ஆட்கள் என்றும் அறிவு கெட்ட தனமாக கூறியுள்ளார்.

கே.பியை ஆரம்பம் தொட்டு இன்று முதல் எதிர்த்து வருபவர்களே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகம் இல்லாத யாப்பில் கையொப்பம் இடாமல் உள்ளனர் என்பதை அறியாமல் வழமைபோல் இந்த எதிரி இணையம் புத்திகெட்ட தனமாக வாசுகியுடன் தொலைபேசியில் புலம்பியுள்ளது.

------------------------------------------
பதிவு இணையம்

நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணி பெண் உறுப்பினர்மீது ஊடக வன்முறை!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் பிரதிநிதியான வாசுகி அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறையாளன் வன்னி மைந்தன் என்ற பெயரில் அவர்மீது பிரயோகித்த நாகரீகமற்ற சொற்பிரயோகங்களையும், அழுத்தங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான அச்சுறுத்தும் தொனியில் ஒரு பெண் செயற்பாட்டாளர் மீது, போதையுடன் உரையாடியது மட்டுமல்லாமல், திருமதி வாசுகி அவர்களது தேசியம் சார்ந்த சேவையையும் அசுத்தப்படுத்த முனைந்துள்ளார்.

பிரித்தானியாவில் குடும்ப வாழ்வுடன் பொதுச் சேவையிலும் முன்நின்று உழைக்கும் தமிழ் பெண் ஒருவர் மீதான இந்த அச்சுறுத்தலின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாகப் பேசுவதான பாணியில் அந்த வன்முறையாளன் செயற்பட்டது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஜனநாயக அமைப்பு மீது வேண்டுமென்றே சேறு பூச முயன்ற செயற்பாடாகவே கருதுகின்றோம்.

தொலைபேசி மூலமான தொடர்பாடலை சம்ம்மந்தப்பட்டவரது அனுமதி இல்லாமல், ஒரு தமிழீழப் பெண்ணை அவமானப் படுத்துகின்றோம் என்ற உணர்வேதும் இல்லாமல், ஒட்டுக்குழு பாணியில் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன், அதனை ஒரு ஊடகத்திலும் வெளியிட்டது குறித்து திருமதி வாசுகி அவர்கள் காவல்துறையிடம் முறையிட்டுள்ளார்.

--------------------------------------------------------------------------
எதிரி இணையம் சொல்லுவது என்ன ?

சத்திய பிரமாணம் செய்ய மறுக்கும் வாசுகி அவர்களின் பேட்டி 2

நாடுகடந்த தமிழீழ அரசின் மதிப்பிற்குரிய வாசுகி அவர்களை வன்முறையாளனாக இருந்து செவ்வி கண்டதாக எம் மீது தமிழ் தேசியத்தை பேசி தமிழ் தேசியத்தை அழிக்கும் தீய சக்திகள் பொய் பரப்புரை செய்திருந்தன ..அதனை பொய்பிக்கும் வகையில் இதோ நாம் உரையாடிய அனைத்தினையும் இங்கே பதிவிடுகின்றோம் .

தனக்கு பொதி ஒன்று வந்திருப்பதாக அவர் கூறுகின்றார் அதனையும் இணைத்து இங்கே பதிவிடுவதற்கு வருந்துகின்றோம் .
நாம் வன்முறையாளர்கள் அல்லர் என்பதனை தெளிவு படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் இதனை இங்கே பிரசுரிக்கின்றோம் .

அத்துடன் பதிவு இணைய தளத்தினர் எம்மீது சுமத்திய அப்பண்ட குற்ற சாட்டு இத்துடன் முடிவுக்கு வந்துள்ளதுடன் அவர்களின் போலி முகமூடிமீண்டும் ஒருமுறை கிழிக்க பட்டுள்ளது .இவர்களே நந்தகோபன் அணியினர் என்பதும் சிங்கள சிறையில் இருந்து தப்பி வந்த நந்தகோபன் தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாள் அன்று மாவீரர் நாள் அறிக்கையினை விட்டு குழப்பத்தினை உருவாக்கி தமிழீழ வரலாற்றை மாற்றி மாவீரர்களினதும் தமிழீழ தேசிய தலைவர் மீதும் அவர்கள் சார்ந்த உலக தமிழ் மக்களையும்
அவமதித்தவர்கள் என்பதனை மீளவும் இங்கே ஆணித்தரமாக மீள் நினைவு படுத்தி கொள்கின்றோம் .

மக்களால் தெரிவு செய்ய பட்ட ஒருவர் அதே மக்களிற்கு சீரிய முறையில் அவர்களின் கேள்விகளிற்கு பதில் சொல்ல வேண்டும் அதுதான் ஜனநாயகம் .
அவை பிரித்தானியாவில் மலர்கின்றது .நாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து எமது கேள்விகளையும் எம்மிடம் இருக்கும் சந்தேகங்களையும் நேரில் சந்தித்தே கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .அவ்வாறே நாமும் செயல் பட்டோம் என்பது மரபு .

இங்கே நாம் யாரையும் அச்சுறுத்தவும் இல்லை யாரையும் மிரட்டவும் ..இல்லை ..அவ்வாறு நாம் மிரட்டியிருந்தால் மீள் எனது தொலை பேசிக்கு நாம் குறும் செய்தி அனுப்பி எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் என்றதன் பின்னர் அவர் பின்னிரவின் போது தொடர்பு கொண்டு அந்த செவ்வியினை வழங்கியிருந்தார் அதற்கு எமது நன்றிகள் .நாம் மிரட்டி அவரை அச்சுறுத்தி இருந்தால் எவ்வாறு மறுநாள் அவர் எம்மை தொடர்பு கொண்டு அவர் இந்த செவ்வியினை சுய நினைவுடன் தந்திருக்க முடியும் இதுதான் எமது கேள்வி ..?

மேலும் ஆதாரம் தேவைப்படின் மீளவும் இங்கே அதனை பதிவேற்றம் செய்ய தயாராகவுள்ளோம் .

உங்கள் கருத்துக்களை கூற விரும்பின் அல்லது சத்திய பிரமாணம் செய்யாதவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ள விரும்பின் இதோ அழையுங்கள் .00447413867551 -

skype – ethiri.com2

உங்களிற்கு எனது சிறு கைமாறு….

உங்கள் இதய சுவர்களில் இதை ஒட்டி வையுங்கள் …!

ஒன்றாய் நின்றால் வெல்வாய் நீ ..!

வாக்கு பிச்சைக்கு படியேறி வந்தவரே – உங்கள்

நாக்கு நுனிகளை நறுக்கி எறியுங்கள் …

காப்போம் தமிழென கத்தி திரிந்தவரே -இன்று

கோடரி கொண்டா எம்மை கொத்த வந்தீர் …

வறுமைக்கு நீர் பாய்ச்சி வளமான வாழ்வென்றாய்

இங்கு யார் கொல்ல இன்று நீ முனைந்தாய் ..?

நாய்க்கு விசர் பிடித்தால் நானிலமது ஓடும்

உனக்கு விசர் பிடித்தால் ஊரையா நீ அழிப்பாய் …?

வாய்க்கு வந்த படி வாக்கு நீ எறிந்தாய்

எம்மை தாக்கி அழிக்கவா நமக்கு நீ எறிந்தாய் ..?

ஒட்டு உனக்கென்றால் ஓடி நீ வருவாய்

ஆப்பு எமக்கென்றால் இனைந்தா நீயடிப்பாய் …?

தாக்க வந்தவனை தடுப்பது உன் பொறுப்பு – அதை

ஆக்க நீ மறந்தால் உனக்கு அடிப்போம் நாம் ஆப்பு ..

மதி கெட்டு நீ நடந்தால் உன்னை மதிப்பாரா ..?

கதி கலங்கித்தான் உன்னை கலைத்தே அடிக்காரா ..?

வாக்கை எறிந்தவன் வார்த்தை விடுவான்

நாவறும் நா கேள்வி கேட்பான்….

நீதி தவறின் உனக்கு நீசர் அவர்தான்

ஏணியாய் நின்று உன்னை ஏற்றி விட்டாரை

தாக்க வந்தால் தமிழன் விடுவானா ..?

நீசர் நீ யானால் உனக்கு நீசர் யாம்தான்

அஞ்சாதார் அவை அடக்க அவர் மறவார்- உந்தன்

பக்கம் வந்தென்ன உன் பாதம் கழுவவோ யாம் ..?-உனக்கு

தமிழர் என்ன நக்கி பிழைக்கும் நாயோ …?

குடியறுத்தாய் கொள்கை மறந்தாய்

யார் தலை காக்க தமிழ் அழிக்க வந்தாய் ..?

பச்சோந்தியே உன் வர்ணம் என்ன …?- உன்

இச்சை நீ கழிய இவர் என்ன குப்பை தொட்டியா ..?

படுக்க பாய் தந்தார் பால்சோறு அது தந்தார்

கேள்வியது கேட்பார் கேள் ..

பண்பட்டாய் நீயானால் பதிலிடு

பதறி துடிப்பான் ஏன் பாய்ந்து கல் எறிவான் ஏன் ..?

மூளை நரம்புகள் மூக்கோடு அறுபட்டாள்

நா பேசாது நா வார்த்தை கிடையாது …

முகமூடி உள்ளிருக்கும் முகம் யாரறிவார் ..?

கரும்திரை படிந்தார் கத்தித்தான் உழல்வார் …

ஓட்டை சிரட்டைக்குள் ஓடி ஒழித்தவரே

நீர் நிறையும் என்றா நீர் நினைத்தீர் …?

வேடரே வெளியில் வாரும்

அந்த மான் அடிக்க இத்தனை ஆர்ப்பாட்டமா …?

பிச்சை பாத்திரத்தை பிடரிக்குள் மறை

நாளை நீ போக நல்தெரு தேடு …

ஒருமையில் நீ நில் பன்மை நீ கழி

நாளை உனக்கு நல்வாழ்வு இருக்கு …!

வன்னி மைந்தன்

இதோ பதிவுகாரர் எம்மை பற்றி போட்ட செய்தி .

நான் குடிபோதையில் இருந்ததாக அவர்கள் தெரிவித்த நிலையில் இதனை வைத்தே அவர்கள் மீது நாம் வழக்கு தொடர முடியும்
என்பது சுட்டிகாட்டதக்கது .தேவை ஏற்படின் அதனை செய்யவும் யாம் தயங்க மாட்டோம் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம் .
மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்ததன் காரணத்தினால் தான் லிபியாவில் கடாபிக்கு எதிராக மக்கள் கொந்தளித்து எழுந்தனர்
என்பது தெரிந்ததே .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் பிரதிநிதியான வாசுகி அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறையாளன் வன்னி மைந்தன் என்ற பெயரில் அவர்மீது பிரயோகித்த நாகரீகமற்ற சொற்பிரயோகங்களையும், அழுத்தங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான அச்சுறுத்தும் தொனியில் ஒரு பெண் செயற்பாட்டாளர் மீது, போதையுடன் உரையாடியது மட்டுமல்லாமல், திருமதி வாசுகி அவர்களது தேசியம் சார்ந்த சேவையையும் அசுத்தப்படுத்த முனைந்துள்ளார்.

பிரித்தானியாவில் குடும்ப வாழ்வுடன் பொதுச் சேவையிலும் முன்நின்று உழைக்கும் தமிழ் பெண் ஒருவர் மீதான இந்த அச்சுறுத்தலின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாகப் பேசுவதான பாணியில் அந்த வன்முறையாளன் செயற்பட்டது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஜனநாயக அமைப்பு மீது வேண்டுமென்றே சேறு பூச முயன்ற செயற்பாடாகவே கருதுகின்றோம்.

தொலைபேசி மூலமான தொடர்பாடலை சம்ம்மந்தப்பட்டவரது அனுமதி இல்லாமல், ஒரு தமிழீழப் பெண்ணை அவமானப் படுத்துகின்றோம் என்ற உணர்வேதும் இல்லாமல், ஒட்டுக்குழு பாணியில் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன், அதனை ஒரு ஊடகத்திலும் வெளியிட்டது குறித்து திருமதி வாசுகி அவர்கள் காவல்துறையிடம் முறையிட்டுள்ளார்.

திருமதி வாசுகி மீது நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் ஒலி வடிவம் :

நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணி பெண் உறுப்பினர்மீது ஊடக வன்முறை!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் பிரதிநிதியான வாசுகி ..என கூறப்பட்டுள்ளது .

அவ்வாறாயின் இந்த பத்தியினை புனைந்த நபருக்கே குறித்த வாசுகி நாடு கடந்த அரசின் உறுபினரா அல்லது
நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணி பெண் உறுபினரா என அடையாளம் காண முடியவில்லை .
அவ்வாறு இவர் ஜனநாயக அணி என்றிருந்தால் அதனை அங்கே சுட்டி காட்டியிருக்க வேண்டும் இதுதான்
விதி .

ஆனால் இங்கே அவை செவ்வனே செய்யப்படவில்லை ..இப்போது கூறுங்கள் மக்களே யார் குடிகாரன் ..?யார் மது போதையில்
இருந்துள்ளனர் என்பதை .இங்கே இந்த பத்தி எழுதியவர் தன்னை மகா மேதை என்பதை விட மேல் கூறப்பட்ட தரவுகளின்
நிலை தளர்வுகளின் பிரகாரம் இவர் மது மேதை என்பதே நன்று .

இது தான் இன்றைய பதிவு .

ஊடக நாகரிகம் ,ஊடக வன்முறை ,அடக்குமுறை, தனி நபர் தாக்குதல் ,என்பன நமக்கும் சுய தெளிதளுடன் புரியும் என்பதனை

விளங்கி தெளியுங்கள் .

Short URL: http://www.ethirinews.com/?p=913

Comments