நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான தேர்தல் யுத்தம்

தமிழ் தேசிய இனத்தின் உடமைக்குஇ உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு ஈழத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி தமிழ் இனத்தை கொத்துகொத்தாய் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை தோற்கடிக்கும் பணியில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும்.

இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கமிடவுள்ளார்.

இதனையடுத்து நெல்லை மாவட்டம் திசையைன்விளையில் நேற்றைய தினம் 25-3-2011 அன்று தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் பரப்புரையில் மாலை 6 மணிக்கு திசையன் விளையில் பிரம்மாண்டமான பொதுகூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டதின் துவக்கமாக வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு தமிழர் நிலப்பரப்பின் மற்றும் ஒரு தாய் நிலமான தமிழ் ஈழ மண்ணில் எம் இனத்தின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி ஈழத்து உறவுகளை கொன்று குவிக்க சிங்கள இனவெறி அரசிக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியை 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்பதை லட்சியமாய் ஏற்று காங்கிரசை கருவருக்க அடித்தளமாக இப் பொதுகூட்டத்தை அமைத்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது போர் முழக்கத்தை ஆரம்பித்தார்.

மேலும் இப்பொதுக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீதுஇ ஆன்றோர் அவைக்குழு உறுப்பினர் ஐயா அறிவரசன்இ மாநில ஒருங்கிணைப்பாளர்களான வழக்கறிஞர் சிவக்குமார்இ மதுரை வெற்றிக்குமரன்இ கோவை கார்வண்ணன்இ வழக்கறிஞர் நல்லதுரைஇ தலைமை கழக பேச்சாளர் ஜெயசீலன்இ பேச்சாளர் திலீபன்இ நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார்இ மகளிர் அணியைச் சேர்ந்த திருமதி அமுதா நம்பிஇ திருமதி வெற்றிக்கொடி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறவுகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான அரசியல் யுத்தத்தில் தங்களையும் ஈடுபடுத்தி கொண்டனர்.















Comments

rajamelaiyur said…
Congress will loose all 63 seats. . . Do you need some software visit www.kingraja.co.nr and www.nowaskme.co.nr