லிபியாவிற்குள் மேலை நாடுகளின் தரைப்படைகள் ஆங்காங்கு இறங்கிவிட்டன என்ற செய்தியை அறிந்து கொண்டு அப்பால் செல்வது நல்லது..
லிபியப் போர் ரஸ்யாவில் பிரதமர் – அதிபர் இருவருக்கும் இடையே மோதலை உருவாக்கியதை நேற்றய செய்திகள் தெளிவாக்கின. இன்று நேட்டோவிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் கொதி நிலைப்புள்ளிக்குள் போயுள்ளன.
01. லிபிய போருக்கு தலைமை தாங்க முடியாது என்று அமெரிக்கா தெளிவாகக் கூறிவிட்டது.
02. இப்போது நடைபெறும் போருக்கு யார் தலைமை தாங்குவது என்பது பெரும் அடிபிடியை ஏற்படுத்தியுள்ளது.
03. பிரான்ஸ் – பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் தலைமை தாங்குவதை ஜேர்மனி விரும்பவில்லை. நேட்டோவிற்கு ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலை சமாதானப்படுத்துவது பாரிய தலைவலியாக உள்ளது.
04. ஐரோப்பாவின் சளி என்று வரலாற்றுக் காலத்தில் இருந்தே வர்ணிக்கப்படும் துருக்கி நேட்டோ களமிறங்கவும், தலைமை தாங்கவும் முடியாதவாறு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை நிரந்தரமாக சேர்த்தால் லிபியாவை அழிக்க தானும் வருவதாக கோடி காட்டுகிறது. ஆனால் துருக்கியின் தலைவிதி ஐரோப்பிய ஒன்றியத்தில் சங்கமமாக முடியாத நிலையிலேயே இருக்கிறது.
04. கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் நடாத்திய முதலாவது தாக்குதல் கூட்டுப்படையின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையான இலக்கில் நடாத்தப்பட்டுள்ளது. இப்போதய தாக்குதலின் இலக்கு என்ன.. எதுவரை என்பது முக்கிய கேள்வி…
05. நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசனின் தலைமை தற்போது பெரும் சவாலை சந்தித்துள்ளது. டென்மார்க்கின் குழறுபடி அரசியல்வாதிகளை விட நேட்டோவின் அங்கத்துவ நாடுகள் மோசமான குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. அவர் விமானத்தில் பறந்தே களைத்துவிட்டார்.
06. இன்று மதியம்வரை நேட்டோவிற்குள் சரியான முடிவு எட்டித் தொடப்படவில்லை.
07. பிரான்சிய அதிபர் ஸார்க்கோஸி அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னிச்சையாக தலைமை ஏற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வடக்கு ஆபிரிக்கா பிரான்ஸ் கால் பதித்த இடம் என்பதால் மற்றவர்கள் முன்னணி வகிப்பதை பிரான்ஸ் விரும்பவில்லை.
08. கடாபிக்கு எதிராக போராடும் போராளிகள் ஓர் ஒழுங்கான தலைமை இல்லாமல் போராடுவதைப்போலவே தற்போது மேலை நாடுகளின் அணி ஓர் ஒழுங்கான தலைமை இல்லாமல் களமிறங்கியுள்ளது.
இதுதான் இன்று மதியம்வரை நேட்டோவின் நிலை…
ஆனால்… இதன் மறுபக்கம் இதுதான்..
இந்த நாடகம் பிரிக் BRIK நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவ நடப்பதை அவதானிக்க முடிகிறது. பிரிக் நாடுகள் என்றால் பிரேசில் – ரஸ்யா – சீனா – இந்தியா ஆகிய நான்கு நாடுகளுமாகும். கடாபிக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்காத நாடுகளும் இவைதான்.
இப்போது வீசப்பட்டுள்ள அம்புகள் லிபியாவைப் போல பிரிக் நாடுகளில் இறங்காது என்று அந்தந்த நாடுகளின் தலைவர்கள் எண்ணுவதற்கு ஏற்றவாறு இந்த நாடகத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரகசியம் தெரிந்து குழம்பிப் போயுள்ள ரஸ்யாவிற்கு விளக்க ஓர் அமெரிக்க பிரதிநிதி ஏற்கெனவே மொஸ்கோ போய்விட்டார். சோனியா காந்தி சென்ற வாரம் இங்கிலாந்து வந்தபோது இந்த விபரங்களை காதால் பெற்றிருப்பார்.
இந்த அலையில் பிரிக் நாடுகள் எந்த மாற்றமும் செய்ய முடியாது – என்ன செய்வார்களோ விடுவார்களோ அது அவர்களின் தலையெழுத்து…
இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அமைதியாக இருக்கிறார்கள்…
இருந்தாலும்…
நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள்.
சிறீலங்காவில் அமைச்சர் பீரீஸ் அலறியிருப்பது அவருக்குள்ள வலி காரணமாக ஏற்பட்டதுதான். புலிகள் தோற்கடிக்கப்பட்டது சிங்கள ஆட்சியாளரின் வெற்றிக்காக அல்ல என்பதை இப்போது அவர் அறிந்துவிட்டார்.
அமெரிக்கா வந்தபோது இந்தத் தகவலை அவர் செப்பமாக பெற்றுக் கொண்டதும் அலறியபடி ஓடியதும் பழைய கதை.
இதன் மர்மங்களை நம் தமிழ் தலைவர்கள் அறிந்து திரு விழிகளை அகலத்திறக்க மேலும் சில நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம்.
அல்லது எல்லாம் முடிந்த பிறகும் அவர்கள் விளங்கலாம்..
இருந்தாலும் தற்போது நேட்டோவிற்குள் நடப்பது நாடகம் என்பதை அடுத்து வரும் நாட்களில் உணரலாம்.
நிகழ்ச்சி நிரல் போடப்பட்டுவிட்டது..
மேலை நாடுகள் படிப்படியாக அதை நோக்கி நாடகத்துடன் முன்னேறுகின்றன.
இப்படி முன்னேறாவிட்டால் இந்த பொருளாதார மந்தக் குழிக்குள் இருந்து அவர்கள் வெளிவர முடியாது.
அணு குண்டு பாதுகாப்பு என்று கருதிய நாடுகளுக்கு அதுவே பாதுகாப்பில்லாத நோயாக மாறப்போகிறது.
முன்னர் சிறீலங்காவில் பெரும் ஆபத்து வரப்போவதை சுனாமி சொல்லிவிட்டு போனது போல இப்போது ஜப்பானில் வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறது..
நேட்டோவின் நாடகத்தின் மறுபக்கம் இதுதான்.
கடைசியாக வந்த செய்தி…
இப்படி ஒரு போலி நாடகம் வெளி உலகின் முன் நடந்து கொண்டிருக்க…
லிபியாவிற்குள் மேலை நாடுகளின் தரைப்படைகள் இரகசியமாக இறங்கிவிட்டன.
ஆனால் இவை தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அந்தச் செய்தி கூறுகிறது.. வேறுபல நோக்கங்களுக்காக அவர்கள் இறங்கியுள்ளார்கள் என்றும் கூறுகிறது.
தரையில் இருந்து வேவுபார்த்து தகவல் கொடுக்கும் இவர்களது பணி ஒரு வகையில் தரைப்போர்த்தான். ஐ.நா பிரேரணையை தூக்கி வீசிவிட்டே இக்காரியம் நடைபெற்றுள்ளது. இவர்களின் ஆலோசனையில் கூட்டுப்படைகள் லிபியாவில் 300 இலக்குகளில் தாக்குதல்களை நடாத்திவிட்டன. மொத்தம் 160 தோமஸ்குவாக் மிசைல்ஸ்கள் வீசப்பட்டுவிட்டன.
ஐ.நா அவுட் !
ஆனால் ஒன்று..
ஒன்றுமில்லாத ஈழத் தமிழனுக்கு அவன் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாரத இடத்திலிருந்து அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது..
ஒன்றை நினைத்தால் அது வரினும் வரும்..
அல்லது வராமலே போகினும் போகும்..
நினையாத ஒன்று முன் வந்து நிற்கினும் நிற்கும்
எல்லாம் எனையாளும் ஈசன் செயல்
என்பது பழைய பாடல்..
ஈழத் தமிழன் வாழ்வில்
நினையாத ஒன்று முன் வந்து நிற்கினும் நிற்கும் என்ற வரி நடக்கப் போகிறது..
வாழிய நேட்டோ…
அலைகள் நேட்டோ மீதான கண்காணிப்பு 24.03.2011
Comments