சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்கக் கோரி, அமெரிக்காவின் சிக்காக்கோ நகர வீதிகளில் நேற்று கையெழுத்துப் பெறும் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலரி கிளின்ரன் வலியுறுத்த வேண்டும் எனக் கோரியே இந்த கையெழுத்துப் பெறும் போராட்டம் நடத்தப்பட்டது.
அனைத்துலக மன்னிப்புச்சபையின் தொண்டர்கள் சிலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன் வீதியால் பயணம் செய்தோருக்கு சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
அத்துடன் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக நீதி விசாரணை நடத்தக் கோரும் மனுவிலும் கையெழுத்துக்களைப் பெற்றனர்.
அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்கப் பிரிவு மேற்கொண்டு வரும் இந்த கையெழுத்துக் கோரும் போராட்டத்துக்கு சிக்காக்கோவின் லோறன்ஸ் பல்கலைக்கழக மாணவர்களும் உதவியுள்ளனர்.
நேற்றைய ஒரு மணிநேரப் போராட்டத்தின் போது தன்னார்வத் தொண்டர்களாகப் பங்கேற்ற அனைத்துலக மன்னிப்புச்சபையின் 10 தொண்டர்களும் சுமார் 250 பேரின் கையெழுத்துகளைப் பெற்றுள்ளனர் என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அபூர்வா ஜோசி தெரிவித்தார்.
இந்த இணைப்பின் ஊடாக, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக நீதி விசாரணையை நடத்தக் கோரும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் போராட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ள முடியும்.
http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=15219

Comments