பிரித்தானியத் தமிழர்கள் மனதை வென்றாரா சோனியா ?


பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்ற வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவியும், உலகில் உள்ள சக்திவாய்ந்த பெண்களில் ஒருவருமான சோனியா காந்தியை திடீரென சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிட்டியதாக உலகத் தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் பி.பி.சி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். பன்நாட்டுத் தலைவர்களைச் சந்திக்க அவர் ஒதுக்கியிருந்த 20 நிமிடத்தில் தம்மோடும் 11 நிமிடங்களை அவர் செலவழித்ததாகக் கூறுகிறார் சுரேன் அவர்கள். சோனியாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதில் அவர் தாம் எப்போதும் தமிழர்கள் பக்கம் தான் என்று கூறியதாகவும், ஒலிநாடா ஆதாரங்கள் கூட இல்லமால் கூறியுள்ளார். அது அவரது சொந்தக் கருத்தா இல்லை சோனியா காந்தியால் கூறப்பட்ட கருத்தா என்பது தொடர்ந்தும் சந்தேகத்துக்கு இடமாகவே உள்ளது.

அதாவது பிரித்தானியா வந்தது, இந்தியாவின் பிரதமரோ இல்லை, குடியரசுத் தலைவரோ இல்லை, சோனியா காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு கட்சியின் தலைவி அவ்வளவுதான். அதற்கு அப்பால் அவருக்கு இந்தியாவில் என்ன சக்திகள் இருக்கிறது என்ற விடையம் அப்பாற்பட்ட விடையமாகும். இலங்கையில் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது, இபோதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அப் போரைத் தடுக்கவில்லை. மாறாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவர இருந்த தீர்மானத்தை உடைத்ததும் அவரே. இது இவ்வாறு இருக்க அடுத்த மாதம் தமிழ் நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது யாவரும் அறிந்ததே.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi75DDWHxNlA3omfXlkgUA0f0JVdRrz6P3X_uPEojW34Ep6kQZV_SmKeZazKaMjOJsfBCcND9yTVVv06IwzGsfBYDQDlMnKI_domMa86qfzzZ__PFE9TTsvexMVRXoHayhBWGjRoFrkHEUE/s1600/all+india+congress+1.jpg
இந் நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் தமது தோழர்கள் முனைப்போடு வேலைசெய்து அவர்களை வீழ்த்துவார்கள் என உணர்வாளர் சீமான் அறிவித்து இருந்தார், வைகோ, விஜயகாந்த், ஐயா நெடுமாறன் போன்ற அனைவரும் காங்கிரசை வீழ்த்த அரும்பாடுபடும் நேரத்தில், தமிழர்கள் பக்கம் தான் இருப்பதாக் சோனியா கூறியதாக ஊடகங்களுக்கு சுரேன் தெரிவித்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களையும் குழப்பும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது. தமிழர்கள் பிரதிநிதியாக சுரேனைப் போய் சோனியாவைப் பார்க்கும் படி யார் கூறியது ? இல்லை இவர் இங்கிருக்கும் அமைப்புகளோடு ஒரு முறை இது குறித்து கலந்தாலோசித்து முடிவை எடுத்தாரா ?

GTF இல் இருந்து அல்லது பிற அமைப்புகளில் இருந்து எத்தனைபேர் சோனியாவைச் சென்று பார்வையிட்டனர் என்பதனை ஏன் சுரேன் சொல்லத் தயங்குகிறார் ? அதனை அவர் வெளிப்படையாகச் சொல்லவேண்டும். 2009ம் ஆண்டு புலிகளின் அரசியல்த் துறை மற்றும் ஊடகத் துறையுடன் இவர் தொடர்புகளைப் பேணிவந்தார், அதே கால கட்டத்தில் இவர் சோனியாவுடனும் உறவுகளைப் பேணிவந்தார இல்லை, அதற்குப் பின்னர் அவர் சோனியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினாரா என்பது குறித்தும் அவர் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். வெறும் ஆங்கில ஊடகங்களில் மட்டுமே தான் பேசுவேன் என அடம்பிடித்துவரும் திரு சுரேன் அவர்கள் யாருக்காக செயல்படுகிறார் என்பதனை மறந்துவிடக்கூடாது என்பதனை நாம் இங்கே நினைவு படுத்த விரும்புகிறோம்.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்களின் மனதை சோனியா வென்றுள்ளார் என்று, இவர் கூறியுள்ள கருத்துக்களை சாதகமாகப் பயன்படுத்தி காங்கிரஸ் தமிழ் நாட்டில் பல ஊடக அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்துள்ளதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பிரித்தானியா ஆனாலும் சரி, மற்றைய நாடுகளாக இருந்தாலும் சரி, சோனியா தமிழர்களின் மனதை வென்றுள்ளார இல்லையா என்று நாம் இங்கே ஒரு கருத்துக்கணிப்பை இட்டுள்ளோம், தயவுசெய்து மக்களே இதற்கு உங்கள் வாக்குகளைப் போடுங்கள். அதன் மூலம் ஒரு தொகை மக்களாவது என்ன நினைக்கிறார்கள் என்பதனை நாம் அறிய முடியும். அதுமட்டுமல்லாது இந்தப் பெறு பேறுகளை நாம் GTFக்கும் அனுப்பி வைப்போம் என்பதனைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

http://www.athirvu.com

Comments