ஓரு வருட நிறைவுகாணும் நாடு கடந்த அரசின் மீதான ஓர் பார்வை

நாடு கடந்த அரசு தொடங்கி எறக்குறைய ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில் அதன் செயற்பாடு பற்றியும், உறுதித்தன்மை பற்றியும் மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் எவ்வாறு பேசப்படுகின்றன என பார்க்கும் இடத்து இன்னும் தெளிவு வேண்டிநிற்கும் ஒன்றாகவே காணக் கூடியதாக உள்ளது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZt6jE8uJOhCJUrLoY0E8KTpVpV6GQvQDYU1479pHpheEXGkFdyM4T5iB4hVHhMkj2mJjQmAwcxn8FbIkrpLBrpi5qXpJ-LjQtudxi2rz-XzYKq3JoR5NcPxrhpy-KSmnjqSOmEQPhmGE/s1600/25857_104571952909846_100000711251422_91887_7936700_n.jpg
நாடு கடந்த அரசு என்பது ஒரு புதிய கட்டமைப்பு இதை ஒரளவுக்காவது மக்களுக்கு புரியவைக்க வேண்டிய கடமை சமூக அக்கறை கொண்ட ஊடகங்களுக்கு உண்டு. இங்கு நாடுநாடாக நாடு கடந்த தேர்தல் நடந்து அதில் அங்கத்தவர்கள் 115 பேர் மக்களின் வாக்களிப்பின் மூலம் தேர்தெடுக்கப்படுவதாகவும், மற்றும் 20 பேர், தமிழர்கள் ஒப்பீட்டளவில் குறைந்தளவில் வாழும் நாடுகளில் இருந்து, தேர்தல் இல்லாது நியமிக்கப்படுவதாகவும் இருந்தது. இதில் ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்த சில இடங்களில், மீள் தேர்தல் வைக்கப்படவேண்டிய தேவைகளும், அதைவிட 20 பேரில் சில நியமனங்கள் இன்னமும் செய்து முடிக்கப்படாத நிலையும், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சிலர் பதவி விலகல் கடிதம் கொடுத்தமை, போன்ற சம்பவங்களாலும் 135 பேருக்குரிய ழுழ ஆசனங்களும் இன்னும் பூர்த்தியாகப்படவில்லை.

இதுவரை மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களும், நியமிக்கப்பட்டவர்களும் நாடு கடந்த அரசை ஏற்றுக்கொண்டு எல்லோருமே சத்தியப்பிரமானம் எடுத்து நா.க.அ என்பதையும் அதன் நோக்கங்களையும், குறிக்கோள்களையும்; ஏற்றுக்கொண்டு நா.க.அரசுக்கான முதல்கட்டமான யாப்பை (Constitution) எழுதுவதற்க்கு முனைந்தனர். யாப்பு எழுதுவதற்கென ஒரு யாப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கென ஏறக்குறைய மூன்று மாதமும், எழுதிய யாப்பை சரிபார்க்க என மூன்று நாட்களும் எல்லா உறுப்பினர்க்ளுக்கும் கொடுக்கப்பட்டது.

எதிர்கட்சி, ஆளும் கட்சி எனும் சாதாரண பாராளுமன்ற ஆட்சி போல் அல்லாத, நாடு கடந்து வாழும் தமிழ் மக்களைத் தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்;சி என்று ஒர் குடையின் கீழ் இணைக்கும் நா.க.அரசின் அமர்வில், முதல்கட்டமாக அதற்குரிய யாப்பை சரிவர அமைக்கும் கடப்பாடுள்ளது. இனி; வரும் காலம் காலங்களில் இந்த நா.க.அரசில் இணைபவர்;கள், இருக்கும் யாப்பின்படிதான் தேர்தலில்நின்று ஆட்சிக்கு வருவர். ஆனால் இப்போ உள்ளவர்கள் மட்டுமே, யாப்பை தாமே உருவாக்கி, அதன் பின் அதை ஏற்றுக்கொள்பவர்களான வரலாற்றுப் பொறுப்பில் உள்ளார்கள். யாப்பை ஜனநாயக முறையில் உருவாக்கி, அதை எல்லோரும் வாசித்து விளங்கிக்கொள்ள தாரளமான நாட்கள் கொடுக்கப்பட்டு, அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், எளிமையான, நேரகால நெருக்கு வாரங்களுக்கும், தொழில்நுட்ப சிக்கலுக்கும் அப்பால் பட்ட வகையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே அரசியல் தர்மம்.

தற்போது உள்ள உறுப்பினர்களில், ஒரு பகுதியினரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கையெழுத்து இடப்பட்ட, யாப்பின்படி அரசவையின் நிறைவெண் (Quorum), அரசவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்கினர் வருகை தந்திருந்தால், எந்தப் பொருட்பாடு குறித்தும் தீர்வு காண அதற்கு உரிமை உண்டு.

உதாரணமாக பிரதமமந்திரியை தெரிவு செய்யும் போது மொத்தமாக 105 பேர் இருக்கும் நாடு கடந்த அரசை வைத்துக்கொண்டால், அதில் 35 பேர் சமுகமளித்திருந்தால் அது அவ் அவைக்குரிய நிறைஎண் என்ற நிபந்தனையை பூர்த்தி செயு;யும். மேலும் தற்போதைய யாப்பின்படி சாதாராண பெரும்பான்மை (Simple majority) இருந்தாலே பிரதமமந்திரியைத் தெரிவு செய்யலாம். அதன்படி சமூகமளித்த 35 பேரில் 18 பேர் வாக்களித்தால் பிரதமரைத் தெரிவு செய்யலாம். அத்தோடு 18 வாக்கினால் மட்டும் வரும் பிரதமமந்திர்p அதன் பிறகு மூன்று (3) துணைப் பிரதமர்களை, இயன்றளவு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அவுஸ்தி;ரேலியா-நியுசிலாந்து பிராந்தியங்களில் இருந்து தன்னிச்சையாக நியமிப்பார். அத்தோடு அமைச்சரவையின் மீதி ஏழு (7) அமைச்சர்களையும் பிரதமரே தன்னிச்சையாக நியமனம் செய்வார்.

பின்பு ஓவ்வொரு அமைச்சர்களும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களுக்கு தனித்தனியான துணை அமைச்சர்களை நியமிக்கலாம். இந்நியமனமானது அரசவை உறுப்பினர்களில் இருந்து இடம்பெறும். இவ்வாறு நியமிப்பவர்களுக்கு அமைச்சர்களுக்கான உரிமைகள் இருக்காது.

அத்தோடு இப்படி 18 வாக்கினால் மட்டும் வரக்கூடிய நா.க.அரசின் பிரதமமந்திரியை விலக்குவதற்கு இப்போது உள்ள யாப்பின்படி, பாராளமன்றத்திற்கு மூன்றில் இரண்டு பேர் வாக்களிக்க வேண்டும். அதாவது மேற்குறித்த உதாரணத்தின் படி மொத்த உறுப்பினர்கள் 105 என்று இருக்கும் இடத்தில் 70 பேர் அரசபைக்கு சமூகமளித்து, சார்பாக வாக்களிக்க வேண்டும். நாடுகடந்த அரசிற்கான கட்டமைப்பில் ஓர்நாட்டில், ஓர்; இடத்தில் 70 மேல்பட்ட உறுப்பினர்கள் ஒன்றாக கூடுவது என்பதுவும் அவர்கள் எல்லோரும் ஒன்றுக்கென வாக்களிப்பதுவும் நடைமுறை சாத்தியம் குறைந்ததொன்றாகும்.

அத்தோடு அரசியல் அமைப்பிலோ, யாப்பிலோ மாற்றத்தை கொண்டுவருவது என்றாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.

ஆகவே தேர்தெடுக்கப்பட்ட முப்பதிற்கு மேற்பட்ட பாராளமன்ற உறுப்பினர்கள். நா.க. அரசிற்குக்கீழ் தனிமனிதன் ஒருவருக்கு அதிகப்படியானதும், அளவிற்கு மீறியதுமான சக்தியை, கொடுப்பது ஜனநாயகத்திற்கு மீறிய முறை என கையெழுத்துப் போட மறுத்து இதில் மாற்றங்கள் செய்யும் படி கோரிவருகிறார்கள். அவர்கள் பிரதமமந்திரியை தெரிவு செய்யம் போது மூன்றில் ஒன்று என்பதற்கு மாறாக, வருகை தந்த உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையும், அது போல துணைப்பிரதமர் மூவரும் பிரதமரால் தன்னிச்சையாக தெரிவு செய்வதற்கு பதிலாக அதுவும் உறுப்பினர்களின் சாதாரண பெரும் பான்மையால் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும், ஆனால் ஏழு மந்திரிகளை, பிரதமமந்திரி தன்னிச்சையாகத் தெரிவு செய்ய உடன்படுகிறார்கள்.

சட்ட திட்டமென்று பார்த்தால், இந்த தேர்தல் குழப்பங்களை தீர்ந்து வைப்பதிலும், இன்னும் தொங்கு பறியாக இருக்கும் தேர்தலை வைத்து முடிப்பதிலும,; எங்கு சட்டதி;ட்டங்கள் நிற்கின்றன என்பதற்கும் நா.க.அரசு பதில் சொல்ல வேண்டியிருக்கும். தேவையான போது தேசவழமை சட்டம் போன்று இயங்குவதும், மற்றைய நேரங்களில் அரசாங்கம் போன்று சட்டதிட்டங்களுக்கு அமைய நடப்பதும் ஒர் விடுதலை அரசியலுக்கு சரியான அணுகு முறையல்ல. இதில் இருபகுதியினரும் ஓர் சமரசத்திற்கு வருவது நாடுகடநத அரசுக்கு பலம் சேர்க்கும். ஏனெனில் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்கள் பின்னாலும் ஆயிரக்கணக்கில் அவர்களுக்கென வாக்களித்த மக்கள்கள் இருப்பதை மறுத்துவிட முடியாது.

சின்னதாகத்தொடங்கி வளர்ந்து, வளர்ச்சிப்பாதையில் மக்களை உள்வாங்குவது இலகு, அதுதான் இயக்கையோடு ஒத்துப்போவதும் கூட. ஆனால் காலத்தின் கட்டாயத்தாலும், அதன் உள்மான கட்டமைப்பின் படியும் பத்து மாதம் சுமக்காமலே பிரசவித்த பிள்ளை போல நாடுகடந்ந அரசு மக்கள் மத்தில் உருவாகிவிட்டது பிரமிட் மாதிரிவடிவத்தில்; மேல் இருந்து கீழ்வரும் நா.க.அரசில் உறுப்பினர்கள் மிகவும் அவதானமாக, சுயநலம், பட்டம், பதவி, தான்மை (ego) எல்லாவற்றையும் கடந்து தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற கொள்கைப்பிடிப்போடு ஒருங்கிணைந்து இருப்பது தான் அத்திவாரம், அது இருக்கும் என்றால் பேச்சுவன்மை, தமிழ்அறிவு, மேடைக்கூச்சமின்மை, தமிழர் வரலாற்று பற்றிய அறிவு, அவர்கள் இருக்கும் நாட்டுக்குரிய மொழியறிவு, அரசியல் அறிவு, தமிழ் வரலாறுபற்றிய அறிவு இவற்றில் எது ஒன்று இல்லாவிட்டாலும் அதைக் காலப்போக்கில் அறிந்து, படித்து வளர்ந்துக்கொள்ள முடியும்.

இந்த நவீனயுகத்திலும் தொடர்பாடல் நா.க.அரசில் ஒருகுறைபாடாகவே சொல்லப்படுகிறது;. செலவு குறைந்த இடத்தில் கிரமமான சந்திப்புக்கள் என்பன சாதாரண உறுப்பினர்களுக்கிடையான மனவேறுபாடுகளை குறைப்பதோடு, குழுநிலை அரசியலையும் இல்லாது ஒழிக்கும். மிகவிரைவாக இக்குறைகளை நிவர்த்தி செய்து யாப்பு தொடர்பானதும், தேர்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் முடிவை சொல்ல வேண்டிய கடப்பாட்டில் உள்ளது. நா.க.அரசு என்பது ஒரு நீண்ட கால திட்டம், அது இந்த மூன்று வருடத்தில் முடிந்து விடக்கூடியதொன்றல்ல. அத்தோடு இந்த பகுதியில் யாப்பு என்பதுவும், பிரதமந்திரியும், அவருக்கான நிறைவேற்று அதிகாரங்களும், பதவிபகிர்தளிப்பும் முக்கியமானதொன்று, இக்கால கட்டத்தை அதற்காக செலவிடாது அதிகார பரவலாக்களை மட்டுப்படுத்தும், வகையிலும் நாடுகடந்த என்ற சொல் பிரயோகத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலும் நடந்து கொள்ளாது இருதரப்பினரும் ஒரு சமரசத்திற்கு வரவேண்டும். தமிழர்களால் தமிழர்களின் நலன்கருதி எழுதப்பட்ட யாப்பு ஏதோ திருத்த முடியாத மீள் சரிபார்க்க பட முடியாத ஒன்றாகப் பேசப்படமுடியாது.

அத்தோடு இதில் ஏற்கனவே இணைந்து கொண்டவர்களும் தமக்கு இப்படியான குறைபாடுகள் இருப்பது தெரிந்தும் அதை காலப்போக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று, ஒரு வண்டியில் முக்கிய பாகங்கள் இல்லாவிட்டாலும் அதை தள்ளியாவது கொண்டு போகலாம் எனச் செயல்படுவதும், இன்னும் ஒரு பகுதியினர்; தாயகத்தில் உள்ள மக்கள் இன்னல்களை அநுபவிக்கும் போது நாம் இந்த யாப்புப்பற்றி யோசிக்காது ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் எமது மக்களுக்கு, என இறங்கி விட்டதாகச் சொல்வதும் நாடுகடந்த அரசின் கொள்கைத்திட்டத்தை சரிவர விளங்கிக் கொள்கிறார்களோ என்ற கேள்விஎழுகிறது.

நாடு கடந்த அரசு என்ற கட்டமைப்பு, தள்ளிக்கொண்டு போவற்காக உருவாக்கப்பட்டதொன்றல்ல. அது அதன் உருவாக்கத்திலும், கட்டமைப்பிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் ஜனநாயக கட்டமைப்பை பிரதிபலிப்பதாகவும், அதில் செயல்படும் உறுப்பினர்கள் அனைவரும், மக்களும் அதன் வெளிப்பாட்டுத்தன்மையிலும், நம்பகதன்மையிலும், நம்பிக்கை வைக்கக்கூடியவகையில் அமைவதாகவும் இருக்க வேண்டும். நாடு கடந்த அரசசை உருவாக்கும் பணியில் முதற்கட்டமாக இணைந்துள்ளவர்கள் அதை மக்களும், மற்றைய அரசுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்ற வேண்டும். தாமே முழமனதாக ஏற்றுக்கொள்ளாத ஒன்றில் ஈடுபடுவது இந்த மூன்று வருடகாலப்பகுதியை வாதிப்பிரதிவாதம் இல்லாது ஒட்டிவிட்டு போய்விடவேண்டும் என நினைப்பதற்கு ஈடாகும்.

அதே போன்று இந்த ஒன்பது மாதமும் யாப்பின் மேல் கையெழுத்து போடாவிட்டாலும் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்து கொண்டு தான் இருக்கிறோம் என்று ஒரு சாராரும், அதே நேரம் மற்றவர்கள் இந்த ஒன்பதுமாத காலமும் மக்களுக்கு செய்த வேலைகளைப் பார்க்கும் போது அதைச்செய்வதற்கு நாடு கடந்த அரசில் இல்லாமலும், சாதாரண தமிழனாகவோ அல்லது ஏற்கனவே எண்ணற்று இருக்கும் தமிழ் தொண்டு நிறுவனமொன்றின் ஊழியராகவோ செய்திருக்கலாம். அதற்கு நாடுகடந்த அரசில் அவசரமாக இணைந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை என்ற இன்னெரு சாரார் பற்றிய கருத்தும் உண்டு.

ஒரு அமைப்புக்குள்ளேயே இரு பகுதியினர் செயப்படுவதுவும், ஏற்கனவே இருப்பவர்கள் அமைப்பின் கட்டமைப்பில் முழுநம்பிக்கையில்லாது இயங்குவதும் நாடு கடந்த அரசை பலவினமாக்குவதோடு இனிவரும் காலத்தில் என்ன செய்ய வேண்டும், எது செய்யக்கூடாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாகவும் அமைந்துவிடும்.

– ஒரு பேப்பருக்காக சுகி

Comments