‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ உடையாமல் காப்போம் சரியாயின் தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம்

மே 18 தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி. ஆனால் தமிழர் தேசியத் தலைமை ஆயுதப் போராட்டத்தை மௌனித்து, தற்போதைய உலக ஒழுங்குக்கிற்கேற்ப போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு, குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களிடம் விட்டுச் சென்றிருக்கிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZt6jE8uJOhCJUrLoY0E8KTpVpV6GQvQDYU1479pHpheEXGkFdyM4T5iB4hVHhMkj2mJjQmAwcxn8FbIkrpLBrpi5qXpJ-LjQtudxi2rz-XzYKq3JoR5NcPxrhpy-KSmnjqSOmEQPhmGE/s1600/25857_104571952909846_100000711251422_91887_7936700_n.jpg
தேசியத் தலைமை விட்டுச் சென்ற இடம், இலக்கை அடைவதற்கான இடத்திற்கு மிக அண்மையே. ஆனால் இலக்கை அடைவதற்கான வேலைத்திட்டங்கள், எதனையும் நம் எவரும் எதுவும் செய்யாதவிடத்து தேசியத் தலைமை விட்டுச் சென்ற இடம் இலக்கை அடையவேண்டிய இடத்திலிருந்து வெகு தூரத்துக்கு சென்று விடும். இதனையே சிறிலங்கா அரசும் அதற்கு துணைபோகும் குழுக்களும், 30 வருட விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களை முகாம்களுக்குள்ளும், கூடாரத்துக்குள்ளும் விட்டுச் சென்றுவிட்டதாகவும், தமிழர் வரலாற்றை பின்தள்ளிவிட்டதாகவும், கூறி தமிழ் மக்களையும் அவர்களது அரசியல் தலைமைகள் என்று சொல்லிக்கொள்வோரையும் விடுதலை என்ற முன்னோக்கிய சிந்தனையிலிருந்து கொடுத்ததை வாங்கிக்கொள்ளும் சலுகை அரசியல் என்ற அடிமைத்தன மாயைக்குள் இழுத்துச் செல்கின்றன.

அத்துடன் மகிந்த அரசாங்கத்திற்கெதிராக கேள்வி கேட்க முடியாத அளவிற்கு ஈழத்தமிழ் மக்களும் அரசியற் தலைமை என்று சொல்லிக் கொள்வோரும் வாய்மூடி மௌனிகளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் தேசிய எழு;சசி என்பது தற்போதைய சூழ்நிலையில் புலம்பெயர் தமிழர் மத்தியிலிருந்தே கிளர்ந்தெழ வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. தற்போதுகூட மகிந்த அரசால் தமிழ் மக்கள் மேல் இழைக்கப்படும் அநீதிகளையும் கொடுமைகளையும் ஏன் மே 18 வரை மகிந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை கூடத் தமிழ் மக்கள் குறிப்பாக தமது உறவினர்களை இழந்த கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரர்களால் கூட வாயிருந்தும் சொல்ல முடியாதுள்ளனர். (சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக மகிந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் உண்மையைக் கண்டறியும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு கூட சாட்சியமளிப்பதற்கு சரியான கால அவகாசம் கொடுக்கப்படவில்லை. அளிக்கப்பட்ட சாட்சியங்களும் போர் குற்ற விசாரணைகளுக்கு எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே)

இதனையே ‘விக்கிலீக்ஸ்’ இணையத்தளம் வெளிப்படுத்திய ஆவணத்தில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்கள் காட்டும் ஆர்வமளவு சிறிலங்காவிலிருக்கும் தமிழ் மக்கள் காட்டவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்

எனவே, தற்போதைய புதிய ஒழுங்கில் ஈழத்திற்கு தமிழ் தேசியத்தை எழுச்சி கொள்ள வைப்பதற்கும் அதனை சர்வதேச அரங்கில் தமிழீழம் என்ற இலக்கை நோக்கி செல்வதற்கும், புலம் பெயர் தமழ் மக்கள் பல கப்பல்களில் பயணிக்கின்றனர். உலகத்தமிழர் பேரவை, மக்களவை மந்றும் நாடுகடந்த அரசு என்பனவையாகும் இவற்றில் முக்கியமானதும் அரசியல் பிரகாசம் நிறைந்ததுமானது நாடு கடந்த அரசு என்ற புதிய கப்பல், நல்ல கப்பல் என்பது உண்மையே!

ஆனால் இந்தக் கப்பல் பயணம் உலக வரலாற்றில் ஒரு வெள்ளோட்டம் என்பதும் உண்மையே.

இந்த நாடுகடந்த அரசு என்ற கப்பல் புயல், மழை, சுனாமி இவைகளுக்கு மத்தியில் தாக்குப்பிடித்துச் செல்லுமா? பனிப்பாறைகளையும், உடைத்துக் கொண்டு செல்லுமா? அல்லது ரைட்டானிக் கப்பல் போல் முடிவு இருக்குமா என்பது யாரக்கும் தெரியாது. ஆனால், இது புதிய முயற்சிதான் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழர்களின் அரசியல் போராட்டம் உடனடியாக நகர்வதற்கு தற்போதைக்கு சிறந்த கப்பல் இது.

அதைவிடுத்து இதன் மூலம் கட்டாயம் நாடுகடந்த அரசாங்கம் என்ற செயற்றிட்டத்தின் மூலம் தமிழீழம் பெறலாம் என்றோ, அல்லது இது சிலர் தமது இருப்புக்காக மேற்கொள்ளும் பித்தலாட்டம், இது வெறும் காகிதக் கப்பல்தான் என்று விமர்சிப்பதை விடுத்து நாம் யதார்த்தமாக, அனுகூலமாக சிந்தித்தது செயற்பட்டு அதற்கு ஆதரவு கொடுப்பதே தற்போதுள்ள கடமை.

தந்போது தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்காக சர்வதேச அரங்கில் அரசியல்ரீதியாக விற்பதற்கு இலகுவான வழி. நாடுகடந்த அரசு என்பதாகவே உள்ளது. இது யதார்த்தமான உண்மையாகும். நாடுகடந்த அரசாங்கத்தின் சரியான அரசியல் செயற்பாட்டுக்கும் நகர்வுக்கும் ஆதரவு கொடுக்கும், தட்டிக் கொடுக்கும் பக்குவம் அனைவருக்கும் இருக்கவேண்டும். பிழையான சமிஞ்ஞை தெரியும்போது அதனை சுட்டிக்காட்டியும், மக்களுக்கு தெரியப்படுத்தவும், சரியாக விமர்சிக்கவும், தயங்கவும் கூடாது. இதனையே நாம் இங்கு செய்கிறோம்.

இதனை பிழையாக விளங்கிக் கொண்டு சிலர் அல்லது சிறிலங்கா அரசுக்கு துணைபோவோதா? கனடா ‘உலகத்தமிழர்’ பத்திரிகை நாடுகடந்த அரசுக்கு எதிராகச் செயற்படுகின்றது என்ற பொய்ப்பிரசாரத்தைக் கிளப்பிவிட்டுள்ளனர். அதன் ஆசிரியர் குழுமத்தை சார்ந்தோர் மீது வசைபாடுகின்றனர்.

எத்துயர்வரினும் தமிழ்த் தேசிய எமுச்சிக்காக எப்போதும் குரல் கொடுக்கத் தயங்க மாட்டோம். எவராயினும், எந்த அமைப்பின் செயற்பாடாயினும், சரியானதாக இருந்தால் சேர்ந்து பணியாற்றுவோம். ஆதரவளிப்போம். தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம்;. மக்களுக்கு தெரியப்படுத்துவோம். இதனைத்தான் நாடு கடந்த அரசு விடயத்தில் செய்தோம். செய்துகொண்டிருக்கிறோம். எதிர்காலத்திலும் செய்வோம்.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் தமிழரின் அரசியல் நகர்வுகள் தடம்புரளுமிடத்து, அதனை தட்டிக் கேட்பதற்கு ஈழத்தில் தேசியத் தலைமை இருந்தது. நாடு கடந்த அரசாங்கம் என்பது முப்பது வருட போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில, நாடு கடந்த அரசாங்கம் என்பது தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வென்பதால், அதனை சரியான இலக்கை நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியத்துடன் ஆரம்பம் முதல் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் கனடா ‘உலகத் தமிழர்’ பத்திரிகை என்னும் ஊடகத்திற்கு உண்டு என்பதுடன் அதனது தலையாய கடமையும் கூட.

இதனை கருத்திற் கொண்டு நாடு கடந்த அரசு அறிமுகம் செய்யப்பட்ட போது அதனை ஆதரித்து செய்திகளையும், கட்டுரைகளையும், வெளியிட்டது. நாடு கடந்த அரசும், மக்களவையும் தேசியத்தின் இரு கண்கள் என வர்ணித்தோம்.

நாடு கடந்த அரசின் தேர்தல் நடைபெற்ற சமயம் ‘கனடா உலகத்தமிழர்’ சுட்டிக்காட்டிய வேட்பாளர்களே கூடுதலாக தெரிவு செய்யப்பட்டனர் என்பதும் கவனிக்கப்படவேண்டிய விடயம்.

தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் தேர்தல் முடிவுகளை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தோம்.

நாடு கடந்த அரசு முதலாவது அமர்வு நடைபெற்றது. நாடு கடந்த அரசு பிரகடனப்படுத்தியவுடன் அதற்கு அதி முக்கியத்தவம் கொடுத்து பிரசுரித்தோம்.

நாடு கடந்த அரசு ஒற்றுமையாக செயற்பட்டு இலக்கை அடைய வேண்டும் என்பதே எமது பேரவா. ஆனால் நாடு கடந்த அரசின் அதிகாரங்கள் ஓரிடத்தில் அல்லது ஒருவரின் கைக்குள் அடங்கியிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அரசியல் யாப்பு உருவாகும்போNது சம்பந்தப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஏனெனில் தமிழர் வரலாறே துரோகத்தனத்தால், காட்டிக்கொடுப்பால், எதிரிக்குத் துணைபோவதால் அழிந்து போவதுதான் தொடர்கிறது. எனவே அதிகாரம் நாடாளுமன்ற அவையினூடாகவே நாடு கடந்த அரசின் முதல்வருக்கு செல்லவேண்டும். அத்துடன் அவருக்கு மட்டும் அதிகாரம் இல்லாமல் அவருக்கு அடுத்தடுத்து துணை முதல்வர்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த மூன்று துணை முதல்வர்களை நாடாளுமன்ற அவைதான் தெரிவு செய்ய வேண்டும் என்பதுதூன் எமது வேண்டுகோள்.

மீண்டும் சொல்கிறோம். துரோக வரலாறு தொடரக் கூடாது. அதனை தவிர்ப்பதாயின் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவியாது நாடாளுமன்ற அவையிடம் பரந்திருக்க வேண்டும். இதனையே நாம் வேண்டுகோளாக விடுத்தோம்.

(இதற்கு பிற்பாடு இரண்டாவது அமர்வில் நடைபெற்றவற்றை நாம் இதில் தெரியப்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் தொடர்ந்தும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதற்காகவே.)

சிலர் கேட்கலாம், தற்போதுள்ள முதல்வர் நல்லவர்தானே. அவர் துரோகம் செய்யமாட்டார் என்று. அவரை நல்லவராக வைத்துக் கொண்டாலும், அவருக்குப் பின்னர் எதிர்காலத்தில் அவரிடத்துக்கு வருபவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மிண்டும் மீண்டும் கூறுகிறோம். துரோக வரலாறு தொடரக்கூடாது.

இன்னுமொரு கேள்வியையும் கேட்கலாம். உதாரணத்துக்கு கனடாவை எடுத்தக் கொண்டால் பிரதமரிடம்தானே எல்லா அதிகாரங்களும் உண்டு என. இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் அவர் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதாயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவேண்டும். மற்றையது கனடா அரசு பூரண இறையாண்மையுள்ள அரசு. யார் பிரதமராக வந்தாலென்ன நாடு நாடுதான். ஆனால் நாடு கடந்த அரசு என்பது உருவமற்றது. வெறும் எழுத்தில் மட்டும்தான். அதன் முதல்வர் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து ஒரு அறிக்கை விட்டாலோ அல்லது இந்திய அரசுடன் சேர்ந்து ஒரு அறிக்கை விட்டாலோ, துரோக குழுக்களுடன் சேர்ந்து ஒரு அறிக்கை விட்டாலோ காணும் சர்வதேச அரசியலை குழப்புவதற்கு. ஏன் அதற்கு மேல் போய் எமது மக்களை குழப்புவதற்கு.

மேலும் இரண்டாவது அமர்வில் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை உருவாக்கி அதன்மூலம் தேசியத்தை நேசிப்பவர்களை அச்சுறுத்தினர் இக்காரணத்தினால் தேசியத்தை நேசிப்பவர்கள் அச்சபையிலிருந்து தமது எதிர்ப்பை தெரிவித்து வெளியேறினா.; வெளியேறியவர்களின் அறிக்கையை அதாவது ‘நாடு கடந்த அரசின் இரண்டாவது அமர்வில் நடந்தது என்ன’ என்ற அறிககையை பிரசுரித்தோம். இதனை பிரசுரித்தது ஒரு தலைப்பட்சமாக அல்ல. நாடு கடந்த அரசு சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காகவே. நாம் எதனையும் ஆரம்பத்திலேயே செய்துவிட வேண்டும்.

கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தளமாக அமைத்துக்கொள்ள விரும்பிய தமிழ்த் தேசியவாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியவாதிகள் இரண்டாவது அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதன் பின்னர் தொடர்ந்த அவை நடவடிக்கையின்போது மிகக் குறைந்த அங்கத்தவர்களே அவையில் இருந்த காரணத்தினால், அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய அரசியல் யாப்பு விவாதத்திற்கோ, அங்கீகாரத்துக்கோ விடப்படவில்லை.

ஆனாலும், சம்பந்தப்பட்டவர்கள் தமது கைப்பிடி நழுவிவிடக் கூடாதுஎன்பதற்காக அந்த அவையில் யாப்பு நிறைவேற்றப்பட்டதாக பொய்யான அறிவித்தல் கொடுக்கப்பட்டது

மோசடியான தமது வார்த்தைகளை நியாயப்படுத்தும் விதமாக, மக்கள் பிரதிநிதிகள் அனைவரிடமும் அவையில் அங்கீகாரம் பெறாத யாப்பு மீது பதவிப் பிரமாணம் கோரப்பட்டது. இதனை, தமிழ்த் தேசியவாதிகள் முற்றாக நிராகரித்ததுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தொடர்ந்தும் பிழையான பாதையில் செல்வதை அனுமதிக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்தனர். இதன்படி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது முதல் இதுவரை நடைபெற்ற முறைகேடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கு 10 அம்சக் கோரிக்கைகள் கொண்ட கடிதம் ஒன்று 17-02-2011 அன்று தமிழ்த் தேசியவாதிகளால் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளிப்பதற்காக திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தங்களது பிழைகளும். ஜனநாயக விரோத செயற்பாடுகளும் தமிழ்த் தேசியவாதிகளால் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக, தம்மோடு இணைந்து பணியாற்ற மறுத்து, தமிழீழ விடுதலையை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்ட தமிழ்த் தேசியவாதிகளை, போலியான காரணம் ஒன்றினூடாக வெளியேற்றும் முயற்சி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவர் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு வார கெடு விதித்து மக்கள் பிரதிநிதிகள் 05-03-2011 இற்கு முன்னர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பை ஏற்று, கையொப்பமிடாத மக்கள் பிரதிநிதிகள் பதவியிழப்பார்கள் எனக்கூறப்பட்டுள்ளது

இது புலம்பெயர் தமிழ் மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டாவது அர்விலிருந்து வெளியேறிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி ஓர் சரியான முடிவுக்கு வருமாறு பல தரப்பிலருந்தும் உருத்திரகுமாரன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது உண்மையே. இதற்கு சாக்குப்போக்கக் காரணங்கள் கூறப்பட்டு வந்ததும் உண்மையே. இறுதியில் அந்த தேசியவாதிகளை வெளியேற்றுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது கவலைக்குரிய விடையம். இது தேசியவாதிகளை திட்டமிட்டு, தருணம் பார்திருந்து, ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வெளியேற்றுவதுபோல் தோற்றமளிக்கின்றது

இச்செயலானது புலம்பெயர் மக்களின் பலத்தை இரண்டாக உடைக்கும் செயலை ஒத்தது. முள்ளிவாய்ககாலுக்குப் பின்னரான புலம்பெயர் மக்களின் மன எழுச்சியை சோர்வடைய வைக்கும் செயல் இது.

நாடுகடந்த அரசின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் மதிப்பும் சிதறடிக்கப்படும். இச்செயல் சிறிலங்கா அரசன் நிகழச்சி நிரலுக்கு ஒத்த செயற்பாட்டை கொண்டதானதென மக்கள் அச்சம் கொள்வர் .தமது அரசியல் ஆதரவுத் தளத்திலிருந்து தூர விலகிச்செலலும் அபாயம் உண்டு
இது தமிழீழம் நோக்கிய சிந்தனையிலிருந்து மக்கள் மனதை சலிப்படையச்செய்வதற்கு உந்துதலாக அமையும் பேரபாயம் உண்டு

தமிழ் மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். உண்மையுடன் போராடிய வீரர்கள் அனைத்துலக சதியினால் மௌனித்தும் போயினர். இன்று வெறும் முடங்களாய் தமிழழினம் நிற்கிறது.

எனவே நாடு கடந்த அரசின் மூலம் ஏதாவதை அடைவதாயின் அது ஆரம்பம் முதலே சரியான பாதையில் பயணிக்க வேண்டும். அதனைத்தான் நாம் விரும்புகின்றோம்.

இன்று நாம் விரும்பியோ, விரும்பாமலோ, மகிந்த அரசு விரும்பியோ, விரும்பாமலோ மேற்கத்தேய நாடுகளுக்கெதிரான அணியில் பயணிக்கின்றது.

இது மேற்கத்தேய நாடுகளுக்கு எரிச்சலூட்டுகின்றது. இதனால்தான், நாடுகடந்த அரசு இந்நாடுகளில் சுதந்திரமாக செயற்பட முடிகின்றது. ஏன் நாடுகடந்த அரசு பிரகடனம் அமெரிக்க அரசியனல் யாப்பு பிரகடனம்; செய்யப்பட்ட பிலடெல்பியாவில் பிரகடனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இன்னுமேன், நாடுகடந்த அரசின் முதல்வர் அமெரிக்காவில் இருப்பதும் சாதகம்தான். இதனை நாம் அறுவடை செய்ய வேண்டும். இதனைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.

நாடுகடந்த அரசின் இரண்டாவது அமர்விலிருந்து வெளியேறியவர்களும், முதல்வரும் மந்திரி சபையில் இருப்பவர்களும் அதனை ஆதரிக்கும் உறுப்பினர்களும் சேர்ந்து பயணிக்க வேண்டும்.

தேசியத் தலைமையின் பேச்சுவார்த்தைக் குழுவில் அங்கம் வகித்தவரான தற்போதைய முதல்வர் அனுபவமுள்ளவர். அனைவரையும் அணைத்துச் செல்லவேண்டியவரும்ம்கூட

அவர் வெளிநடப்புச் செய்த, தேசியத்தை நேசிக்கும் அந்த அங்கத்தவர்களை அரவணைத்து தமிழினத்தின் எதிர்கால நலன் கருதி யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி தீர்க்கதரிசனம் மிக்கவர் என்பதை வெளிப்படுத்துவார் என்பதை எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், இரண்டாவது அமர்வு நடைபெற்று 4 மாத காலம் ஆகின்றது. மந்திரி சபையும் அமைத்தாயிற்று. இன்னமும் வெளிநடப்புச் செய்தவர்களை அரவணைத்துச் செல்வதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை மாறாக வெளியேற்றுவது என்ற முடிவானது மிகவும் கவலையளிக்கின்றது என்பதை மக்களுக்குத் மீண்டும் தெரியப்படுத்துகின்றோம்.

எனவே, இரு தரப்பும் ஒருவரொருவர் விட்டுக்கொடுப்புடன் ஒன்றிணைந்து நாடுகடந்த அரசு என்னும் கப்பலின் நங்கூரத்தை சரியான பாதையில் பிடிக்குமாறு வேண்டுகின்றது ‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகை.

சரியாயின் தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம்.

‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகை.

Comments