கடாபிக்கு கோத்தபாய மந்திர ஆலோசனையா ?

1969ம் ஆண்டு முதல் லிபிய நாட்டை தனது இரும்புப் பிடியில் வைத்திருப்பவர் அதிபர் கடாபி. அவரைப் பதவி விலகச் சொல்லி பல மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது என்னவோ உண்மைதான். ஆனல் இங்கே பல மறைமுகக் குழப்பங்களும், கூட்டுச் சதிகள் காணப்படுவதை எவராலும் மறுக்கவும் முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழலைப் பயன்படுத்தி அமெரிக்கவும் அதன் கூட்டு நாடுகளும் கடாபியைப் பதவி விலகச் சொல்லி அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், தமது நாட்டில் உள்ள எண்ணைக் கிணறுகளை இந்தியா, சீனா, மற்றும் ரஷ்ஷியா ஆகிய நாடுகளிடம் தான் கையளிக்கவேண்டி வரும் என கோத்தபாய- மகிந்த கூட்டாக விடும் அச்சுறுத்தல் பாணியில் கடாபி இன்று தேசிய தொலைக்காட்சி மூலம் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே எணை ஏற்றுமதியில் 4ம் இடத்தில் இருக்கும் நாடு லிபியா ஆகும். அங்கே உள்ள எண்ணைக் கிணறுகள் பல வெளிநாட்டு நிலையங்களுக்கு குத்தகை அடிப்படையில் விடப்பட்டுள்ளதோடு, ஏனைய குதங்கள் அதிபர் கடாபியினால் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. கடந்த மாதம் எகிப்த்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சிபோல லிபியாவிலும் ஏற்பட்டுள்ளதாக மேற்குலக தொலைக்காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்ப்போனால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட தகவலே ஆகும். லிபிய நாட்டில் எண்ணை வளம் மிக்க பகுதிகளில் ஒன்றான பெங்கஸ் நகரில் உள்ள இராணுவ ஆயுதக் கிடங்கு ஒன்றை அல்கைடா தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.

லிபிய நாட்டு இராணுவத்தினர் போல வேடமிட்ட இத் தீவிரவாதிகள், அங்கு நடந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கண்மூடித்தனாகச் சுட்டுள்ளனர். இதனை ஊடகங்கள் லிபிய இராணுவத்தின் அத்துமீறிய செயலாகக் கண்டித்து, உடனடியாக ஜ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி, பொருளாதாரத் தடைகளை லிபிய நாட்டுக்கு எதிராகக் கொண்டுவந்துள்ளது. லிபிய நாட்டில் இறந்த பொதுமக்களோ சில நூற்றுக்கணக்கானவர்கள் தான். அதற்கு அவசரமாகக் கூடிய பாதுகாப்பு கவுன்சில், இலங்கையில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் இறந்தபோது என்ன செய்தது, இல்லை எங்கே வேடிக்கை பார்த்தது என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.

அதாவது, மேற்குலகம் லிபிய அதிபருக்கு எதிராகத் திரும்பும்போது அதனை எதிர்கொள்ள அவருக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் இலங்கை அதிபர், மற்றும் கோத்தபாயவால் கடாபிக்கு சில செய்திகள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்பதே தற்போதைய சந்தேகங்கள் ஆகும். ஏன் எனில் மேற்குலகம் இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அழுத்தைத்தை இலங்கைக்குப் பிரயோகிக்கும்போது, இலங்கை மேற்கொண்ட சில ரஜதந்திர நடவடிக்கைகளையே, லிபிய நாட்டு அதிபர் கடாபியும் மேற்கொண்டுள்ளார். அதாவது இந் நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, இந்தியா இலங்கையூடாக சில யோசனைகளை முன்வைத்துள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

மேற்குலகம் கடாபியை எதிர்க்கும் போது, அவர் தற்போது இந்தியா, சினா, மற்றும் ரஷ்யாவிற்கு தான் உதவுவேன் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். உலகில் பல நாடுகளை ஆக்கிரமித்து, அதே வேளை ஜனநாயக் பற்றிப்பேசி நாடகம் போடும் அமெரிக்கா, ஈராக்கில் உள்ள அனைத்து எண்ணைக் குதங்களையும் தாமே இயக்கி வருகிறது. எந்த ஒரு நாட்டில் எது கிடைக்கும் அதனால் எவ்வளவு லாபம் இருக்கும் எனத் தெரியாமல் அமெரிக்கா காலைவைப்பதே இல்லை. அதுபோல ஆக்ப்பானிஸ்தானில் தான் உலகிலேயே மிக விலைமதிப்பற்ற வைரங்கள் கிடைக்கின்றன என்பதனையும் அமெரிக்க அறிந்து வைத்திருக்கிறது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் அது வைரத்தை அகழ்ந்தெடுக்கும் தொழிற்ச்சாலைகளை நிறுவியும் உள்ளது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது.

எனவே தக்கு ஏற்றால் போல ஒரு அமைப்பை தீவிரவாதி என்பதும், தனக்கு ஏற்றால் போல ஒரு நாட்டிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி அதனைக் கைப்பற்றுவதும், தனக்கு ஏற்றால் போல ஜ.நா சபையை ஆடவைப்பதும் அமெரிக்காவின் கைகளில் தங்கியுள்ளது. இலங்கை தனக்கு அடி பணிய மறுத்தால் மறு கணமே, போர் குற்ற விசாரணைகளை அது துரிதப்படுத்தும் என்பதுல் ஜயமில்லை. ஆனால் தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு நாள் சீன வல்லாதிக்கத்திடம் மூக்கு உடைபடுவது நிச்சயம்.

Comments