சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்குள் வந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள 32 வயதுடைய தமிழர் ஒருவரை கனடா நாடு கடத்தவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. பல வருடங்களின் பின்னர் இலங்கையர் ஒருவரை கனடா நாடுகடத்தவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும். இவர் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்து இருந்தார் என அவரே வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இவர் கடல் புலிகளில் இருந்ததாக அறியப்படுகிறது. விடுதலைப் புலிகளை கனேடிய அரசு பயங்கரவாதப் பட்டியலில் இட்டுள்ளது. அதனால் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற ரீதியில் அவருக்கு அரசியல் தஞ்சம் கொடுக்காமல் அவரை இலங்கைக்கு திருப்பியனுப்ப கனடா முடிவெடுத்துள்ளது.
இதனை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கும் தோல்வில் முடிவடைந்துள்ளது. இந் நிலையில், விடுதலைப் புலிகளின் கீள் மட்ட உறுப்பினராக இருந்த குறிப்பிட்ட இந்த நபரால் கனடாவின் பாதுகாப்புக்கு பங்கம் வருமா என கனேடிய தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாலப்பிள்ளை அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார். பிரஸ்தாப நபரை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவருக்கு உயிராபத்து இருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந் நிலையில் அவரால் நீதி மன்ற முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாமல் இருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த விடையத்தில் கனேடிய தமிழ் காங்கிரஸ் தலையிட்டு, அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதைத் தடுக்கவேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது

Comments