![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2Y9-AM9zfE7fl1KPTOFHTEU3XXOGat-KfdBNtT3qMleHkYkRR8CY9c2wHM60I1XMhcadNedP_-8WFCkgsZMnLO_tl89mPdNWUPnVg6rsthXKjwtC0L-12zep1TVp14oh0qOBIbI3Yq962/s400/indian+army-vannai.jpg)
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
![[VanniMay262009.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmjOmUpuQjs3NXbQEghlLHcd-82T0U2WhXpJCUZOL7KLXCvnssd3vVqPoDnCK3DuV8dBm4Zi8pyXKqzAL6NOHcJYOncW2SxBHXzQm2EoM4ZdKF8TpCowt_5iY3SiDXgsjWH4OBYVIThPyO/s1600/VanniMay262009.jpg)
வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில அவ்விணையத்துக்கு கிடைத்திருக்கிறது என்றும்,அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
![](http://www.tamilwin.org/photos/full/2009/04/6_04_2009_1.jpg)
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
Comments