வெலிக்கந்தை சிறை முகாமில் இன்றும் ஒரு போராளி மர்மமான முறையில் மரணம்?அல்லது கொலையா?

[Sri-Lanka-Reuters.jpg]புனர்வாழ்வென்ற பெயரில் சித்திரவதை சிறை முகாம்களை அமைத்து அங்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு கடுமையான சித்திரவதைகளை செய்துவரும் சிங்கள காடைய ராணுவத்தினர் இன்றும் ஒரு போராளியின் மரணத்துக்கு காரணமாகவோ அல்லது இந்த கொலையையே திட்டமிட்டு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்றுவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான கிளிநொச்சியை சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26வயது)என்ற போராளியே தான் சிகிச்சை பெற்று வந்திருந்த அறையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்மமான முறையில் மரணித்திருந்தார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.

இதே போல் நேற்றும் கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த நியூட்டன் என்ற போராளி வவுனியா பம்மை மடு சிறை முகாமில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று அரச ஊடகங்களும் அரச ஆதரவு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அதிலும் இன்னும் மர்மம் தொடர்வதாகவே நாம் கருதுகிறோம்.

விடுதலை கோரிய போராளி விரக்தியில் தற்கொலை??-வவுனியா சிறை முகாமில் சம்பவம்

Comments