இலங்கைச் சிறைச்சாலையில் இன்னும் சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும், அங்கே காரணம் இன்றி பல ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லை, மற்றும் 1973ம் ஆண்டு முதல் இலங்கை அவசரகால சட்டத்தின் கீழ் இயங்கிவருவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளதோடு, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து காணொளியாக வெளியிட்டுள்ளது. இத் தகவல்கள் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Comments