புலிகளுக்கு ஆதரவு தவறல்ல- சென்னை உயர்நீதி மன்றம்

விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்துப் போராட்டம் நடாத்தலாம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து கையெழுத்துப் போராட்டம் நடாத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துரிமை இயக்கம் எனும் அமைப்பின் சார்பில் புகழேந்தி தங்கராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே பிரஸ்தாப தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கமொன்றுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றம் இல்லையென்று பொடா சட்டத்தின் கீழான வழக்கொன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் நடாத்துவதில் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறு கையெழுத்து இயக்கம் நடாத்த தமிழ்நாடு காவல்துறை விடுத்திருந்த தடைஉத்தரவையும் நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.

Comments