மாவீரர்களை விற்று விளம்பரம் தேடும் இணையங்கள்

ஈழதேசம் இணையம் அண்மையில் நாம் வெளியிட்ட மாவீரர் படத்தினை எமது பெயரை நீக்கி விட்டு தமது பெயரை இட்டு தமக்கு விளம்பரம் இட்டிருக்கும் ஈனச்செயலை என்ன என்று சொல்லுவது ?

வன்னி ஒன்லைன் வலைப்பூ அதிர்வு, நெருடல், மீனகம்,ஈழதேசம் போல்
நாம் எமது பெயரை பொதுவாக இடுவதில்லை அப்படி இட்டாலும் இவர்கள் போல் குறுக்காக இட்டு மற்றவர்கள் பாவிப்பதற்கு இடையூறாக இருப்பதையும் விரும்பவில்லை

நாம் தயாரிக்கும் மாவீரர் அல்லாத படங்களில் ஒரு மூலையில் குறுக்காக முகத்திற்கு மேல் அல்லாமலும் , காணொளியில் சில செக்கன் எமது பெயரை இட்டுக்கொள்வதும் இது போன்ற வியாபாரிகளிடமிருந்து காப்பற்றிக் கொள்ளுவதற்காகவே

பலருக்கு சென்றடைய வேண்டும் என்பதே எமது நோக்கம் எமது இணையத்திற்கு இணைப்புக் கொடுக்கவோ பெயர் இடவோ தேவையில்லை ஆனால் அதை நீக்கி விட்டு உங்கள் பெயரை இடும் ஈனச்செயலில் ஈடுபடுவதைத் தான் நாம் கண்டிக்கின்றோம்

இவர்களின் இந்த ஈனச்செயலைப் பார்த்து விட்டுத் தான் ஈழமறவர், ஈழவர்குரல் இணையங்களை பிரதி செய்வதை தடைசெய்யும் வகையில் மாற்ற வேண்டி வந்தது அதைப் பார்த்து பிரதி செய்து வெளியிடும் மீனகம் இணையம் இப்போது தாமும் அப்படிச் செய்திருக்கின்றது

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் ஆடுவது போல் இருக்கின்றது


ஆனால் இதில் நாம் இடவேண்டியதிற்கு இரண்டும் காரணங்கள் இருந்தது

ஒன்று
இந்த மாவீரர் வீரச்சாவு தேதி இரண்டாக இருந்தது ஒன்றில் 15.02.2009 இன்னொன்றில் 10.03.2009 ஆகவும் இருந்தமை

இரண்டு
இந்த வீரவணக்க படவடிவம் புலிகளால் வெளியிடப்படும் படிவத்திலிருந்து தயாரிக்கப்பட்டது இது புலிகளினால் வெளியிடப்படவில்லை என்று காட்டுவதற்கும் அதில் எமது பெயரை இட்டிருந்தோம்

ஆனாலும் பிரிகேடியர் தமிழேந்தியின் 1ம் ஆண்டு நினைவில் இவர்கள் எல்லாம் எங்கிருந்தார்கள் இந்த இணையங்கள் எவையும் வீரவணக்கம் அனுட்டிக்கவுமில்லை

அப்போது இந்த மாவீரர் விற்பனைக்கு விடப்படவில்லையா ? இப்போது தான் விலைக்கு வாங்கினார்களோ தெரியவில்லை


அதிலும் நாம் 15.02.2209 என்று 2010 தமிழ்த்தாய் நாட்காட்டியிலிருந்து அந்தத் தேதியை இட்டிருந்தோம் ஈ அடித்தான் கொப்பி போல் 10.03.2009 என்று எழுதி விட்டு அப்படியே தமது பெயரை இட்டு வெளியிட்டு விளம்பரம் தேடுகின்றார்கள்

அல்லது இந்த மாவீரர் இந்த இணையத்தினால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றாரா ?

http://meenakam.com/wp-content/uploads/2011/03/brigadier_thamilenthi.jpg
http://meenakam.com/wp-content/uploads/2011/02/maj_kedills.jpg
வழக்கமாக பெயரை எல்லாவற்றிலும் தமது பெயரை இட்டு மாவீரரை கொள்முதல் செய்யும் மீனகம் இம்முறை அதை திருத்தி வெளியிட்டிருக்கின்றது ஆனால் தமது பெயரை இடவில்லை

வன்னி ஒன்லைன் என்னும் வலைப்பூவும் இதை குட்டையில் ஊறிய மட்டை தான் அது இம்முறை வன்னிரியூப் என்னும் இணையத்திற்கு விளம்பரம் தேடும் விதத்தை கீழே பாருங்கள்

பொதுவாக காணொளி தயாரிப்பவர்கள் ஆரம்பத்தில் அல்லது முடிவில் தமது பெயரை இடுவார்கள்


http://www.pulikal.net/2011/03/blog-post_347.html

ஆனால் இந்தக் காணொளியில் தளபதி தீபனை விட விளம்பரம் தான் அதிக நேரத்தை பிடிக்கின்றது அதுவும் இடையில் பல தடவை வந்து போகின்றது

இது தான் முதல் தடவையாக இப்படி விளம்பரம் தேடி வந்திருக்கும் மாவீரரை விற்றுப் பிழைக்கும் ஒரு காணொளி

புலிகள் சம்பந்தமான காணொளிகளுக்கும் படங்களுக்கு இப்போது தட்டுப்பாடு நிலவுகின்றது அதை இவர்கள் போன்றவர்களின் சுய நலனுக்கு பாவிப்பதை தமிழ் மக்கள் , அமைப்புக்கள் கண்டிக்க வேண்டும்

இது குறித்து நாம் முன்பு எழுதியது

புலிகளின் படங்களின் மேல் இணைய பெயர் பொறிப்பது தகுமா ?

வணக்கம் விளம்பரதாரிகளே !

சில இணையங்கள் புலிகளின் படங்களில் தமது பெயர் பொறிப்பதன் மூலம் எதை சாதிக்க முற்படுகின்றார்கள் !!!

பல இணையங்கள் இப்படி நடந்து கொண்டிருக்கின்றன ! இது ஒரு உதாரணத்திற்கே சில காட்டப்பட்டிருக்கின்றது

பெயர் பொறிக்கப்படாதது கிழே

மீனகம்


சங்கதி பழையது
maaveerarkal
புலிகளின் படங்கள் பெரும்பாலும் போராளிகளாலேயே எடுக்கப்பட்டவை அவை புலிகளால் வெளியிடப்படும் போது மட்டுமே ஊடகங்களுக்கு கிடைக்கின்றன

அப்படியிருக்கும் போது

இவர்களோ அல்லது இவர்களது நிருபர்களோ படத்தை எடுத்திருந்தால் கூடப் ஒரு மூலையில் போடலாம் ஆனால் குறுக்காகப் போட்டு

முத்திரையை ரத்து செய்வது போல் தமது இணைய பெயர்களை இட்டு புலிகளை இழிவு படுத்துகின்றார்கள் !



அல்லது வேறு எவரும் பாவிக்கக் கூடாது என்ற வகையில் செய்வது தகுமா ?

அல்லது தமது இணையங்களை விளம்பரப்படுத்துவதற்காகவா இப்படிச் செய்கின்றார்கள் ?

சிலர் இப்படங்களை வடிவமைத்து மாற்றங்கள் செய்ய விரும்புவார்கள் அவற்றுக்குக் கூட இது இடைஞ்சலாக இருக்கும்

அப்படி வடிவமைக்கும் படங்களிலிலோ அல்லது காணொளியிலோ தமது உழைப்பை காட்டுவதற்கு ஒரு மூலையில் தான் போடுவார்கள் இப்படி குறுக்காகப் போட்டு வீணடிக்க மாட்டார்கள் !!

இதில் யாரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது குத்திக் காட்டுவதற்காகவோ அல்ல !

எமக்கு சரியாகப் படுவது உங்களுக்கு தவறாகப் படலாம் ! அல்லது மறுதலையாகவும் பொருந்தும் !

இதை இந்த இணையங்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றோம் !!

நன்றிகள்

Comments