தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி முறிவிற்கு தொகுதிப் பங்கீடு காரணமல்ல என்றும், மக்களை ஏமாற்றவும் திசை திருப்பவும் நடத்தப்படும் நாடகம் என்றும் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து விலகி, வெளியிலிருந்து பிரச்னை அடிப்படையில் ஆதரவு தரப்போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு 63 தொகுதிகளை அதுவும் தாங்கள் விரும்பும் தொகுதிகளை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்பந்தித்ததின் விளைவே இது என அவர் கூறியிருப்பது நம்பத்தகுந்ததாக இல்லை. 60 தொகுதிகளை விட்டுத்தர முன்வந்தவர் மேலும் 3 தொகுதிகளைத் தருவது பெரிதல்ல.
ஏற்கனவே 1980ஆம் ஆண்டில் காங்கிரசுக்கு 112 தொகுதிகளை வாரித் தந்தவர் கருணாநிதியே. எனவே, தி.மு.க - காங்கிரஸ் உறவு கசந்ததற்குத் தொகுதிப் பிரச்சனை காரணமாக இருக்க முடியாது. மக்களை ஏமாற்றவும் திசை திருப்பவும் இந்த நாடகம் ஆடப்படுகிறது.
சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.கவைச் சேர்ந்த ராசா செய்ததன் மூலம் காங்கிரசும் கூட்டணிக் கட்சிகளும், பெரும் தலைக்குனிவிற்கு ஆளானதோடு, எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்படும் அவலத்தையும் சந்திக்க நேர்ந்தது.
காங்கிரஸே நினைத்தாலும் இந்த ஊழலில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற இயலாத வகையில் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் மத்திய புலனாய்வுத் துறை செயல்படுகின்றது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரின் தலைக்கு மேல்தொங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் கத்தியிலிருந்து தப்புவதற்கு கருணாநிதி கையாளும் மிரட்டல் தந்திரமே இது.
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தி.மு.க.வைப் பொறுப்பாளியாக்கி, தான் தப்ப காங்கிரஸ் நினைக்கிறது. ஈழத் தமிழர் படுகொலையினால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் காங்கிரஸுடன் கொண்டுள்ள உறவைத் துண்டிப்பதன் மூலம் தான் கரையேறலாம் என தி.மு.க கருதுகிறது. இரண்டு கட்சிகளுமே ஒன்றையொன்று சுமையாகக் கருதுகின்றன.
1996 சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்த போது காங்கிரஸை பிளவுபடுத்தி, தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கி தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் கருணாநிதி. கட்சிகளைப் பிளவுபடுத்தும் கலையில் வல்லவரான அவர் இப்போதும் அதைச் செய்வார். ஆனால் இம்முறை மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்று பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments